அய்யனார் துணை சீரியல் மார்ச் 26 எபிசோட்: சோழன் ஹனி மூனுக்கு பிளான் போடும் தம்பி.. அய்யனார் துணை சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அய்யனார் துணை சீரியல் மார்ச் 26 எபிசோட்: சோழன் ஹனி மூனுக்கு பிளான் போடும் தம்பி.. அய்யனார் துணை சீரியல்

அய்யனார் துணை சீரியல் மார்ச் 26 எபிசோட்: சோழன் ஹனி மூனுக்கு பிளான் போடும் தம்பி.. அய்யனார் துணை சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published Mar 26, 2025 03:51 PM IST

அய்யனார் துணை சீரியல் மார்ச் 26 எபிசோட்: சோழனின் கல்யாணத்தை பற்றிய உண்மை தெரியாததால், அவனுக்கு ஹனிமூன் போக ஏற்பாடு செய்ய வேண்டும் என அவனது தம்பி கூறி வருகிறான்.

அய்யனார் துணை சீரியல் மார்ச் 26 எபிசோட்: சோழன் ஹனி மூனுக்கு பிளான் போடும் தம்பி.. அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை சீரியல் மார்ச் 26 எபிசோட்: சோழன் ஹனி மூனுக்கு பிளான் போடும் தம்பி.. அய்யனார் துணை சீரியல்

வீட்டை விட்டு போக வேண்டாம்

பின் குளித்து முடித்துவிட்டு வந்த நிலாவிற்கு டீ போட்டு கொடுத்து, ரிசப்ஷனில் வந்து நின்றதற்காக நன்றி சொன்னான். இனி உன்ன எந்த தொந்தரவும் செய்ய மாட்டோம். உன் முடிவுக்கு துணையாக நிற்போம். ஆனா நீ மனசு மாறி இங்கயே இருந்தாலும் எனக்கு ரொம்ப சந்தோஷம் தான் என சொன்னார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நிலா, என்னால எவ்வளவு சீக்கிரம் இந்த வீட்ட விட்டு போக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கிளம்பிடுவேன் என சொன்னதும் சேரனுக்கு கோபம் வந்தது.

சங்கடத்தில் நிலா

சேரனின் வார்த்தைகள் நிலாவிற்கு சங்கடத்தை ஏற்படுத்திய நிலையில், அவள் வீட்டிற்குள் செல்லாமல் வாசலிலேயே அமர்ந்திருந்தாள். அப்போது நடேசன் தூங்கி எழுந்ததும் செய்த வேலைகள் எல்லாம் நிலாவிற்கு அறுவறுப்பை கொடுத்ததால் எப்படியாவது சீக்கிரம் இந்த வீட்டை விட்டு கிளம்ப வேணும் என துடிக்கிறாள்.

நிலாவை கடுப்பேற்றிய சோழன்

அந்த சமயம் பார்த்து சோழன் தூங்கி எழுந்து வர, நிலாவை கூட்டிக் கொண்டு பார்க், பீச், மால் என வெளியே போக திட்டம் போட்டு வருகிறான். இதைக் கேட்ட நிலா ஆத்திரம் தாங்காமல் கத்த ஆரம்பித்துவிட்டாள். நான் என்ன இங்க பிக்னிக் வந்திருக்கேனா எனக் கேட்டு என்னை இன்னைக்கே ஹாஸ்டல் பாக்க கூட்டிட்டு போகனும் என ஆர்டர் போட்டாள்.

இந்த உதவியை தவிர எனக்கு வேறு எந்த உதவியும் வேண்டாம். எனக்கு இந்த வீட்டில இருக்க அறுவறுப்பாவும் கூச்சமாவும் இருக்கு என கத்த ஆரம்பிக்கிறாள். சோழன் ஒரு 4 நாளுக்கு பின் ஹாஸ்டல் பாக்கலாம் என சொல்லியும் கேட்டபாடில்லை.

ஹனி மூன் பிளான்

இதையடுத்து சோழன் நிலாவைக் கூட்டிக் கொண்டு ஹாஸ்டல் பார்க்க போனது தெரியாமல், பல்லவன் அவர்களைப் பற்றி சேரனிடம் விசாரிக்கிறான். பின், சோழனையும் நிலாவையும் ஹனி மூனுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதை நீ தான் செய்ய வேண்டும் என சேரனிடம் சொல்கிறான். அதற்கு சேரன் பிடிகொடுத்து பேசாமல் இருந்ததால், மீண்டும் மீண்டும் அதுபற்றியே பேசுகிறான். இதனால் கடுப்பான சேரன், அந்த கோபத்தை பல்லவனிடம் காட்ட முடியாமல் வேலைக்கு வந்தவர்களிடம் காட்டுகிறான்.

ஹாஸ்டலில் நிலா

இன்னொரு பக்கம், நல்ல ஹாஸ்டலாக தேடி பிடிச்சு நிலாவை சோழன் கூட்டிப் போகிறான். அப்போது, நிலாவிடம் இது உங்க ஹஸ்பெண்ட்டா என கேட்டதும் சோழன் உடனே ஆமாம் என சொல்கிறான். ஹாஸ்டலில் தனியா ரூம் வேண்டும் என நினைத்த நிலா பொருளாதார நெருக்கடியால், ஷேரிங் ரூமிற்கு ஓகே சொல்கிறாள். இதையடுத்து அவள் ஹாஸ்டல் சென்றாளா, சோழனுடனே தங்கினாளா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், விடியல் தொலைக்காட்சி, ஈ டிவி பாரத், வே 2 நியூஸ், ஆதன் தமிழ் மீடியா ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.