அய்யனார் துணை சீரியல் ஜூன் 21 எபிசோட்: தொலைந்து போன பல்லவன்! - கண்கலங்கிய சேரன்!
அய்யனார் துணை சீரியல் ஜூன் 21 எபிசோட்: நிலாவிற்கு தான் சோகமாக இருந்தால் ஈசிஆர் பக்கத்தில் உள்ள கடற்கரைக்குச் செல்வேன் என்று பல்லவன் கூறியது ஞாபகத்திற்கு வந்தது. இந்த நிலையில் சோழனிடம் இது குறித்து சொல்ல, சோழனும் சேரனும் அங்கு சென்றனர்.

அய்யனார் துணை சீரியலில் தான் வேறு தாய்க்கு பிறந்தவன் என்பது பல்லவனுக்கு தெரிந்து விட்டது. இதனால் வீடே சோகமாக இருந்தது. இதற்கிடையே பல்லவன் நெடுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பயந்து போன சேரன் சோழன் பாண்டியன் என அனைவரும் மூலை முடுக்கெல்லாம் அவனை தேடி அலைகிறார்கள்.ஆனால் எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை.
இதனால், ஒரு கட்டத்தில் மனம் உடைந்த சேரன் அழவே ஆரம்பித்து விட்டார். இன்னொரு பக்கம் நிலாவும் போன் செய்து பல்லவன் கிடைத்து விட்டானா என்று கேட்டுக்கொண்டே இருக்க, சோகம் நெஞ்சை அடைத்தது.
அலட்சியமாக பேசிய அப்பா
இதற்கிடையே வீட்டிற்கு அப்பா வந்தார். அவரைப் பார்த்த நிலா பல்லவன் இன்னும் வீட்டிற்கு வரவில்லை. என்னவென்று தெரியவில்லை எனக்கு பயமாக இருக்கிறது என்று கூறினாள். அதற்கு நடேசன் இங்கேதான் எங்கேயாவது சுற்றிக் கொண்டிருப்பான். வீட்டிற்கு வந்து விடுவான் என்று அலட்சியமாக பேச, கடுப்பான நிலா நான் எவ்வளவு சீரியஸாக பேசிக் கொண்டிருக்கிறேன்.