அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 16 எபிசோட்: அட்வைஸ் செய்த நிலாவை அசிங்கப்படுத்தும் நடேசன்.. அய்யனார் துணை சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 16 எபிசோட்: அட்வைஸ் செய்த நிலாவை அசிங்கப்படுத்தும் நடேசன்.. அய்யனார் துணை சீரியல்

அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 16 எபிசோட்: அட்வைஸ் செய்த நிலாவை அசிங்கப்படுத்தும் நடேசன்.. அய்யனார் துணை சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published Apr 16, 2025 08:53 AM IST

அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 16 எபிசோட்: அடிக்கடி பீடி குடிப்பது தவறு என நிலா கூறியதைக் கேட்டு நடேசன் அவளை அசிங்கப்படுத்தி திட்டினான்.

அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 16 எபிசோட்: அட்வைஸ் செய்த நிலாவை அசிங்கப்படுத்தும் நடேசன்.. அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 16 எபிசோட்: அட்வைஸ் செய்த நிலாவை அசிங்கப்படுத்தும் நடேசன்.. அய்யனார் துணை சீரியல்

நிலாவின் குடும்பத்தால் ஷாக்

அப்போது, வீட்டில் இருப்பவர்களிடம் நிலா சர்ட்டிபிகேட்டை எரித்த விஷயத்தை சொன்னதும் அத்தனை பேருக்கும் அதிர்ச்சி ஆனது. படித்திருந்தும் இப்படி எல்லாம் எப்படி நடந்து கொள்ள முடிந்தது. இது உன்னுடைய இத்தனை வருட உழைப்பு என நிலாவிடம் கூறி ஆதங்கப்பட்டனர். ஆனால், நிலா இதையெல்லாம் விடுங்க. அவங்களப் பத்தி தெரிஞ்சுக்க ஒரு வாய்ப்பாக இருந்தது என சமாதானம் படுத்தினாள்.

ஆறுதல் சொன்ன சோழன்

அதுமட்டுமல்லாமல், அவளது அம்மாவை நினைத்து தான் கவலையாக இருந்தாள். நான் படிச்சு கோல்டு மெடல் வாங்கி.போது, அது தான் கௌரவம் என அறிவுரை கூறினார். ஆனால், அவரோ என் அப்பாகிட்ட சர்ட்டிபிகேட் கொடுத்தா அவ நம்மளோட பேச்சை கேட்க மாட்டா என சொன்னாங்க என மிகவம் வருந்தி ரூமிற்குள் சென்றாள்.

பின், அவரிடம் சோழன் வந்து சமாதானம் செய்தான். உங்களுடைய சர்ட்டிபிகேட்டை காலேஜில் கேட்டு வாங்கி விடலாம். உங்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும். நீங்க நினைச்ச இடத்துக்கு போவிங்க. கண்டிப்பா உங்களால எல்லாருக்கும் பெருமை தான் கிடைக்கும் என ஆறுதல் சொன்னார். இதைக் கேட்டு நிலா சந்தோஷமடைந்தாள்.

சேரனின் காதல் கதை

பின், ராத்திரி வீட்டு வாசலில் தனியாக அமர்ந்திருந்த போது அங்கு கார்த்திகா வந்தார், அவர், சேரனை தேடி வந்தார். அப்போது தனக்கு சேரனை ஏன் பிடிக்கும் என்ற காரணத்தையும் கூறினார். இதைக் கேட்டு நிலாவுக்கு இவர்களது காதல் கதை மறைமுகமாக தெரிந்தது.

அடுத்த நாள் காலையில், நிலா தூங்கி எழுந்து பார்த்த போது, சேரனைத் தவிர அத்தனை பேரும் தூங்கிக் கொண்டிருந்தனர். இதைப் பார்த்து கோபமான நிலா பாத்திரத்தை அடித்து அனைவரையும் எழுப்பினாள். மேலும் இனி எல்லா நாளும் காலை 7.30 மணிக்கே எழுந்து வீட்டில் இருக்கும் வேலையை கலந்து செய்ய வேண்டும் என ஆர்டர் போட்டாள். இதனால் அனைவரும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என பறந்தனர்.

நிலாவை அசிங்கப்படுத்திய நடேசன்

இதைத் தொடர்ந்து வாசலில் நிலா கோலம் போடுவதற்கான ஏற்பாடுகளை சேரன் செய்து வைத்திருந்தான். அப்போது பல்லவனும் நிலாவும் கோலம் போட வந்தனர். இதைப் பார்த்த நடேசன் இன்னும் எத்தனை நாளுக்கு புது மாட்ட இப்படி கவனி்பபீங்க என சொல்ல, நிலாவுக்கு தன்னை தானா மாடு என சொல்கிறார் என தெரிந்தது.

பின் கோலம் போடும் இடத்தில் பீடி குடித்ததால் அவள் இது உடலுக்கு கேடு என அறிவுரை வழங்கினாள். இது நடேசனுக்கு கோபத்தை ஏற்படுத்த, இது என் வீடு நான் பீடி குடிப்பேன், தண்ணி அடிப்பேன். என்ன வேணும்னாலும் பண்ணுவேன். உன்னோட அட்வைஸ் எல்லாம் அவங்களோட நிறுத்திக்கோ என கூறினார்.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், விடியல் தொலைக்காட்சி, ஈ டிவி பாரத், வே 2 நியூஸ், ஆதன் தமிழ் மீடியா ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.