அய்யனார் துணை சீரியல் மே 23 எபிசோட்: சேரனுக்காக கார்த்திகா வீட்டின் கதவை தட்டும் நிலா.. அய்யனார் துணை சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அய்யனார் துணை சீரியல் மே 23 எபிசோட்: சேரனுக்காக கார்த்திகா வீட்டின் கதவை தட்டும் நிலா.. அய்யனார் துணை சீரியல்

அய்யனார் துணை சீரியல் மே 23 எபிசோட்: சேரனுக்காக கார்த்திகா வீட்டின் கதவை தட்டும் நிலா.. அய்யனார் துணை சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published May 23, 2025 05:46 PM IST

அய்யனார் துணை சீரியல் மே 23 எபிசோட்: சேரன் கார்த்திகாவை நினைத்து வருத்தப்படுவதை அறிந்த நிலா, அவருக்காக கார்த்திகா வீட்டிற்கு பேச சென்றுள்ளார்.

அய்யனார் துணை சீரியல் மே 23 எபிசோட்: சேரனுக்காக கார்த்திகா வீட்டின் கதவை தட்டும் நிலா.. அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை சீரியல் மே 23 எபிசோட்: சேரனுக்காக கார்த்திகா வீட்டின் கதவை தட்டும் நிலா.. அய்யனார் துணை சீரியல்

சேரனால் கோபமான பெண்

அதன் மூலம் நகைக் கடையில் வேலை செய்யும் பெண் ஒருவரை பெண் பார்க்க சென்றனர். அந்தப் பெண்ணுக்கும் சேரனைப் பிடித்துப் போனதால் அவரிடம் பேச அடிக்கடி போன் செய்துள்ளார். ஆனால், சேரனே குடும்பத்தை பற்றியும் சமையல் செய்வது பற்றியும், கட்டட வேலை செய்வது பற்றியுமே பேசிப் பேசி அந்தப் பெண்ணை கோபமடையச் செய்துள்ளார்.

முக்கிய முடிவெடுத்த பெண்

இதனால், அந்தப் பெண்ணுக்கு தலைவலியே வந்துவிட்டது. முதல் நாள் தான் இப்படி இருக்கும் என நினைத்து அடுத்த நாளும் போன் செய்து பார்த்துள்ளார். அப்போதும் தன் வேலையை பற்றியும் வீட்டில் பிடித்தவர்களுக்கு எப்படி பக்குவமாக சமைப்பது என்பது பற்றியுமே பேசினார். இதனால் பொறுமை இழந்த அந்தப் பெண் ஒரு முக்கிய முடிவை எடுத்தாள்.

சேரன் எனக்கு வேண்டாம்

சேரனால் தன்னை சந்தோஷமாக வைத்துக் கொள்ள முடியாது. தன்னைப் பற்றி யோசிக்கவே தெரியாது என்பதை புரிந்து கொண்ட அந்தப் பெண், தனக்கு சேரனை பிடிக்கவில்லை என அவளது வீட்டில் சொல்லிவிட்டாள். ஆனால், இதனை அந்தப் பெண்ணின் பெற்றோர் எப்படி நிலாவிடமும் குடும்பத்தினரிடமும் சொல்வது எனத் தெரியாமல் தவித்தனர். இதனால், அந்தப் பெண்ணே நிலாவுக்கு போன் செய்து நடந்ததை எல்லாம் கூறி கல்யாணம் வேண்டாம் எனக் கூறினாள்.

கோவப்பட்ட தம்பிகள்

இதைக் கேட்ட சேரனின் தம்பிகள் அனைவரும் சேரன் மீது கோபப்பட்டனர். ஒரு பொன்னுகிட்ட கூட பேசத் தெரியல. எப்படி அவரு மட்டும் இந்த மாதிரி இருக்காரு. ஒரு பொன்னுகிட்ட சமைக்குறத பத்தி பேசிட்டு இருந்தா அந்த பொன்னு கல்யாணத்துக்கு எப்படி ஓகே சொல்லும் என கத்தினர். இதை எல்லாம் பார்த்த நிலா, இதுதான் சேரன் அண்ணன்.இந்த கேரக்டரை ஏத்துக்குற பொன்னு அண்ணனை கல்யாணம் பண்ணிகிட்டா போதும். நான் சேரன் அண்ணனுக்காக வேற பொன்ன பாக்குறேன் என்றாள்.

கார்த்திகாவுக்கு ஆதரவாக நிற்கும் நிலா

முன்னதாக, நிலா பல்லவனோடு கோயிலுக்கு போன போது கூட அவனிடமும் சோழனிடமும் கார்த்திகாவை தான் உங்க அண்ணனுக்கு பிடிச்சிருக்கு. அவளோட கல்யாணம் பண்ணி வைங்க என கெஞ்சினாள். ஆனால், கார்த்திகாவையும் அவளது வீட்டையும் குறை சொல்லிவிட்டு பல்லவனும் சோழனும் இந்த கல்யாணம் நடக்காது என தெளிவாக கூறினர்.

தீர்க்கமான முடிவெடுத்த நிலா

இருந்தாலும் மனது கேட்காத நிலா, நடக்கும் எல்லாவற்றையும் வைத்து பார்த்து, கார்த்திகா தான் சேரனுக்கு ஏற்ற ஜோடி என தெரிந்து அவளையே சேரனுக்கு கல்யாணம் செய்து வைக்க தயாரானாள். இதையடுத்து நிலா நேராக கார்த்திகா வீட்டிற்கு சென்று அவளது பெற்றோரிடம் பேசினாள். நான் 3 மாசம் அந்த வீட்டில் தான் இருக்கிறேன். அவங்க எல்லோரும் நல்லவங்க என நிலா நடேசனுக்கும் அவனது குடும்பத்திற்கும் சர்ட்டிபிகேட் கொடுத்துக் கொண்டிருக்கிறாள்.