தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Arvind Swamy And Mammooty Starrer Pudhayal Movie Completed 27 Years Of Its Release

27 Years of Pudhayal: காமெடி அவதாரம் எடுத்த அரவிந்த் சாமி! சிறந்த டைம் பாஸ் படமாக இருந்து வரும் புதையல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 30, 2024 05:10 AM IST

ரொமாண்டிக் ஹீரோவாக இருந்து வந்த அரவிந்த் சாமி புதையல் படத்தில் காமெடி அவதாரம் எடுத்து படம் முழுவதிலும் வித்தியாசமாக நடித்திருப்பார்.

புதையல் படத்தில் அரவிந்த் சாமி, கவுண்டமணி, மம்முட்டி
புதையல் படத்தில் அரவிந்த் சாமி, கவுண்டமணி, மம்முட்டி

ட்ரெண்டிங் செய்திகள்

மலையாள சூப்பர் மம்முட்டி மற்றொரு ஹீரோவாக நடித்திருப்பார். சாக்‌ஷி ஷிவாநந்த், ஆம்னி, ரூபாஸ்ரீ, மணிவண்ணன், உதய் பிரகாஷ் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். தளபதி படத்துக்கு பின்னர் அரவிந்த் சாமி, மம்முட்டி இணைந்து நடித்த படமாக புதையல் உள்ளது. 

அகழ்வாராய்ச்சி பணியில் பல அரிய பொக்கிஷங்கள் கொண்ட புதையல் இருப்பது தெரிந்து அரவிந்த் சாமியும், தீவிரவாத கும்பலும் பயணிக்க இறுதியில் புதையல் யாருக்கு கிடைத்தது என்பதே படத்தில் ஒன்லைன். படத்தில் ராணுவ வீரராக வரும் மம்முட்டி, ராணுவத்துக்கு எதிராக தீவிரவாதிகள் செய்யும் சதியை முறியடிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்த படத்துக்கு முன்பு வரை ரொமாண்டிக் ஹீரோவாக வலம் வந்த அரவிந்த் சாமி காமெடி கலந்த ஹீரோ வேடத்தில் தோன்றியிருப்பார். கோடிஸ்வரன் என்ற கதாபாத்திரத்தில் பாடி லாங்குவேஜ், டயலாக் மாடுலேஷன் என மாற்றம் செய்திருப்பதோடு, ஸ்லாப்ஸிடிக் காமெடியிலும் கலக்கியிருப்பார். ஆனால் அரவிந்த் சாமியின் இந்த பரிணாமம் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை.

வழக்கமான காமெடி படத்தில் கொஞ்சம் காதல், செண்டிமெண்ட், ஆக்‌ஷன் கலந்து போர் அடிக்காத வகையில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் படம் அமைந்திருக்கும். சிறந்த டைம் பாஸ் படமாக இருந்தாலும் சராசரி வெற்றியை பெற்ற படமாக அமைந்தது.

வைரமுத்து பாடல் வரிகளில் புதையல் படத்துக்கு வித்யாசாகர் இசையமைத்திருப்பார். ஒச்சம்மா ஒச்சம்மா என்ற பாடல் அந்த காலகட்டத்தில் ரிப்பீட் மோடில் கேட்கப்பட்ட பாடலாக அமைந்தது. எனக்கும் உனக்கும் பொருத்தம், தீம் தக்க ராஜ குமாரன் வந்தான், பாபா பாபா போன்ற படத்தின் பிற பாடல்களும் ஹிட்டாக அமைந்தன.

சிறந்த டைம்பாஸ் படமாக இருந்து வரும் புதையல் படம் வெளியாகி இன்றுடன் 27 ஆண்டுகள் ஆகிறது. இதே பெயரில் சிவாஜி கணேசன் - பத்மினி நடித்து கிருஷணன் பஞ்சு இயக்கத்தில் 1957இல் வெளியானது. அந்த படம் அட்வெண்டர் த்ரில்லராக அமைந்திருந்த நிலையில், அதே பாணி கதையை கொண்ட அரவிந்த் சாமி நடித்த புதையல் காமெடி த்ரில்லர் படமாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.