அய்யனார் துணை சீரியல் ஜூன் 17 எபிசோட்: வானதியிடம் வாயை விட்ட பாண்டி.. அதிர்ச்சியில் சேரன்.. சிரிப்பலையில் சோழன்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அய்யனார் துணை சீரியல் ஜூன் 17 எபிசோட்: வானதியிடம் வாயை விட்ட பாண்டி.. அதிர்ச்சியில் சேரன்.. சிரிப்பலையில் சோழன்

அய்யனார் துணை சீரியல் ஜூன் 17 எபிசோட்: வானதியிடம் வாயை விட்ட பாண்டி.. அதிர்ச்சியில் சேரன்.. சிரிப்பலையில் சோழன்

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 17, 2025 10:26 AM IST

அய்யனார் துணை சீரியல் ஜூன் 17 எபிசோட்: வானதி ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்க, பாண்டியன் அண்ணனுக்கு கல்யாணம் நின்று போனதையும், அவருக்கு அடுத்து எப்படி புதிய கல்யாணத்தை நடத்தி வைப்பது என்பது குறித்தும் யோசித்துக்கொண்டிருந்தாள்.

அய்யனார் துணை சீரியல் ஜூன் 17 எபிசோட்:  வானதியிடம் வாயை விட்ட பாண்டி.. அதிர்ச்சியில் சேரன்.. சிரிப்பலையில் சோழன்
அய்யனார் துணை சீரியல் ஜூன் 17 எபிசோட்: வானதியிடம் வாயை விட்ட பாண்டி.. அதிர்ச்சியில் சேரன்.. சிரிப்பலையில் சோழன்

வானதியிடம் கேட்ட கேள்வி

இந்த நேரத்தில் பாண்டியை பார்க்க வானதி அங்கு வந்தாள். அவள் பாண்டியனிடம் விஷயத்தை கேள்வி பட்டேன். மிகவும் வருத்தமாக இருந்தது. உங்கள் வீட்டில் ஒரு பெண் (நிலா) வந்துவிட்டார் என்பது குறித்து பேசியே நம்முடைய காதலுக்கு நான் வீட்டில் சம்மதம் வாங்கி வைத்திருக்கிறேன். ஆகையால், நம்முடைய கல்யாணத்திற்கு இனி பிரச்சினை வராது என்று நினைக்கிறேன் என்று கூறினாள்.

வானதி ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்க, பாண்டியன் அண்ணனுக்கு கல்யாணம் நின்று போனதையும், அவருக்கு அடுத்து எப்படி புதிய கல்யாணத்தை நடத்தி வைப்பது என்பது குறித்தும் யோசித்துக்கொண்டிருந்தாள்.

இந்த நிலையில் திடீரென பாண்டி வானதியிடம் உனக்கு எங்கள் வீட்டில் வந்து வாழ்வதற்கு சம்மதமா என்று கேட்க, வானதி பாண்டி தன்னுடைய காதலை ஒத்துக்கொண்டு விட்டான் என்ற சந்தோஷத்தில் துள்ளி குதித்தாள்.

நான் வாழ தயார்

அத்துடன் எனக்கு அதில் எந்தவித பிரச்சினையும் இல்லை; நான் வாழ தயார் என்று சொல்ல, பாண்டி அப்படியானால் நீ என்னுடைய அண்ணன் சேரனை திருமணம் செய்து கொள்கிறாயா என்று கேட்டுவிட்டான். இதைக் கேட்ட வானதி அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விட்டாள். தொடர்ந்து கோபப்பட்ட அவள் என்னை பார்த்து நீ எப்படி இப்படி பேசலாம்; உனக்கு என்னை பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என்று கூறி விடு. ஆனால் அதற்காக இப்படியெல்லாம் பேசாதே என்று பேசினாள்.

தொடர்ந்து கோபப்பட்டு சேரனின் வீட்டிற்கு வந்த அவள், எல்லோரிடமும் பாண்டி இப்படி பேசினான் என்பதை கூறினாள். இதைக் கேட்ட பல்லவனும் சோழனும் பயங்கரமாக சிரித்தனர். சேரன் வானதியை எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றான். ஆனால், வானதி கேட்கவில்லை கோபத்தோடு வீட்டை விட்டு வெளியேறி சென்றாள் அடுத்தநாள் பாண்டியிடம் பாண்டி பேசியது தவறு என்பதை அவனுக்கு புரிய வைத்தாள்.