தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Arun Vijay Visits Tiruchendur Murugan Temple After Mission Chapter 1 Hit

Arun Vijay: மிஷன் சேப்டர் 1 வெற்றி, வணங்கான் அப்டேட்..! திருச்செந்தூர் கோயிலில் அருண் விஜய் சாமி தரிசன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 12, 2024 03:55 PM IST

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் அருண் விஜய், அங்கு அவரை காண கூடியிருந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துகொண்டார்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அருண் விஜய் சாமி தரிசனம்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அருண் விஜய் சாமி தரிசனம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த படம் தந்த வெற்றியின் மகிழ்ச்சியடைந்திருக்கும் அருண் விஜய், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். திருச்செந்தூர் கோயில் அருண் விஜய் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைலராகியுள்ளது.

அருண் விஜய் கோயிலுக்கு வந்திருப்பதை அறிந்து கொண்ட பொதுமக்கள், ரசிகர்கள் பலரும் அவரை நேரில் சென்று பார்த்து, புகைப்படம் எடுத்து கொண்டனர். அதேபோல் ரசிகர்களுடன் அருண் விஜய் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.

மிஷன் சேப்டர் 1 படத்தில் எமி ஜாக்சனுடன் இணைந்து நடித்திருப்பார் அருண் விஜய். ஜெயிலில் இருக்கும் தந்தை தனது மகளின் ஆபரேஷனை செய்து அவரை காப்பாற்ற முயற்சிப்பது படத்தின் கதை. படத்தில் பிரதான கதாபாத்திரங்களில் நிமிஷா சஜயன், அபி ஹாசன், பாரத் போபண்ணா உள்பட பலரும் நடித்திருப்பார்கள். படம் தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது

அருண் விஜய் தற்போது இயக்குநர் பாலா இயக்கி வரும் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த படத்தில் ரோஷிணி பிரகாஷ் ஹீரோயினாக நடித்து வருகிறார். சமுத்திரகனி முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பொங்கலுக்கு ரிலீசான படங்கள் அனைத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ஒவ்வொரு படங்களாக தற்போது ஓடிடியில் வெளியாகி வருகிறது. ஏற்கனவே தனுஷ் நடித்த கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடித்த அயலான் படங்களில் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து ஏ.எல். விஜய் இயக்கத்தில் ஆக்‌ஷன் கலந்த எமோஷனல் படமாக உருவாகியிருக்கும் மிஷன் சேப்டர் 1 படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 16ஆம் ஸ்டிரீம் ஆக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

arun vijay in tiruchendur temple'Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.