Balaji Prabhu:வைரமுத்து செய்த நம்பிக்கை துரோகம்.. நொந்து போன அப்பா -பாலாஜி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Balaji Prabhu:வைரமுத்து செய்த நம்பிக்கை துரோகம்.. நொந்து போன அப்பா -பாலாஜி

Balaji Prabhu:வைரமுத்து செய்த நம்பிக்கை துரோகம்.. நொந்து போன அப்பா -பாலாஜி

Kalyani Pandiyan S HT Tamil
Published Jul 13, 2024 07:33 AM IST

Balaji Prabhu: சூலம் படத்திற்கு பின்னர் என்னுடைய அப்பா வைரமுத்துவை பாடல் எழுத அழைக்கவே இல்லை. - பாலாஜி

Balaji Prabhu:வைரமுத்து செய்த நம்பிக்கை துரோகம்.. நொந்து போன அப்பா -பாலாஜி
Balaji Prabhu:வைரமுத்து செய்த நம்பிக்கை துரோகம்.. நொந்து போன அப்பா -பாலாஜி

வெறுப்பில் இருந்த பாஸ்கர்

இது குறித்து அவர் பேசும் போது, "இது எனது அப்பா சொல்லிதான் எனக்கு தெரிய வந்தது. நான் சில விஷயங்களை இங்கு வெளிப்படையாக பேசுகிறேன். எனது அப்பா சாகும் வரை வைரமுத்து மீது கோபத்தில் தான் இருந்தார். 

அந்த காலகட்டத்தில் சங்கர் கணேஷ் சார் தான் பெரும்பான்மையான எங்களது படங்களுக்கு இசையமைத்து கொண்டு இருந்தார். அப்போது, அவர் ஹார்மோனியம் பெட்டியை எடுத்துக்கொண்டு அவரது குழுவினருடன் அலுவலகத்திற்கு வந்துவிடுவார். காலையில் வரும் அவர்கள் மாலை தான் தருவார்கள் அவர்களுக்கான சாப்பாடு, சௌகரியங்கள் உள்ளிட்ட அனைத்தும் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். கவிஞர்களும் அதேபோலத்தான் அலுவலகத்திற்கு வந்து பாடல் எழுதிவிட்டு செல்வார்கள். 

சூலம் படத்திற்கு பின்னர் என்னுடைய அப்பா வைரமுத்துவை பாடல் எழுத அழைக்கவே இல்லை. இந்த நிலையில், ஒருநாள் ஒரு படத்திற்கு, சங்கர் கணேஷ் ஒரு பாடலை வைரமுத்துவை வைத்து எழுதினால் நன்றாக இருக்கும் என்று கூறினார். அப்போது எனது அப்பா,அவருக்கு நான் எழுத வாய்ப்பு கொடுக்கிறேன். ஆனால் உங்களுக்கு வேலை போய்விடும் பரவாயில்லையா என்று கேட்டார். அந்த அளவிற்கு அவர், வைரமுத்துவின் மீது வெறுப்பில் இருந்தார்

எனக்கு சினிமாவில் விருப்பம் என்பதால், நான் பாடல் உருவாக்கத்தின் போதெல்லாம் அங்கேயே உட்கார்ந்து இருப்பேன். அப்பொழுது எனது அப்பாவிடம் கண்ணதாசனுக்கு பிறகு வைரமுத்துதான்... என்ற அளவில் அவர் மிகப்பெரிய கவிஞராக, பாடல் ஆசிரியராக அவர் வளர்ந்து விட்டார்.  அப்படிப்பட்ட ஒரு திறமைசாலியை நீங்கள் ஏன் பயன்படுத்த மறுக்கிறீர்கள். ஏற்கனவே பாடல் எழுதியவர்களுடனே பணி செய்கிறீர்களே என்று கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் அவர் அதை விடு என்று சொல்லி கடந்து விடுவார். 

காரணம் சொன்ன அப்பா

எனக்கு ஒரு வித புரிதல் வந்தவுடன் நான் மீண்டும் அப்பாவிடம் சென்று கேட்டேன். அப்போது அவர் காரணத்தை சொன்னார். சூலம் படத்திற்கு இளையராஜாவை இசையமைப்பாளராக அப்பா கமிட் செய்திருந்தார். அந்தப் படத்தின் முதல் இரண்டு பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்

இதையடுத்து அடுத்த இரண்டு பாடல்களை அப்பா புலமைப்புத்தனை வைத்து எழுதலாமா என்று கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது, இளையராஜா, வைரமுத்துவின் பெயரை பரிந்துரைக்க, அவரது பாடல் வரிகளை அப்பா பார்த்தார் 

பாடல் வரிகளை பார்த்த போது வைரமுத்து மிகவும் திறமைசாலியாக இருப்பான் போலிருக்கிறது. நிச்சயமாக நாம் பயன்படுத்தலாம் என்று சொன்னார். அதன்படி அவருக்கு ஜூலி என்ற பாட்டும், சூலம் சூலம் என்ற பாட்டும் எழுதும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அப்போது அவர் நிழல்கள் படத்திற்கும் பாடல்கள் எழுதினார். அந்த படத்தை பாரதிராஜா இயக்கியிருந்தார் அப்போது பாரதிராஜா  மார்க்கெட்டிங் உச்சத்தில் இருந்த நேரம். ஆகையால் அவர் படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்துமே பட்டி தொட்டி ஹிட் ஆகும். 

அந்த வகையில்,  நிழல்கள் படத்தில் வைரமுத்து எழுதிய பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தன.அந்த படம் ரிலீஸ் ஆன அடுத்த மாதம் சூலம் படம் ரிலீஸ் ஆனது. இதற்கிடையே நிழல்கள் திரைப்படம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில், வைரமுத்து தான் பாடல்கள் எழுதிய முதல் படம் நிழல்கள் என்று பத்திரிகைகளில் கூற ஆரம்பித்து விட்டார். இது அப்பாவிற்கு  கோபத்தை உண்டாக்கி விட்டது. 

இதையடுத்து அவர் வைரமுத்துடன் இனி பணியாற்றது கூடாது என்று முடிவு எடுத்து, கடைசி வரை வைரமுத்துவை தன்னுடைய பேனரில் பயன்படுத்தவே இல்லை

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.