‘பரியேறும் பெருமாள் படத்தை மிஸ் செய்ததிற்கு வருத்தப்பட வில்லை..’ - டி.என்.ஏ ஆடியோ வெளியீட்டு விழாவில் அதர்வா பேச்சு!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘பரியேறும் பெருமாள் படத்தை மிஸ் செய்ததிற்கு வருத்தப்பட வில்லை..’ - டி.என்.ஏ ஆடியோ வெளியீட்டு விழாவில் அதர்வா பேச்சு!

‘பரியேறும் பெருமாள் படத்தை மிஸ் செய்ததிற்கு வருத்தப்பட வில்லை..’ - டி.என்.ஏ ஆடியோ வெளியீட்டு விழாவில் அதர்வா பேச்சு!

Kalyani Pandiyan S HT Tamil
Published Jun 11, 2025 01:31 PM IST

மாரி செல்வராஜ் சார்.. இப்படிப்பட்ட பிசியான நேரத்தில் நீங்கள் எங்களுக்காக இங்கே வந்திருப்பதற்கு நன்றி. நான் இங்கே டி என் ஏ படத்தைப் பற்றி நிறைய பேச வேண்டும் என்று நினைத்தேன். - அதர்வா பேச்சு!

‘பரியேறும் பெருமாள் படத்தை மிஸ் செய்ததிற்கு வருத்தப்பட வில்லை..’ - டி.என்.ஏ ஆடியோ வெளியீட்டு விழாவில் அதர்வா பேச்சு!
‘பரியேறும் பெருமாள் படத்தை மிஸ் செய்ததிற்கு வருத்தப்பட வில்லை..’ - டி.என்.ஏ ஆடியோ வெளியீட்டு விழாவில் அதர்வா பேச்சு!

மிஸ் ஆன பரியேறும் பெருமாள்

இந்த நிகழ்வில் நடிகர் அதர்வா பேசியதாவது, ‘மாரி செல்வராஜ் சார்.. இப்படிப்பட்ட பிசியான நேரத்தில் நீங்கள் எங்களுக்காக இங்கே வந்திருப்பதற்கு நன்றி. நான் இங்கே டி என் ஏ படத்தைப் பற்றி நிறைய பேச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், எனக்கு முன்னதாக பேசிய மாரி செல்வராஜ் ஒரு பெரிய பாமை போட்டு சென்று விட்டார். பரதேசி படம் முடித்த பிறகு எனக்குள் நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருந்தன.

கடந்த தலைமுறையில் நான் பார்த்த மிக மிக சிறப்பான ஒரு படம் பரியேறும் பெருமாள். அந்த படம் எனக்கு மிக மிக பிடித்த படம். நான் அந்தப் படத்தை அந்த நேரத்தில் மிஸ் செய்ததிற்கு எந்த வருத்தமும் பட வில்லை. காரணம், என்னை விட கதிர் அந்த கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார்.’ என்று அவர் அதில் பேசினார்.

ஒவ்வொரு படம் நடிக்கும் பொழுதும் எனக்கு ஒவ்வொரு விதமான அனுபவம் கிடைக்கும்.

படம் நன்றாக வந்து இருக்கிறது.

மேலும் பேசிய அவர், ‘ஒவ்வொரு படம் நடிக்கும் பொழுதும் எனக்கு ஒவ்வொரு விதமான அனுபவம் கிடைக்கும்.இந்தப் படத்தை அணுகும் பொழுது எதைப்பற்றியும் யோசிக்காமல்தான் படப்பிடிப்பிற்கு சென்றேன். படப்பிடிப்பில் காட்சியை மெருகேற்றுவது என்ற ஒரு செயல்முறை நடக்கும்; அப்படி இந்தப் படத்தில் ஒரு காட்சியில் சில நொடிகள் நடிப்பதாக இருந்த காட்சியானது பல நொடிகளாக நீண்டது.

அந்த காட்சியில் நானும் நிமிஷாவும் மிகவும் நேச்சுரலாக நடித்திருக்கிறோம். அதை நீங்கள் ட்ரெய்லரில் பார்க்கலாம்; படத்திலும் அந்த காட்சி மிகவும் நன்றாக வந்திருக்கிறது. படம் நன்றாக வந்திருக்கிறது. வந்து பாருங்கள்’ என்று பேசினார்.

படக்குழு விபரம்

ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், ஃபர்ஹானா போன்ற ரசிக்கும் விதமான திரைப்படங்களை இயக்கியவர் நெல்சன் வெங்கடேசன். மெனக்கெடும் இயக்குனர்களில் ஒருவர். இந்த முறை க்ரைம், ஆக்‌ஷன், டிராமா நிறைந்த ‘டிஎன்ஏ’ திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார்.

இந்தப்படத்தில் அதர்வா மற்றும் நிமிஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். டாடா உள்ளிட்ட பல ஹிட் படங்களை தயாரித்த ஒலிம்பியா மூவிஸ், இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. ஜிப்ரான் பின்னணி இசையமைத்து இருக்கிறார். இந்தப்படத்தில் 5 இசையமைப்பாளர்கள் 5 பாடல்களுக்கு இசையமைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.