அய்யனார் துணை சீரியல் மார்ச் 21 எபிசோட்: தவிக்கும் சோழன்.. தண்ணி காட்டும் நிலா.. அய்யனார் துணை சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அய்யனார் துணை சீரியல் மார்ச் 21 எபிசோட்: தவிக்கும் சோழன்.. தண்ணி காட்டும் நிலா.. அய்யனார் துணை சீரியல்

அய்யனார் துணை சீரியல் மார்ச் 21 எபிசோட்: தவிக்கும் சோழன்.. தண்ணி காட்டும் நிலா.. அய்யனார் துணை சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published Mar 21, 2025 10:57 AM IST

அய்யனார் துணை சீரியல் மார்ச் 21 எபிசோட்: சோழன் எவ்வளவு கெஞ்சியும் என்ன நடந்தாலும் தன்னால் ரிசப்ஷனுக்கு வர முடியாது என நிலா முரண்டு பிடிக்கிறாள்.

அய்யனார் துணை சீரியல் மார்ச் 21 எபிசோட்: தவிக்கும் சோழன்.. தண்ணி காட்டும் நிலா.. அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை சீரியல் மார்ச் 21 எபிசோட்: தவிக்கும் சோழன்.. தண்ணி காட்டும் நிலா.. அய்யனார் துணை சீரியல்

கெஞ்சி தவிக்கும் சோழன்

இந்நிலையில், தன் அண்ணனின் நிலையையும், கூடி நிற்கும் ஊர்காரர்களை நினைத்து பீதியும் அடைந்து நிற்கிறான். இதனால், நிலாவிடம் தொடர்ந்து வந்து கெஞ்சிக் கொண்டிருக்கிறான். ஆனால், நிலா மனம் இறங்கி வருவதாகவே இல்லை. அண்ணனும் தம்பிகளும் திரும்ப திரும்ப வந்து, ரெடி ஆகிட்டிங்களா என கேட்கும் போதெல்லாம் சோழன் தவிக்கிறான்.

சோழன் - நிலா கல்யாண வீடியோ

இதற்குள்ளாக, நிலா, அவருடைய குடும்பத்தை எதிர்த்து சோழனை எப்படி திருமணம் செய்து கொண்டார் என்ற வீடியோ செய்தியாக வெளியாகத் தொடங்கியது. இதை எல்லாம் பார்த்த ஊர்காரர்கள் நிலா உண்மையாகவே பெரிய இடத்து பெண் தான். இந்த சோழன்கிட்ட என்ன இருக்குன்னு இவன நம்பி இங்க ஓடிவந்து கல்யாணம் பண்ணிருக்கா என முனுமுனுத்துக் கொண்டிருந்தனர்.

பெருமைபடும் தம்பிகள்

இந்த வீடியோ வெளியானதை பாண்டியனும் பல்லவனும் பார்த்து பூரிப்படைந்தனர். தன் அண்ணனின் காதல் எப்படிப்பட்டது என அவர்கள் இருவரும் சேர்ந்து பெருமையாக பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, இந்த ரிசப்ஷனுக்கு எப்படியும் நிலாவை சம்மதிக்க வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில், சோழன் குளித்துவிட்டு ரிசப்ஷனுக்கு தயாரானான்.

உறுதியாக இருக்கும் நிலை

ஆனால். நிலா உள்ளே வீட்டில் உள்ள அத்தனை பேரிடமும் இந்த கல்யாணம் குறித்த உண்மையை சொல்லப் போவதாகவும் இதனால் என்ன பிரச்சனை வந்தாலும் அதை தாங்கிக் கொள்வேன். ஆனால், பொய்யாக நடிக்க மாட்டேன் என்றும் முடிவெடுத்து உறுதியாக இருந்தாள்.

அசிங்கப்படுத்தப்படும் கார்த்திகா

அந்த சமயத்தில், வீட்டில் உள்ளவர்கள் திட்டினாலும் பரவாயில்லை என கார்த்திகா சோழன் ரிசப்ஷனுக்கு வருகிறாள். அப்போது, நிலாவிற்கு ரெடியாக உதவி செய்ய ரூமிற்கு சென்று பேச்சு கொடுக்க, கோபத்தில் இருந்த நிலா கார்த்திகாவை திட்டி அனுப்புகிறார். இதுபற்றி எதுவும் தெரியாத கார்த்திகா சேரனிடமும் சோழனிடமும் நடந்ததை கூறுகிறாள்.

இந்த நிலையில், நிலா ரிசப்ஷனுக்கு தயார் ஆவாளா? சேரனுக்கு இவர்கள் கல்யாம் குறித்த உண்மை தெரியுமா? கூடி இருக்கும் மக்களின் அடுத்த பேச்சு என்ன என்பதை நாளை பொறுத்திருந்து பார்க்கலாம்.

சண்டை போட்ட சோழன்

முன்னதாக, உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என நினைத்து தான் இதை எல்லாம் செய்தோம். ஆனா உங்க மனநிலை இப்படி இருக்கும்ன்னு நெனைக்கல என நிலாவிடம் சமாதானம் சொல்லி அவருடைய அப்பா பற்றி விசாரித்தனர் அண்ணன் தம்பிகள் அனைவரும்.

பின், எதுவும் பேச முடியாமல் கோபத்தில் நிலா ரூமுக்குள் செல்ல, இந்த ஏற்பாட்டை எல்லாம் செய்ததற்காக அண்ணன் சேரனை சோழன் திட்டினான். இதனால், சேரன் முகம் மாறுவதை பார்த்த பாண்டியன் சோழனிடம் சண்டைக்கு வந்தான். இதனால், சோழனுக்கும் பாண்டியனுக்கும் இடையே கைகலப்பு நடந்தது.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், 2017ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். காட்சி (விஷூவல்), டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பெரியார் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்ற இவர், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். தமிழ் இந்துஸ்தான் டைம்ஸ் தளத்தில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சினிமா, புகைப்படத்தொகுப்பு சார்ந்த செய்திகளில் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.