அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 14 எபிசோட்: 10 எண்றதுக்குள் மாறிய நிலாவின் வாழ்க்கை.. அய்யனார் துணை சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 14 எபிசோட்: 10 எண்றதுக்குள் மாறிய நிலாவின் வாழ்க்கை.. அய்யனார் துணை சீரியல்

அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 14 எபிசோட்: 10 எண்றதுக்குள் மாறிய நிலாவின் வாழ்க்கை.. அய்யனார் துணை சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published Apr 14, 2025 10:22 AM IST

அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 14 எபிசோட்: நிலாவின் சர்ட்டிபிகேட்ஸை அவரது அப்பா கொளுத்தியதால், அத்தனை பேரிடமும் தான் வாழ்க்கையில் முன்னேறிக் காட்டுவதாக கூறி சவால் விட்டு சென்றுள்ளார்.

அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 14 எபிசோட்: 10 எண்றதுக்குள்ள மாறிய நிலாவின் வாழ்க்கை.. அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 14 எபிசோட்: 10 எண்றதுக்குள்ள மாறிய நிலாவின் வாழ்க்கை.. அய்யனார் துணை சீரியல்

போராடும் நிலா

ஆனால், வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் நிலாவை இந்த வீட்டில் இருந்து வெளியே அனுப்பக் கூடாது என்றும், சோழனோடு நடந்த கல்யாணம் செல்லாது என டைவர்ஸ் வாங்கி, திரும்பவும் சூர்யாவுக்கு கல்யாணம் செய்து வைக்கும் திட்டத்திலேயே இருக்கின்றனர். இதை அறிந்து கொண்ட நிலா, தன் வீட்டில் உள்ளவர்களிடம் போராடிக் கொண்டிருக்கிறார்.

கெடு விதித்த மனோகர்

நான் சென்னைக்கு போனது நான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலையை தேடி நல்ல வாழ்க்கையை அமைக்க வேண்டும் என்று தான். என் கல்யாண வாழ்க்கையை பற்றி நான் இங்கே பேசவே இல்லை. நீங்க ஏன் புரிஞ்சிக்க மாட்டிங்கிறீங்க என கெஞ்சிக் கொண்டிருந்த நிலாவிற்கு, அவளது அப்பா மனோகர் 10 எண்ணுறதுக்குள்ள நாங்க வேணுமா, சென்னை வாழ்க்கை வேணுமா என கேட்டுக் கொண்டிருக்கிறான்.

பயத்தில் நிலா

அப்போது, நிலா நான் வீட்டில் உள்ளவர்களிடம் எல்லாம் என் படிப்பு எவ்வளவு முக்கியம் என சொல்லியும் நீங்க யாரும் அதை காது கொடுத்து கேட்கவில்லை. நீங்க சூர்யாவிற்கு கல்யாணம் பண்ணி வைக்க முடிவெடுத்தது தான் நான் போகவே காரணம். நீங்க எனக்காக வேற எதுவும் செய்ய வேணாம். என்னோட சர்ட்டிபிகேட் மட்டும் தாங்க. உங்கள எல்லாம் பாத்தாவே எனக்கு பயமா இருக்கு என கெஞ்சுகிறாள்.

வாழ்க்கைய அழிச்சிட்டீங்க

இதை எல்லாம் கேட்டு கோவப்பட்ட நிலாவின் அப்பா, தாஸிடம் நிலாவின் சர்ட்டிபிகேட் எல்லாவற்றையும் எடுத்து வரச் சொல்லி நிலாவின் கண்முன்னே எரித்தான். இதைப் பார்த்த நிலாவுக்கு இத்தனை நாள் நம் குடும்பத்தை கஷ்டப்படுத்தியதற்காக வருந்தினேன். ஆனால் இனி உங்களுக்காக நான் கவலைப்பட மாட்டேன்.

இந்த வீட்டில் இருப்பவங்களை நம்பி தான் இங்க வந்தேன். ஆனா நீங்க என்னோட வாழ்க்கையவே அழிச்சிட்டீங்க.

சவால் விட்ட நிலா

இனிமே உங்க கண்ணு முன்னாடியே நிக்க மாட்டேண். என் சர்ட்டிபிகேட்ட எரிச்சிட்டா என்னால வேல பாக்க முடியாதா, நான் வாழ்க்கையில ஜெயிச்சிட்டு வரும்போது என்ன பாத்து பெரும பட்டு வருவீங்க. அது வரை நான் இந்த திருவண்ணாமலை பக்கமே வர மாட்டேன் என சொல்ல,அவளை வீட்டிற்குள் பூட்டி வைக்க முயன்றனர்.

சீறிய நிலா

அவர்களிடமிருந்து சண்டையிட்டு வெளியே வந்தாள். அவளை பின்தொடர்ந்து வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் வந்தனர். அப்போது வாசலில் பல்லவன் நிற்பதை பார்த்து தாஸ் பல்லவனை அடிக்கப் பாய்ந்தான். அப்போது அவனை ஒரே பிடயாக தள்ளிய நிலா, பல்லவன் மீது கை வைத்தால் அவ்வளவு தான் என எச்சரித்தாள். அத்துடன், இந்த குடும்பத்த விட எனக்கு இவங்க எல்லாம் ரொம்ப முக்கியமானவங்க என பேசி பல்லவன் கையை பிடித்து ஆக்ரோஷமாக கூட்டிப் போகிறான்.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், விடியல் தொலைக்காட்சி, ஈ டிவி பாரத், வே 2 நியூஸ், ஆதன் தமிழ் மீடியா ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.