அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 15 எபிசோட்: சபதமேற்று கிளம்பி சூர்யாவை கதற விட்ட நிலா.. அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 15 எபிசோட்: தான் வாழ்க்கையில் ஜெயித்து காட்டி பெருமை அடைந்த பிறகு தான் திருவண்ணாமலைக்கு வருவேன் என நிலா அவள் வீட்டில் உள்ளவர்களிடம் சபதம் ஏற்றுள்ளார்.

அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 15 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், தனது சர்ட்டிபிகேட்டை வாங்க திருவண்ணாமலையில் உள்ள வீட்டிற்கு வந்தார். ஆனால், வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் அவளை புரிந்து கொள்ளாமல் இதே வீட்டில் எங்களுடன் இருந்துவிடுமாறும் வேறு திருமணம் செய்து வைக்கிறோம் என்றும் கூறினர். இதற்கு நிலா சம்மதிக்காததால், அவளது சர்ட்டிபிகேட்டை அவள் கண் முன்னே எரித்து சாம்பலாக்கினர்.
சபதம் போட்ட நிலா
இதனால், ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற நிலா, இனி உங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. இனி நான் உங்களை நினைத்து எந்த குற்ற உணர்ச்சிக்கும் ஆளாக மாட்டேன். சர்ட்டிபிகேட் இல்லைன்னாலும் நான் என் வாழ்க்கையில் முன்னேறுவேன் என சவால் விட்டு பல்லவனை அங்கிருந்து கூட்டி வந்தாள்.
பல்லவனிடம் வருந்திய நிலா
பின், நிலாவிற்கு என்ன ஆனது என்றே தெரியாத பல்லவன், அவளுக்காக வருந்தினான். பின் அவள் அழுவதைக் கண்டு அவனை அறியாமலே அழுதான். இதைப் பார்த்த நிலா பல்லவனை சமாதானம் செய்து இனி அழமாட்டேன் எனக் கூறினாள். பின் பல்லவனை சாப்பிட அழைத்துச் சென்று, தான் வீட்டில் எப்படி வளர்ந்தேன் என்றும், சின்ன சின்ன ஆசைகள் கூட நிறைவேறாமல் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்டதையும் கூறி வருந்தினாள். பின் வீட்டில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் கூறினாள்.
நிலாவை விசாரிக்கும் சோழன் குடும்பம்
அந்த சமயத்தில் பாண்டியன் போன் செய்து, நிலாவைப் பற்றி விசாரித்தான், அத்துடன் சென்னைக்கு வர கார் புக் செய்யவா என்றும் கேட்டான், அவன் பேசி முடித்த உடனே சோழன் நிலாவிற்கு போன் செய்து விசாரித்தான். ஆனால், நிலா யாரிடமும் வீட்டில் என்ன நடந்தது என்பதை பெரிதாக கூறிக் கொள்ள வில்லை. அப்படியே சமாளித்து வீட்டிற்கு வந்து பேசிக் கொள்கிறேன் என்றாள்.
என்ன வேணும்னாலும் செய்வோம்
பின், இனி தனக்கு அப்பா, அம்மா, அண்ணன் என யாருமே இல்லை. வாழ்க்கையில் முன்னேறி இவர்கள் எல்லாம் என்னை நினைத்து பெருமைப்படும் நிலைக்கு வந்த பின் தான் திருவண்ணாமலைக்கு வருவேன். இது அந்த திருவண்ணாமலை ஈஸ்வரன் மீது சத்தியம் என்றாள். இதைக் கேட்ட பல்லவன் இனி உங்களுக்கு யாரும் இல்லை என நினைத்து வருத்தப்படாதீங்க. உங்களுக்கு நாங்க எல்லாம் இருக்கோம். உங்களுக்காக என்ன வேணும்னாலும் செய்வோம் என ஆறுதல் கூறினான்.
சூர்யாவை பந்தாடிய நிலா
பின், இவர்கள் சாப்பிட்டு விட்டு ஹோட்டலை விட்டு வெளியே வந்த சமயத்தில், சூர்யா அங்கு வந்து நிலாவிடம் பிரச்சனை செய்தான். அப்போது, நான் இன்னொருத்தனோட பொன்டாட்டி, அப்படி இருந்தும் என் பின்னாடி சுத்திட்டு இருக்கன்னா உனக்கு வேற பொன்னே கிடைக்கலயா எனக் கூறி அசிங்கப்படுத்தினாள். அப்போதும் அவன் விடாமல் பேசிக் கொண்டிருந்ததால் அவன் தன்னை ஈவ்டீசிங் செய்வதாக போலீஸில் சொல்லப் போகிறேன் எனக் கூறியதும் பதறியடித்து அங்கிருந்து கிளம்பினான்.
சோழனின் சம்பவம்
பின், சென்னை வந்த பவ்லவனையும் நிலாவையும் அழைத்துச் செல்ல சோழன் காரை எடுத்துக் கொண்டு வந்தான். அ்பபோது, நிலாவை மட்டும் விழுந்து விழுந்து கவனித்து பல்லவன் இருப்பதையே மறந்து போனான்.

டாபிக்ஸ்