Ayalan 2:‘நான் ரெடி தான் வரவா?’ - அதே படக்குழுவினர் உழைப்பில் உருவாகும் 'அயலான் 2’
அயலான் 2 படத்தின் முன்தயாரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளது.
சிவகார்த்திகேயன், இயக்குநர் ரவிக்குமார் கூட்டணி அயலான் 2 படத்தில் மீண்டும் இணைந்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில், 'இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் இயக்கி பொங்கலுக்கு வெளியான திரைப்படம் ‘அயலான்’. இப்படம் இதுவரை உலகம் முழுக்க 43 கோடி ரூபாய் கலெக்ஷனை எட்டியுள்ளது. இதனிடையே இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘அயலான்’ படத்துக்கு கிராபிக்ஸ் மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகளை டிசைன்செய்த பாண்டம் எஃப்எக்ஸ் நிறுவனம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் இரண்டாம் பாகத்தினை இப்படத்தின் முதல் பாகத்தைத் தயாரித்த நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம்,அதன் இரண்டாம் பாகத்தைத் தயாரிக்கிறது. இதற்கான விஎஃப்எக்ஸ் பணிகளை முடுக்கிவிட இதுவரை முதல்கட்டமாக ரூ.50 கோடியை தயாரிப்புநிறுவனம் ஒதுக்கி, கிராபிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
அயலான் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் டெக்னிக்கல் குழு மீண்டும் அப்படியே இணைந்துள்ளது. அயலான் 2 படத்திலும் ஏலியன் முக்கிய அங்கம் பெறுகிறது. இதற்கான சிறப்பான காட்சிகளை உருவாக்க, முன் தயாரிப்புப் பணிகளில் கிராபிக்ஸ் நிறுவனம் ஈடுபடத்தொடங்கியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்