Tamil News  /  Entertainment  /  Ashish Vidyarthi First Wife Piloo Breaks Silence After His Second Wedding He Never Cheated On Me
Ashish Vidyarthi first Piloo (Right)
Ashish Vidyarthi first Piloo (Right)

Piloo Vidyarthi: ‘அவர் இல்லாமல் இந்த முடிவை எடுத்திருக்க முடியாது; பிரிவுக்கு இதுதான் காரணம்? -ஆஷிஷ் முதல் மனைவி பேட்டி!

26 May 2023, 16:42 ISTKalyani Pandiyan S
26 May 2023, 16:42 IST

இது நான் முன்பு உணராத ஒன்றாக இருக்கிறது. ஒருவேளை முன்பு இது இருந்திருக்கலாம். ஆனால் அதை வெளிப்படுத்த எனக்கு மனமில்லை. ஒரு படைப்பாளி என்ற முறையில் என்னால் நான் நினைத்ததை செய்ய முடிந்தது. யாரும் என்னைத்தடுக்க வில்லை.

2001 ஆம் ஆண்டு வெளியான ‘தில்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஆஷிஷ் வித்யார்த்தி. அதன் பின்னர் பல்வேறு திரைப்படங்களில் வில்லனாகவும், குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்த இவர் பல்வேறு மொழிகளில் 300க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

தன்னுடைய பெயரில் யூடியூப் பக்கம் தொடங்கிய ஆஷிஷ் அதில் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் திடீரென்று 60 வயதான ஆஷிஷ் நேற்றைய தினம் (25 -05-2023) ரூபாலி பருவா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின. கூடவே விமர்சனங்களும் வந்து விழுந்தன. 

ரூபாலி பருவாவுடன் ஆஷிஷ்!
ரூபாலி பருவாவுடன் ஆஷிஷ்!

இந்த நிலையில் ஆஷிஷ் வித்யார்த்தி முதல் மனைவி ராஜோஷி பருவா ஹிந்துஸ்தான் டைம்ஸ் இணையதளத்திற்கு பிரத்யேக பேட்டியளித்து இருக்கிறார்.

அதில் ராஜோஷி பருவா அவர் பேசும் போது, “ கடந்த 2021 ஆம் ஆண்டு நாங்கள் இருவரும் தத்தமது வழிகளில் செல்ல முடிவெடுத்தோம். அதன் பின்னர் இருவரும் மகிழ்ச்சியாகவே இருந்தோம். கடந்த அக்டோபர் மாதம் விவாகரத்திற்கு விண்ணப்பித்தோம். நாங்கள் விவாகரத்து செய்து கொண்டதை மக்களுக்கு சொல்ல தேவையில்லை என்று நினைத்தோம்.

முதல் மனைவியுடன்!
முதல் மனைவியுடன்!

நாங்கள் இப்போது வரை நல்ல நண்பர்களாக இருந்து வருகிறோம். கடந்த 22 வருடங்கள், என்னுடைய வாழ்க்கையின் மிகச்சிறந்த பகுதியாக இருந்துள்ளன. அவரும் இதையேதான் சொல்வார் என்று நினைக்கிறேன்.

எங்களுக்குள் நிறைய விஷயங்கள் ஒத்துப்போகின. இருப்பினும் சில தேர்வுகள் எங்களுக்குள் வித்தியாசப்பட்டன. ஆனால் அது குறித்து எங்களுக்குள் சண்டை வந்தது கிடையாது. எங்களுக்கு அழகான மகன் ஒருவன் இருக்கிறான். அவன் வெளிநாட்டில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறான்.

எங்கள் பிரிவிற்கு என்ன காரணம் என்று கேட்கிறீர்கள்?

இது நான் முன்பு உணராத ஒன்றாக இருக்கிறது. ஒருவேளை முன்பு இது இருந்திருக்கலாம். ஆனால் அதை வெளிப்படுத்த எனக்கு மனமில்லை. ஒரு கலைஞர் என்ற முறையில் என்னால் நான் நினைத்ததை செய்ய முடிந்தது. யாரும் என்னைத்தடுக்க வில்லை. 

ஆனால் நான் ஆராய்ந்த போது என்னுடைய அழைப்புகளை நான் உணர்ந்தேன். அப்போது எனது மற்றும் என்னுடைய மகனின் எதிர்கால ஆசைகள் வேறு என்பதை புரிந்து கொண்டேன். அதே போல எதிர்காலத்தில் அவர் எதை விரும்புகிறாரோ அவருடைய கனவுகளை நிறைவேற்ற அவருக்கு எல்லா உரிமையும் உள்ளது. இந்த முடிவை அவர் இல்லாமல் என்னால் எடுத்திருக்க முடியாது. அவர் இதனை அழகாக கையாண்டு எங்கள் இருவருக்கும் அதனை எளிமையாக்கி விட்டார். அவர் என்னை ஏமாற்ற வில்லை” என்று பேசினார்.

டாபிக்ஸ்