Avatar 2 movie leaked: அவதார் 2 படக்குழுவுக்கு ஷாக்…ரிலீசுக்கு முன்பே லீக்!
அவதார் 2 வெளியாகும் முன்பே ஆன்லைனில் கசிந்துள்ளது.

இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அவதார் தி வே ஆஃப் வாட்டர். மிகப் பிரம்மாண்டமான பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படம் உலகம் முழுதும் 52 ஆயிரம் திரையரங்குகளில் இன்று வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் படத்தை வெளியிட விநியோக நிறுவனத்துடன் சில திரையரங்குகள் உடன்பாடு செய்த நிலையில் சென்னையிலும் வெளியானது.
அவதார் முதல் பாகம் கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்தை பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
தொழில்நுட்பத்தில் கலக்கி உலக அளவில் மாஸ் காட்டி வசூல் வேட்டை செய்தது இந்த படம். சிறந்த ஒளிப்பதிவு, விஷூவல் எபெக்ட்ஸ், கலை அமைப்பு ஆகிய 3 பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளை வென்று சாதனை படைத்தது.
சுமார் 13 ஆண்டுகள் கழித்து வெளியாகியுள்ள அவதார் படத்தின் இரண்டாம் பாக படம் எப்படி இருக்கிறது என ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு ட்விட்டரில் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.
ஆங்கிலம் மட்டுமின்றி இந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி உள்ளது.
ல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை வெளியாகவிருந்த இப்படத்தின் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். படம் வெளியாவதற்கு முன்பே ஆன்லைனில் பார்க்கப்பட்டது.
சில சைபர் கிரிமினல்கள் அவதார் தி வே ஆஃப் வாட்டர் படத்தை திருட்டு தனமாக டெலிகிராமில் பதிவேற்றுகிறார்கள். இதனால் பலரும் படத்தை ரிலீஸ் வரை காத்திருக்காமல் இலவசமாக பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.
ரூ.2000 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம் இலவசமாகப் பார்க்கப்படுகிறது. அவதாரின் முதல் பாகமும் பைரசியால் ஆட்கொள்ளப்பட்டது.
அவதார்-2 படம் ஆன்லைனில் திருட்டு தனமாக பார்ப்பதால் பலரும் அதை டவுன்லோட் செய்து வருகின்றனர். அதே சமயம் திரையுலக பிரியர்களும் தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இப்படம் திரையரங்குகளில் பார்க்க வேண்டிய படம் என்றும், ஆயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்து எடுத்தால் திருட்டு தனமாக படம் வெளியானது சரியில்லை என பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
ரிலீஸுக்கு முன்பே படம் திருடப்பட வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் வசூல் பாதிக்கப்படும் என்றும் வர்த்தக நிபுணர்கள் கணித்தனர்.
2009 ஆம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படம் மிகப்பெரிய வசூலைப் பெற்றது. பண்டோரா உலகத்தை வெள்ளித்திரையில் அற்புதமாக வெளிப்படுத்திய ஜேம்ஸ் கேமரூன், இம்முறை பண்டோராவின் கடல் உலகத்தை அறிமுகப்படுத்தவுள்ளார்.
கடல் தொடர்பான பல அம்சங்களைக் காட்டுவார் என ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

டாபிக்ஸ்