தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Avargalum Ivargalum Director Veera Pandian Slams Aiswarya Rajesh Character

Aiswarya Rajesh: ‘ஆட்டோவிற்கு கூட அப்ப காசு கிடையாது.. போன் அடிச்சா கூட எடுக்க மாட்றாங்க’ - ஐஸ்வர்யா செய்யும் துரோகம்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 25, 2024 07:06 AM IST

கதாநாயகி வாய்ப்பு கேட்டு ஐஸ்வர்யா ராஜேஷூம், அவரது அம்மாவும்தான் வந்தார்கள். அப்போது கதாநாயகியை நாங்கள் முடிவு செய்யவில்லை. ஆனால், ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து எங்களிடம் வந்து வாய்ப்பு கேட்டுக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.

ஐஸ்வர்யா ராஜேஷ்!
ஐஸ்வர்யா ராஜேஷ்!

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து அறம்நாடு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த வீரபாண்டியன் பேசும் போது, “ சினிமாவில் இருக்கும் மனிதர்கள் என்றைக்குமே வெற்றி படத்தை பற்றி மட்டும் தான் பேசுவார்கள். ஐஸ்வர்யா ராஜேஷ் அறிமுகமானது என்னுடைய அவர்களும், இவர்களும் திரைப்படத்தில்தான். ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு தெலுங்கு குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது அம்மா அப்பா இருவருமே நடிகர்கள் தான். அவரை என்னிடம் அறிமுகப்படுத்தியது பிரபல டான்ஸ் மாஸ்டர் தாராதான்.

கதாநாயகி வாய்ப்பு கேட்டு ஐஸ்வர்யா ராஜேஷூம், அவரது அம்மாவும்தான் வந்தார்கள். அப்போது கதாநாயகியை நாங்கள் முடிவு செய்யவில்லை. ஆனால், ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து எங்களிடம் வந்து வாய்ப்பு கேட்டுக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன். 

அப்போது அவரால் ஆட்டோவிற்கு கூட சரியாக பணம் கொடுக்க முடியாது. ஆனாலும் ஐஸ்வர்யா ராஜேஷ் தினமும் வருவார். நான் அவரிடம் ஏன் தினமும் இப்படி வருகிறீர்கள்?. 

நீங்கள் தான் கதாநாயகி என்று நான் சொல்லி விட்டேனே என்று கேட்டேன். ஆனால் அவர் பக்கத்தில் ஒரு அலுவலகத்திற்கு வந்தேன் அப்படியே உங்களையும் பார்த்துவிட்டு செல்லலாம் என்று வந்தேன் என்று சொல்வார். ஆனால் அது பொய்தான். 

அப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் கொஞ்சம் குண்டாக இருப்பார் இதனால் சுற்றி உள்ளவர்கள் என்னை இவரை கதாநாயகியாக கமிட் செய்ய வேண்டாம் என்று கூறினர். 

ஆனாலும் அவரை அந்த படத்தில் கமிட் செய்தேன்; அவர் அந்த படத்தில் மிகச் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். அதன் பின்னர் அவருடைய சினிமாவின் பாதை வேறு மாதிரியாக மாறி, பெரிய நடிகையாகி விட்டார். 

இப்போது ஒரு நான்கு வருடங்களாக அவரிடம் நான் பேசுவது கிடையாது. இடையில் நான் ஒரு பட விஷயமாக அவரிடம் பேச முயற்சி செய்தேன். அவரது அம்மா தான் பேசினார். நிச்சயமாக நாம் செய்யலாம் என்று கமிட்மெண்ட் கொடுத்திருந்தார். ஆனால் அதன் பின்னர் என்னுடைய வாழ்க்கை அரசியல் என்று மாறிவிட்டது. கிராமத்திலேயே அதிக நேரம் செலவழிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது

பெரிய அளவு ஐஸ்வர்யா ராஜேஷ் என்னுடைய பெயரை பேட்டிகளில் சொன்னதில்லை. ஒரு சில பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். ஆனால் அது குறித்தான வருத்தம் எனக்கு இருக்கிறது. ஆனால் நான் எப்போதுமே வாழ்க்கையை திரும்பிப் பார்த்ததில்லை. அதிலிருந்து பலன்கள் வரவேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்பேன். இருவரும் சேர்ந்து படம் செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. இரண்டு, மூன்று முறை அவருக்கு போன் செய்தேன். ஆனால் அவர் என்னை நிராகரித்து விட்டார். அதில் எனக்கு வருத்தம் இருக்கதான் செய்கிறது.” என்று பேசினார்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.