Arun Vijay: அருண் விஜய் ஜாதகத்தில் பிரச்சனை.. முன்பே எச்சரித்த தாய்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Arun Vijay: அருண் விஜய் ஜாதகத்தில் பிரச்சனை.. முன்பே எச்சரித்த தாய்

Arun Vijay: அருண் விஜய் ஜாதகத்தில் பிரச்சனை.. முன்பே எச்சரித்த தாய்

Aarthi Balaji HT Tamil
Jan 19, 2024 10:09 AM IST

நடிகர் அருண் விஜய் தான் காதலில் விழாமல் போனதற்கு என்ன காரணம் என கூறினார்.

அருண் விஜய்
அருண் விஜய்

இந்த படம் பொங்கல் வெளியீடாக தற்போது திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் எமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் நடித்து உள்ளனர்.

இதனிடையே சமீபத்தில் கலாட்டா தமிழ், யூடியூப் சேனலில் அருண் விஜய் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவரிடம் பள்ளி நாட்களில் காதல் இருந்ததா? லவ் கடிதம் வந்து இருக்கிறதா? என கேள்வி எழுப்பட்டு இருந்தது.

அப்போது பேசிய அருண் விஜய், “ அதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை. படித்தது முழுவது ஆண் பள்ளிக் கூடும். அதற்கு முன்பே என் அம்மா செக் வைத்துவிட்டார். ஜாதகத்தில் இருக்கிறது பெண்களுடன் நீ நிறைய பழக கூடாது. 

பிரச்னையாகிவிடும். அது எல்லாமே உன் ஜாதகத்தில் இருக்கிறது. நான் நடிக்க வரும் முன்பே இதை எல்லாம் சொல்லிவிட்டார். கல்லூரி படிக்கும் போதே சொல்லிவிட்டார். இப்போது தான் எல்லாமே புரிந்தது. எங்க அம்மா சும்மா பயம் செய்ய சொல்லி இருக்கிறார் என்று தெரிந்தது. அதனாலேயே தான் நான் லவ் பண்ணல” என்றார்.

தொடர்ந்து பேசிய அவரின் சகோதரி கவிதா, “ சின்ன வயதில் இருந்தே அம்மா பார்க்கும் பெண்ணை தான் திருமணம் செய்ய வேண்டும் என சொல்லி இருக்கிறோம். திருமணத்திற்குப் பெண் காண்பிக்கும் போது எல்லாம் வேண்டாம், வேண்டாம் என சொல்லிவிடுவார். சரி நீயே பார்த்து கொள் என சொல்ல உடனே அருண் விஜய், இவ்வளவு நாள் பார்க்க வேண்டாம் என சொல்லிவிட்டு பார்க்கச் சொன்னால் நான் எங்கே செல்வேன். அதற்கு பிறகு அப்பா, அம்மா பார்த்த முதல் பொண் தான் ஆர்த்தி. இப்போது மிகவும் மகிழ்ச்சியாக சென்று கொண்டு இருக்கிறது " என சொல்லி புலம்பி உள்ளார். 

விஜய குமாரின் குடும்பம் மிகவும் பெரியது. அவருக்கு இரண்டு மனைவிகள். இதில் மூத்த மனைவிக்கு அனிதா, கவிதா, அருண் விஜய் ஆகிய மூன்று பிள்ளைகள். இரண்டாவது மனைவிக்கு ஸ்ரீதேவி, ப்ரீத்தா, வனிதா ஆகிய மூன்று மகள்கள் இருக்கிறார்கள்.

என்னை அறிந்தால் படம் மூலம் இவருக்கு ஹிட் கிடைத்தது. கடந்த ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த, சாஹோ என்ற படத்தில் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

நன்றி: கலாட்டா தமிழ் 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.