அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 12 எபிசோட்: நிலாவை மூளை சலவை செய்யும் குடும்பம்.. அய்யனார் துணை சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 12 எபிசோட்: நிலாவை மூளை சலவை செய்யும் குடும்பம்.. அய்யனார் துணை சீரியல்

அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 12 எபிசோட்: நிலாவை மூளை சலவை செய்யும் குடும்பம்.. அய்யனார் துணை சீரியல்

Malavica Natarajan HT Tamil
Published Apr 12, 2025 07:43 AM IST

அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 12 எபிசோட்: நிலா மீண்டும் சோழனோடு சேர்ந்து வாழக் கூடாது, சூர்யாவோடு தான் சேர்ந்து வாழ வேண்டும் என திரும்ப திரும்ப மூளை சலவை செய்கின்றனர்.

அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 12  எபிசோட்: நிலாவை மூளை சலவை செய்யும் குடும்பம்.. அய்யனார் துணை சீரியல்
அய்யனார் துணை சீரியல் ஏப்ரல் 12 எபிசோட்: நிலாவை மூளை சலவை செய்யும் குடும்பம்.. அய்யனார் துணை சீரியல்

நிலா குடும்பத்தின் திட்டம்

வரும் வழியில் பதற்றத்துடனே இருந்த நிலா, வீட்டில் உள்ளவர்களிடம் உண்மையை சொல்லி எப்படியாவது அவர்களுக்கு தன் நிலைமையை புரிய வைத்துவிடலாம் என நினைத்தாள். ஆனால். நிலா வீட்டில் பல்லவனை வெளியே நிற்க வைத்துவிட்டு நிலாவை மட்டும் உள்ளே அழைத்து சென்றனர். அங்கு பார்த்தால், வீட்டில் நிலாவின் அப்பாவும் அண்ணனும் இருக்கிறார். நிலாவை எப்படியாவது இதே வீட்டில் தங்க வைக்க இவர்கள் தன்னை ஏமாற்றி திட்டம் போட்டதை நிலாவால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

நிலாவிடம் கெஞ்சிய குடும்பம்

அப்படி இருந்தும், தன் கல்யாணத்தை பற்றி பேசாமல், தான் வேலைக்கு போக வேண்டும் என்பதை மட்டுமே திரும்ப திரும்ப பேசினாள். ஆனால், நிலாவின் வீட்டில் இருப்போர், நிலா சோழனை விரும்பி தான் அந்த வீட்டில் இருக்கிறாள். 5 ஆம்பளைங்க இருக்க வீட்டுல எப்படி இருக்க, அது ஒரு மோசமான குடும்பம், உ்ன்னால நாங்க இவ்ளோ அவமானப்பட்டாலும் நாங்க உன்ன ஏத்துக்குறோம் என்று எல்லாம் நிலாவிடம் கெஞ்சினர்.

கோபத்தில் நிலா

அதற்கு நிலா ஒப்புக் கொள்ள மறுத்ததால், நிலாவை மிரட்டியும் பார்த்தனர். உன்னால் ஒரே நாள்ல கல்யாணம் பண்ண முடியும்ன்னா, என்னால ஒரே நாள்ல டைவர்ஸ் வாங்கித் தரமுடியும் என நிலாவின் அப்பா சொல்ல, அவள் பயந்தாள். அந்த சமயத்தில் நிலாவின் அண்ணன் தாஸ் சூர்யாவும் இன்னும் ஆஸ்திரேலியா போகல. அவர் இன்னமும் நிலாவ விரும்புறாரு. அவர்கிட்டயும் பேசலாம் என சொன்னதும் நிலாவுக்கு கோபம் பொங்கி வந்தது.

அசிங்கப்படுத்திய மனோகர்

நான் இத்தனை நாள் சொல்லியும் திரும்ப திரும்ப சூர்யாவ கல்யாணம் பண்ணிக்க சொல்றீங்க. அவனால தான் நான் வீட்ட விட்டு வெளிய போக வேண்டிய சூழ்நிலையே வந்தது. ஆனா இன்னமும் நீங்க என்ன புரிஞ்சிக்கவே இல்ல என சொல்லி ஆதங்கப்பட்டார். அப்போது நிலாவின் அப்பா நீ சூர்யா வேணாம்ன்னு போகல, அந்த டிரைவர் வேணும்ன்னு போன என சொல்லி நிலாவை அசிங்கிப்படுத்தினான்.

உறுதியாக நின்ற நிலா அம்மா

அதற்குள் இனி நிலா எங்கேயும் போக மாட்டாள். நம்மோடு தான் இருப்பார் என நிலாவின் அம்மா சொன்னதும் கோவமடைந்த நிலா, அவரது கையை தட்டிவிட்டு நான் சென்னைக்கு போகனும். நல்ல வேலை செய்யணும் அதக்கு என்னோட சர்ட்டிபிகேட்ட தாங்க என பிடிவாதமா நிற்கிறாள், இதையடுத்து, வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் மாறி மாறி நிலாவிடம் பேசியதால் கோபமடைந்த நிலா இனி உங்களுக்கு நான் புரிய வைக்கலே போகறு இல்ல, கடைசியா ஒருமுறை எனக்காக என் சர்ட்டிபிகேட்ட மட்டும் தாங்க என கேட்டு கெஞ்சுகிறாள்.

பல்லவனிடம் கத்தும் சோழன்

அதற்குள் சோழன் நிலாவைப் பற்றி யோசித்து யோசித்து பயமாகவும் பதற்றமாகவும் இருப்பதால் பல்லவனுக்கு போன் செய்து விசாரிக்கிறான். அப்போது, நிலா வீட்டில் இருப்பவர்கள் என்னை வெளியே நிற்க சொல்லிட்டாங்க. ஆனா அவங்க போய் ரொம்ப நேரம் ஆச்சு. என்ன நடக்குதுன்னு தெரியல என சொன்னதும் கோவத்தில் கத்துகிறான்.

Malavica Natarajan

TwittereMail
மாளவிகா நடராஜன், கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் 8 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். பொழுதுபோக்கு பிரிவில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், விடியல் தொலைக்காட்சி, ஈ டிவி பாரத், வே 2 நியூஸ், ஆதன் தமிழ் மீடியா ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.