Ashok Selvan Marriage: நெனச்சபடி நெனச்சபடி.. கீர்த்தி பாண்டியனை கரம்பிடித்த அசோக் செல்வன்
அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியனுக்கு இன்று திருமணம் நடைபெற்றது.

தமிழில் சூது கவ்வும் படத்தின் மூலம் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு 'ஓ மை கடவுளே' படம், திருப்புமுனை படமாக அமைந்து. இதனை தொடர்ந்து பீட்சா 2, தெகிடி, சவாலே சமாளி, மன்மத லீலை, ஹாஸ்டல்,சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'போர் தொழில்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சரத்குமார், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். விமர்சனரீதியாக மட்டுமல்லாமல் வசூலிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதற்கிடையில் அருண் பாண்டியனின் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனும் அசோக் செல்வனும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர்.
இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்நிலையில இவர்களின் திருமணம் இன்று (செப் 13 ) திருநெல்வேலி, பாளையங்கோட்டை அருகே உள்ள இட்டேரியில் நடந்தது.
அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களே கலந்து கொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பின்னர் நடத்தப்படும் என கூறப்படுகிறது. புது மண தம்பதிக்கு ரசிகர்கள், திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இவர்களின் திருமணம் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கீர்த்தி பாண்டியன் தும்பா, அன்பிற்கினியாள் உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்