Arunraja Kamaraj: ‘என்ன காதலிச்ச முதல் பொண்ணு.. அவ்வளவு அடிதடி.. அவ இல்லாம..’ - அருண்ராஜா காமராஜ்!
நான் பல பேரை ஒருதலையாக காதலித்து இருக்கிறேன். உண்மையில் என்னை காதலித்த பெண் என்றால், அது சிந்துஜா தான். எங்களுக்குள் நிறைய பிரேக்கப் நடந்து இருக்கிறது. ஒரே பெண்ணுடன் 10, 15 தடவை எல்லாம் எனக்கு பிரேக்கப் ஆனது.

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ். பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட இவர் கனா திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். தொடர்ந்து நெஞ்சுக்கு நீதி, லேபிள் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இவரது காதல் மனைவி சிந்துஜா. இவர் கொரோனா தொற்று ஏற்படு சிகிச்சை பலன்றி உயிரிழந்தார். இந்த நிலையில் தன்னுடைய மனைவி பற்றி ரெட்நூல் சேனலுக்கு அருண்ராஜா அண்மையில் பேட்டி அளித்திருக்கிறார்.
அந்த பேட்டியில் அவர் பேசும் போது, “நான் பல பேரை ஒருதலையாக காதலித்து இருக்கிறேன். உண்மையில் என்னை காதலித்த பெண் என்றால், அது சிந்துஜா தான். எங்களுக்குள் நிறைய பிரேக்கப் நடந்து இருக்கிறது. ஒரே பெண்ணுடன் 10, 15 தடவை எல்லாம் எனக்கு பிரேக்கப் ஆனது.
பிரேக் அப் ஆகும் மீண்டும் நாங்கள் சேர்வோம். மீண்டும் பிரேக்கப் ஆகும். மீண்டும் நாங்கள் சேர்வோம். எங்களுக்குள் அடிதடி எல்லாம் நடந்திருக்கிறது. அது என் வாழ்வினுடைய ஒரு பகுதியாக இருந்தது. ஆனால் அடுத்த முறை பேசும் போது, அப்படியான சண்டை நடந்தது போலவே நாங்கள் நடந்து கொள்ள மாட்டோம். ஒரு கட்டத்தில் எங்கள் இரண்டு பேருக்குமே புரிந்தது. என்னதான் எங்களுக்குள் சண்டை வந்தாலும், ஒருவர் இல்லாமல் ஒருவரால் இருக்க முடியாது என்பது.