BiggBossTamil8: நீ முன்னால போனா.. நான் பின்னாடி வாரேன்.. அடுத்தடுத்து எவிக்ட் ஆகும் அருண் மற்றும் தீபக்.. கசிந்த தகவல்
BiggBossTamil8: நீ முன்னால போனா.. நான் பின்னாடி வாரேன்.. அடுத்தடுத்து எவிக்ட் ஆகும் அருண் மற்றும் தீபக்.. கசிந்த தகவல் குறித்து பார்ப்போம்.
BiggBossTamil8: பிக்பாஸ் சீசன் தமிழ் 8 நிகழ்ச்சியில் 97ஆவது போட்டியில், பங்கேற்பாளர்களான அருண் மற்றும் தீபக் இருவரும் அடுத்தடுத்து எவிக்ட் ஆகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியின் பிரதான நிகழ்ச்சியான பிக்பாஸ் 8, அக்டோபர் மாதம் 2024ல் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை கடந்த 7 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த முறை “ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” என நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8ஆவது சீசன் அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கி, பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது.
இதில் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் 24 மணி நேரத்தில் சாச்சனா முதல் போட்டியாளராக எலிமினேட் செய்யப்பட்டார். பின்னர் அடுத்தவாரமே மீண்டும் என்டிரி கொடுத்தார்.
வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தவர்களாவது பிக்பாஸ் வீட்டினை சுவாரசியமாக மாற்றுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், அவர்கள் நிகழ்ச்சியை இன்னும் சொதப்பி வந்தனர். இதனால், பிக்பாஸ் மீதான விருப்பம் மக்கள் மத்தியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது.
இப்படி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, அன்சிதா, சிவக்குமார், மஞ்சரி உட்பட பலர் அடுத்தடுத்து எலிமினேட் ஆகினர்.
இந்நிலையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி, 97ஆவது நாளை எட்டியிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் எவிக்ட் ஆகி சென்றவர்கள் மீண்டும் சிறப்பு விருந்தினர்களாக பிக்பாஸ் இல்லத்துக்குள் வந்து வெளியில் என்ன பேசுகிறார்கள் எனக் கருத்து உரைத்தனர்.
அடுத்தடுத்து வெளியான மூன்று புரோமோக்கள்:
விஜய் டிவியின் இன்றைய புரோமோவில் விஜய் சேதுபதி, ‘பிக்பாஸ் என்பது பிரயாணம். வெளியில் போனவங்க, திரும்ப உள்ள வரும்போது, தகுதியான நான் வெளியில் போயிட்டேன், தகுதியே இல்லாத இவங்க உள்ள இருக்காங்களே. எனக்கு இந்த வாய்ப்பு இருந்திருக்குமே. கிடைக்காமப்போச்சே ஏன் அப்படின்னு இவங்க மேல் இருந்த வன்மத்தை மக்கள் கருத்து என்கிற பெயரில் திணிச்சுவிடுறாங்க. இவ்வளவுதூரம் போராடி வந்த நம்ம போட்டியாளர்கள், மெச்சூரிட்டியோட அவங்க ஆட்டத்தை எப்படி ஆடியிருக்காங்க. மனநிலையில் எப்படியிருக்காங்க என்பதைப் பற்றிப் பேசுவோம்’ எனத் தெரிவித்து இருக்கிறார்.
அடுத்த புரோமோவில் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருப்பவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. அதில், எலிமினேட் ஆகி பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தவர்கள் எப்படி விளையாண்டனர் என விஜய்சேதுபதி கேட்கிறார். அதற்கு முதலில் பதில் அளித்த ஜாக்குலின், ‘’ வரும்போது சுடுற மாதிரியே வந்தாங்க சார். பார்க்கிறதுக்கே ஒரு மாதிரி பயமா இருந்துச்சு சார்’’ என்றார். அதனைத்தொடர்ந்து பேசிய அருண், ‘ஒரு கட்டத்தில் எப்படி ஆகிடுச்சுனா பேசுறதுக்கு கன்டென்ட் இல்லாமல், நீ இவங்களைப் பத்தி என்ன நினைக்கிற அப்படின்னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க’ எனத் தெரிவிக்கிறார்.
உடைத்துப் பேசிய சவுந்தர்யா:
அதைத்தொடர்ந்து பேசிய சவுந்தர்யா, ‘’ இவங்க தான் ஜெயிக்கணும் அப்படிங்கிற மாதிரி இருந்தது எனக்கு’’ என்றார். அதைத்தொடர்ந்து பேசிய முத்துக்குமரன், ‘’ எல்லாப் பக்கம் இருந்தும் கற்கள் வரும்போது தடுக்கிறது எப்படின்னு பிக்பாஸ் ஏற்படுத்திக்கொடுத்துச்சு’’ என்றார்.
அடுத்து மூன்றாவது புரோமோவில், இந்த வார எவிக்ஷனில், இவர் தான் விஜய்சேதுபதி அறிவிக்கிறார். அதில் இன்றைய பிக்பாஸ் தமிழ் சீசன் 8ஆவது 97ஆவது நாளின் சனிக்கிழமையில் அருண் எவிக்ஷன் ஆகியிருக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 98ஆவது நாளான நாளை ஞாயிற்றுக்கிழமையில் தீபக் எவிக்ட் ஆவதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
டாபிக்ஸ்