Tamil News  /  Entertainment  /  Ashok Selvan Keerthi Pandian Blue Star Movie Release Date Here

Ashok Selvan: ‘உந்தன் கை வீசிடும்..’ கீர்த்தி -அசோக் காம்போ; புளூ ஸ்டார் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 06, 2024 08:18 PM IST

தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு அறிவு மற்றும் உமாதேவி ஆகியோர் பாடல்கள் எழுதி இருக்கின்றனர்.

அசோக் செல்வன்!
அசோக் செல்வன்!

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு அறிவு மற்றும் உமாதேவி ஆகியோர் பாடல்கள் எழுதி இருக்கின்றனர். இந்தப்படத்தில் ஜோடியாக நடித்த கீர்த்தி பாண்டியனும், அசோக் செல்வனும் ரியல் லைஃபிலும் ஜோடியாக இணைந்திருக்கின்றனர். குறிப்பாக இந்தப்படத்தில் இருவரும் நடித்த ‘உந்தன் கை வீசிடும்’ பாடல் சமூகவலைதளங்களில் வைரலானது. இந்தப்படம் வரும் ஜனவரி 25ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இயக்குநர் பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஜெய்குமார் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இளைஞர்கள் வாழ்வில் நீங்கா இடம் பிடித்துள்ள கிரிக்கெட் மற்றும் அதைச்சுற்றி நடக்கும் நட்பு காதல் என்று முழுக்க ஜனரஞ்சகமான படமாக புளூ ஸ்டார் உருவாகியிருக்கிறது. இந்தப்படத்தை சக்தி ஃபிலிம் பேக்டரி வெளியிடுகிறது.

தன்னுடைய கணவர் அசோக் செல்வன் பற்றி கீர்த்தி பாண்டியன் முன்னதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழுக்கு அளித்த பேட்டி!

அந்த பேட்டியில் தன்னுடைய கணவர் அசோக் செல்வனை பற்றி பேசிய அவர், “ அடிப்படையிலேயே அசோக் ரொம்ப ரொம்ப மரியாதையான ஆள். மனிதர்களோட எண்ணங்களும், கருத்துக்களும் அவர்களுக்கு சொந்தமானது அப்படிங்கிறது அவரோட தாட். அத, அந்த மரியாதையோடு விட்டுடுவார்.

அதுக்குள்ள தேவையில்லாம மூக்க நுழைச்சு, அவங்க ஏன் அப்படியெல்லாம் யோசிக்கிறாங்கன்னு நினைக்காம, எல்லாத்தையும் ஏத்துக்குவார்.

அவருக்கு ரொம்ப இரக்க குணம். அவருக்கு உண்மையில கோல்டன் ஹார்ட். இது 100 சதவீதம் உண்மைங்க. அத நான் பல நேரத்துல பார்த்து இருக்கேன். உண்மையிலேயே அசோக் ரொம்ப ஒரு அழகான ஆன்மா!

அவருகிட்ட நிறைய நல்ல குணங்கள் இருக்கு. நான் அதுல டாப் 3 குணங்கள இங்க சொல்றேன். அசோக் ரொம்ப ரொம்ப உறுதியான மனுஷன். அது வாழ்க்கையா இருந்தாலும் சரி, தொழிலா இருந்தாலும் சரி, அவ்வளவு உறுதியா இருப்பார்.

ரொம்ப உண்மையா இருப்பார். அவருடைய எண்ணத்துல, செயல்ல அப்படின்னு, எல்லாத்துலேயும் ஒரு உண்மை தன்மை இருக்கும்.

இப்ப சொல்ற இந்த குவாலிட்டி, நான் அவர்கிட்ட ரொம்ப வியந்து பார்த்தது.

அவர்கிட்ட நிறைய மெனக்கெடல் இருக்கும்.இந்த 10 வருஷத்துல நிறைய விஷயங்களுக்கு அவர் மெனக்கெட்டு இருந்துருக்கார்.

இப்போ கல்யாணம் முடிஞ்சு ஒரே வீட்ல இருக்கோம். வீட்ல சமைப்பது, சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவது அப்படின்னு எல்லா விஷயத்தையும் பிரிச்சு வேலை செய்றோம். ஆனால் அவர் இதையெல்லாம் செஞ்சதே கிடையாது.

ஆனா, அவருக்கு நாமதான் பார்த்துக்கணும் அப்படிங்கிற புரிதல் தானாவே இருக்கு. நான் ரொம்ப சுத்தம் பார்ப்பேன். எனக்கு எடுத்த பொருளை எடுத்த இடத்துல வைக்கணும். ஆனா, அசோக் அதுக்கு அப்படியே ஆப்போசிட்!

ஆனால் அதையெல்லாம் தூக்கி போட்டுட்டு மெனக்கெடுறார். அவருக்கு ஒன்னு பிடிச்சிருச்சுன்னா போதும், அதுக்காக ரொம்ப மெனக்கெடுவார். இது எங்க உறவு மட்டுமல்ல, குடும்பத்திற்கு இதே போல செய்றார்.” இவ்வாறு அவர் பேசினார்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.