Ashok selvan: ‘போர் தொழில்’ இயக்குநர் கதையில் அசோக் செல்வன்.. ஜோடி சேர்ந்த ப்ரீத்தி முகுந்தன் - முழு விபரம் இங்கே!
Ashok selvan: அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில் அஷோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார். - முழு விபரம் இங்கே!

தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திர நடிகராக வலம் வருபவர் அசோக் செல்வன். இவரது நடிப்பில் உருவாக இருக்கும் பெயரிடாத திரைப்படம் '#AS23 இந்தப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி இருக்கிறது.
கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில்
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில் அஷோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார்.
விக்னேஷ் ராஜா கதை எழுதி இருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் கதையை 'போர் தொழில்' எனும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற திரைப்படத்தின் இயக்குநரான விக்னேஷ் ராஜா எழுதியிருக்கிறார்.
தயாரிப்பாளராகும் அசோக் செல்வன்
இந்த படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு நீள பொழுதுபோக்கு படமாக உருவாகும் இந்த திரைப்படத்தை ஹாப்பி ஹை பிக்சர்ஸ் ( Happy High Pictures) சார்பில் தயாரிப்பாளர்கள் அஷோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
#AS23 - மீண்டும் கூட்டணி அமைக்கின்றனர்
'ஓ மை கடவுளே' எனும் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படத்தை வழங்கிய நிறுவனத்தின் இரண்டாவது படைப்பு இது என்பதாலும், 'போர் தொழில்' பட புகழ் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதி இருப்பதாலும், '#AS23 ' படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.
ஓ மை கடவுளே' படம், திருப்புமுனை படமாக அமைந்தது.
தமிழில் ‘சூது கவ்வும்’ படத்தின் மூலம் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு 'ஓ மை கடவுளே' படம், திருப்புமுனை படமாக அமைந்தது.
நல்ல வரவேற்பை பெற்ற போர்தொழில்
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'போர் தொழில்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வனும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர்.
புளூ ஸ்டார் படம் பெரிய வெற்றியைப் பெற்றது
இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து செப் 13 ஆம் தேது திருநெல்வேலி, பாளையங்கோட்டை அருகே உள்ள இட்டேரியில் திருமணம் செய்து கொண்டார்கள். அசோக் செல்வன் நடிப்பில் கடைசியாக வெளியான புளூ ஸ்டார் திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
.

டாபிக்ஸ்