அய்யனார் துணை சீரியல் ஜூன் 23 எபிசோட்: காலை கட்டிய சேரன்.. பல்லவன் சொன்ன பதில்..சோழனிடம் நெருங்கும் நிலா!
எல்லோரும் பல்லவனிடம் பேசிக் கொண்டிருக்க, பல்லவன் இனிமேல் இதுபோல நான் செய்ய மாட்டேன் என்று அனைவருக்கும் உறுதி கொடுத்தான். நிலா பல்லவனை கண்டித்தாள்.

அய்யனார் துணை சீரியலின் இன்றைய எபிசோடில் பல்லவனை சேரனும் சோழனும் நிலா சொன்னதை வைத்து கண்டுபிடித்து விட்டார்கள். சேரன் அழுவதை பார்த்த பல்லவன் இனிமேல் இதுபோல வீட்டை விட்டு செல்ல மாட்டேன் என்று உறுதியாக கூறினான். சோழனும் பல்லவனை சமாதானப்படுத்த எல்லோரும் அழுதனர். இந்த நிலையில் வீட்டிற்கு கிளம்பலாம் என்று மூவரும் கிளம்பினர்.
பாட்டுக்கேட்ட நடேசன்
பாண்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட, வீட்டில் பாண்டி பாண்டியும் நிலாவும் பல்லவனை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருந்தனர். ஆனால், நடேசன் இதை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் பாட்டு கேட்டுக் கொண்டு இருந்தார். இதில் கடுப்பான பாண்டி அவர் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த ரேடியோ பெட்டியை தட்டி விட்டான். ஆனால், அவர் அதற்கும் சளைக்கவில்லை. மீண்டும் பாடலை போட்டு ராகம் பாடி கொண்டிருந்தார்.
இதை பார்த்த நிலா என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தாள். இன்னொரு பக்கம் பல்லவன் வீட்டிற்குள் வர பாண்டி அவனைக் கட்டிப்பிடித்து, இனிமேல் இதுபோல் செய்தால் கொன்று விடுவேன் என்று கூறி அழுதான். ஆனால், அப்பொழுதும் நடேசன் பாட்டு கேட்பதை நிறுத்தவில்லை. இதையடுத்து மீண்டும் பாண்டி அவரிடம் சண்டைக்குச் செல்ல, சோழன் அவர்தான் அப்படித்தான் என்று தெரியும் அல்லவா விட்டுவிடு என்று கூறினான்.