அயலி சீரியல் ஜூன் 3 எபிசோட்: கடத்தப்படும் குழந்தை.. அம்மாவின் மீதான களங்கத்தை போக்க போராடும் நாயகி
அயலி சீரியல் ஜூன் 3 எபிசோட்: அயலி சீரியலின் முதல் எபிசோடில் இந்திராணி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்திருந்த நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அயலி சீரியல் ஜூன் 3 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8: 30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் அயலி. இந்த சீரியலின் முதல் எபிசோடில் இந்திராணி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்திருந்த நிலையில் இன்று நடக்கபோவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது இந்திராணியும் அவளது கணவர் செழியனும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்க செழியன் குழந்தையை பார்ப்பதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வருகிறான். இதற்கிடையில் ஒரு கும்பல் குழந்தையை காரில் கடத்தி சென்று விடுகிறது.
குழந்தையை காரில் கடத்திய கும்பல்
குழந்தையை காணாததால் காளியப்பன் நீதானே காரணம் என்று செழியன் மீது பழி சுமத்த இந்திராணி அவர் இதுக்கு காரணமாக இருக்க மாட்டார் என்று சொல்லி சிசிடிவி காட்சிகளை சோதனையிடுகின்றனர். அப்போது குழந்தையை ஒரு கும்பல் காரில் கடத்தி சென்றது தெரிய வருகிறது.