அய்யனார் துணை சீரியல் மார்ச் 19 எபிசோட்: முரண்டு பிடிக்கும் நிலா.. முட்டி மோதும் சகோதரர்கள்.. அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை சீரியல் மார்ச் 19 எபிசோட்: தனக்கும் நிலாவுக்கும் ரிசப்ஷன் ஏற்பாடுகளை செய்த சகோதரர்களிடம் சோழன் சண்டைக்கு நிற்கிறான்.

அய்யனார் துணை சீரியல் மார்ச் 19 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், கல்யாண சர்ட்டிபிகேட் வாங்க போலீஸ் ஸ்டேஷன் சென்றபோதே நிலாவை சமாளிக்க முடியாமல் வாய்க்கு வந்த பொய்யை எல்லாம் அடித்து சமாளித்து கொண்டிருந்தான் சோழன். அந்த பிரச்சனை எல்லாம் இனி இருக்காது என வீட்டிற்கு வந்து இறங்குவதற்கு முன்பே சோழனுக்குள் பூகம்பமே வெடித்தது.
ஆட்டம் கண்ட சோழன்
ஊர் வாயை அடைக்க நினைத்து தன் அண்ணன், தம்பிகள் செய்த ஏற்பாட்டை பார்த்து ஆட்டம் கண்டான் சோழன். இதை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற கலக்கத்தை சமாளிக்க தெரியாமல், அவனது அண்ணன்களிடம் கோபமாய் கொட்டித் தீர்த்தான். கையில் இருக்கும் அத்தனை காசையும் கொட்டி சோழனுக்காக ஏற்பாடு செய்து, ஊர் முன் அசிங்கப்பட்டு வந்து நின்று கொண்டிருக்கும் இவர்களின் நிலையை அறியாமல், சோழன் கண்டபடி அனைவரையும் திட்டி வருகிறான்.
உண்மையை சொன்ன சோழன்
சோழன் செய்த காரியத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த 3 பேரும் என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றனர். பின், சேரனும், பல்லவனும் சோழனை எவ்வளவு சமாதானம் செய்ய முயன்றும் அவன் சமாதானம் ஆவதாக தெரியவில்லை. அப்போது, தான் நிலா இந்த கல்யாணத்தால் மிகவும் மன உளைச்சலில் இருப்பதாகவும், 2 நாள் திருவண்ணாமலையில் இருந்தும் எங்களால் நிலாவின் அப்பாவை பார்க்க முடியவில்லை என்றும் கூறி நிலைமையை எடுத்து சொன்னான்.
சண்டை போட்ட சோழன்
இதைக்கேட்டு வருத்தப்பட்ட சகோதரர்கள், உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என நினைத்து தான் இதை எல்லாம் செய்தோம். ஆனா உங்க மனநிலை இப்படி இருக்கும்ன்னு நெனைக்கல என நிலாவிடம் சமாதானம் சொல்லி அவருடைய அப்பா பற்றி விசாரித்தனர்.
பின், எதுவும் பேச முடியாமல் கோபத்தில் நிலா ரூமுக்குள் செல்ல, இந்த ஏற்பாட்டை எல்லாம் செய்ததற்காக அண்ணன் சேரனை சோழன் திட்டினான். இதனால், சேரன் முகம் மாறுவதை பார்த்த பாண்டியன் சோழனிடம் சண்டைக்கு வந்தான். இதனால், சோழனுக்கும் பாண்டியனுக்கும் இடையே கைகலப்பு நடந்தது.
தவிக்கும் நிலா
தன்னால் தான் இவ்வளவு பிரச்சனையும் நடக்கிறது என்த கோபம் ஒருபக்கம், சூழ்நிலையை சமாளிக்க செய்த கல்யாணம் இப்படி வினையாக வந்து நிற்கும் எனத் தெரியமால் தவிப்பு ஒருபக்கம் என நிலா தனக்குள் புலுங்கி்க் கொண்டிருக்கும் வேளையில், சோழன் இந்த கல்யாணம் செய்ய நடித்த மாதிரி, ஒரு 2 மணி நேரம் ரிசப்ஷனில் வந்து நின்று நடிக்குமாறு நிலாவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறான். ஆனால், நிலா முரண்டு பிடித்து வர மறுக்கிறாள்.

டாபிக்ஸ்