தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Ayalaan Movie Collection On Day 3

Ayalaan Collection: அயலான் பட மூன்று நாளில் வசூல் என்ன?

Aarthi Balaji HT Tamil
Jan 14, 2024 12:28 PM IST

அயலான் படத்தின் மூன்று நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அயலான்
அயலான்

ட்ரெண்டிங் செய்திகள்

சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் 'நேற்று இன்று நாளை' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் ரவிக்குமார் இந்தப்படத்தை இயக்கி இருக்கிறார் .

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கும் இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாஸ், பானுப்ரியா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சரத் கே ல்கர் வில்லனாக நடித்து இருக்கிறார்.

கே. ஜே . ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் 24 ஏஎம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்து உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைத்து உள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவையும், ரூபன் படத்தொகுப்பையும் செய்துள்ளார். இப்படத்தில், சுமார் 4500க்கும் மேற்பட்ட கிராஃபிக்ஸ் காட்சிகளைக் கொண்டு காட்சிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

2030 - ல் பூமியில் எனர்ஜியின் தேவை பல மடங்கு அதிகமாகும் என்பதை தெரிந்து கொண்டு, பூமியின் மிக மிக ஆழத்தில் இருக்கும் ஒரு வாயுவை எடுக்க முதலீட்டாளர்களிடம் பிசினஸ் பேசுகிறான் ஆர்யன். அதற்கு காரணம் அவன் கையில் அப்படியான ஒரு கருவி இருக்கிறது. 

FX வேலைகளும், வேற்றுக்கிரகவாசிகளின் காட்சிகளும் சுவாரஸ்யமாக உள்ளன. ஆனால் பிரமாண்டமான ஸ்டண்ட் காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகின்றன. படத்தின் தொழில்நுட்ப திறமை இருந்த போதிலும், இயக்குனர் ஆர். ரவிக் குமாரின் நுணுக்கமான விவரிப்பு அதை பழமையானதாக தோன்றுகிறது.

இதனை வேற்று கிரகத்தில் இருந்து பார்த்து கொண்டு இருக்கும் ஏலியன், அதன் ஆபத்தை உணர்ந்து அந்த கருவியை கைப்பற்ற பூமிக்கு வருகிறது. ஆர்யனுக்கும் ஏலியனுக்கும் நடக்க இந்த போராட்டத்தில் எதிர்பாராத விதமாக இயற்கையின் மீது காதல் கொண்ட அர்ஜூன் ஏலியனுடன் கை கோர்க்கிறான்.

ஒரு கட்டத்தில் ஏலியனின் சக்தி அர்ஜூனுக்கு கை மாறுகிறது. அதன் பின்னர் என்ன நடந்தது என்பது மீதிக் கதை.

இதனிடையே அயலான் திரைப்படம், முதல் இரண்டு நாள்களில் உலகளவில் ரூ. 19 கோடியை வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாள் 1 - 3.2 கோடி ரூபாய்

நாள் 2 - 4.51 கோடி ரூபாய்

நாள் 3 - 1.07 கோடி ரூபாய்

பொங்கல் பண்டிகை காரணமாக தொடர் விடுமுறை இருப்பதால் வசூல் இன்னும் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. வரும் நாட்களில் வசூலில் என்ன மாதிரியான மாற்றங்கள் வர போகிறது என்பதை பார்க்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.