Tamil News  /  Entertainment  /  Arun Vijay Emotional Post About The Success Al Vijay Of Mission Chapter 1

Arun Vijay: படுத்த படுக்கையாக்கிய ஆக்‌ஷன்; தாங்கி பிடித்த அப்பா!‘2 மாத வலி.. ஆனா உங்க அன்பு’ - அருண்விஜய் எமோஷனல்!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 22, 2024 03:05 PM IST

அருண் விஜய் எமோஷனலான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அருண் விஜய்!
அருண் விஜய்!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கதாநாயகன் அருண் விஜய் எமோஷனலான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்த பதிவில், “ மிஷன் சாப்டர் 1 படத்திற்கு நீங்கள் கொடுத்த மாபெரும் வெற்றி, சண்டைக்காட்சிகளில் நடிக்கும் போது எனக்கு ஏற்பட்ட எலும்பு முறிவுகள் மற்றும் தசைநார் கிழிந்ததால் கடந்த 2 மாதங்களாக நான் அனுபவித்த வலியை மறக்கச் செய்தது. உங்களது அன்பு என்னை மீண்டும் அதிக வலிமையாக மாற்றி ஆக்‌ஷனில் விரைவில் களமிறக்கும்” என்று பதிவிட்டு இருக்கிறார்.

 

முன்னதாக, தமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டான மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த விளையாட்டிற்கு திரைபிரபலங்கள் பலர் வருகை தந்திருந்தனர். அந்த வகையில் மதுரையில் தன்னுடைய மிஷன் திரைப்படத்திற்கு மக்களின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை பார்ப்பதற்காக வந்திருந்த நடிகர் அருண் விஜய் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அவர் பேசும் போது, “ தமிழர்களுடைய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அலங்காநல்லூரில் நேரடியாக பார்ப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய மிஷன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த படம் தொடர்பான தியேட்டர் விசிட்டுக்காகதான் மதுரை வந்திருந்தேன்.

அப்படியேதான் இந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றேன். எனக்கு நீண்ட நாட்களாக ஜல்லிக்கட்டு சம்பந்தமாக ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. என்னுடைய படங்களில் வரும் ஆக்சன் காட்சிகளில் டூப் போடக்கூடாது என்று நான் நினைப்பேன். அப்படிதான் மிஷன் படத்திலும் நான் நடித்திருக்கிறேன்.

தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்க கூடிய கதைகளில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது. உலகம் முழுவதும் இந்த விளையாட்டு அவ்வளவு பிரபலமாக இருக்கிறது.

கையில் அடிபட்டது ஏன்?

கையில் அடிபட்டது குறித்து கேட்கிறீர்கள், நான் தற்போது பாலா சாரின் வணங்கான் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன் அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது அடிபட்டு விட்டது. இரண்டு மாதமாக நான் பெட் ரெஸ்டில் தான் இருக்கிறேன்.பத்து நாட்களில் நான் சரியாகி விடுவேன்” என்று பேசினார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.