16 Years of Thotta: தந்தையால் புறந்தள்ளப்பட்ட சிறுவனின் ரவுடி அவதாரமும் அவனது நன்றியுணர்வும் தான் 'தோட்டா’!
தோட்டா திரைப்படம் வெளியாகி 16ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது. அப்படம் தொடர்பான கட்டுரை..

இயக்குநர் செல்வா இயக்கத்தில் , நடிகர் ஜீவன், பிரியா மணி, மல்லிகா, சம்பத் ராஜ், ஹேமா செளத்ரி, சரண் ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் தோட்டா. இப்படல் லீப் வருடமான 2008ஆம் ஆண்டு, பிப்ரவரி 29ஆம் தேதி வெளியாகி, சராசரி வெற்றியைப் பெற்றது.
தோட்டா திரைப்படத்தின் கதை என்ன?: வெகுநாட்களாக வீட்டுக்கு வராத தந்தையைத் தேடி, சண்முகம் என்னும் சிறுவன், தன் தாயுடன் சென்னைக்கு வருகிறார். இங்கு வந்து பார்க்கும்போது, அவர் வேறு ஒரு மனைவியுடன் வசித்து வருகிறார். அதன்பின், தனது முதல் மனைவியைக் கொல்லும் அந்த கணவர், தனது மகன் சண்முகத்தையும் வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். அப்போது, தன் தாயின் சவத்துடன் இருக்கும் குழந்தை சண்முகத்துக்கு ஆட்டோ ஓட்டுநர் சந்திரசேகர் உதவி புரிகிறார். பின், கொஞ்சம் பணத்தைக் கொடுத்து, அவரது சொந்த ஊருக்கு அனுப்புகிறார்.
சண்முகத்துக்கும் பெரிய ஆள் ஆகவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக லஞ்சம் அதிகம் வாங்கும், போலி செயல்கள் செய்யும் போலீஸ்காரர்களிடம் மாட்டுகிறான். அதனால், அவர்களது வேலைக்கு, சண்முகத்தினை பயன்படுத்துகின்றனர். மேலும், அவனுக்கு தோட்டா எனப்பெயர் வைத்து அழைக்கின்றனர். டிசிபி முத்துவேல் எக்கச்சக்கமான என்கவுன்ட்டர்களை, தோட்டா சண்முகத்தை வைத்துமுடித்துவிட்டு, புரோமோசனை பெற்றுக்கொள்கிறார். அப்போது, நளினா மீது ஆசிட் அடிக்கச் சொல்கிறார், டிசிபி ஆக இருந்து கமிஷனரான முத்துவேல். ஆனால், அந்தப் பெண், தனக்கு தன் தாய்க்கு இறுதிச்சடங்கு செய்ய உதவிய ஆட்டோ ஓட்டுநரின் மகள் என்று, தோட்டா சண்முகத்துக்கு தெரிகிறது. பின் அக்குடும்பத்துக்கு உதவ முடிவு எடுக்கிறார்.
நளினாவுக்கும் தான் ஒரு பெரிய போலீஸ் அலுவலர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. தோட்டா சண்முகமும் கமிஷனரிடம் பேசி, அதற்காக உதவுவதாக சொல்கிறார். இந்த வேலைக்காக அமைச்சர் மணிமாறனுக்கு போட்டியான அமைச்சரை கொல்கிறார், தோட்டா சண்முகம். இதனிடையே வேலை தொடர்பான முயற்சிகளில் ஈடுபடும் நளினாவுக்கு பாலியல் கொடுமைகளை செய்கிறார், முத்துவேல். இதனால் சண்முகம் முத்துவேலுக்கு பணிசெய்வதை நிறுத்துகிறான்.
இதற்கிடையே திருந்தி வாழ ஆசைப்படும் சண்முகத்தின் நண்பன் கிரியை, போலீஸ் கமிஷனர் முத்துவேல் கொல்கிறார். இதனிடையே இன்னொரு சிபிஐ அலுவலர் பிரபாகர் தோட்டா சண்முகத்தை உயிருடன் பிடிக்க முயல்கிறார். ஆனால், போலீஸ் கமிஷனர் கொலை செய்ய முயற்சிக்கிறார். இறுதியில், தோட்டா சண்முகம் எப்படி தப்புகிறார், நளினா எப்படி போலீஸ் ஆகிறார் என்பதே படத்தின் மீதிக்கதை.
இப்படத்தில் தோட்டா சண்முகமாக நடிகர் ஜீவன் நடித்திருந்தார். நளினாவாக பிரியாமணியும், முத்துவேலாக சம்பத் ராஜூம் நடித்து இருந்தனர். நளினாவின் தந்தை ஆட்டோ டிரைவராக வாகை சந்திரசேகரும், அமைச்சர் மணிமாறனாக லிவிங்ஸ்டனும், சண்முகத்தின் தந்தையாக ராஜ்கபூரும் நடித்து இருந்தனர். சிபிஐ அலுவலராக சரண் ராஜ் நடித்திருந்தார்.
படத்துக்கு இசையை ஸ்ரீகாந்த் தேவா செய்திருந்தார். பின்னணி இசை நன்றாக இருந்தாலும் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.
இப்படமும் அனைவரும் யூகிக்கக் கூடிய திருப்பங்களைக் கொண்டிருந்ததால் சராசரி வெற்றியை மட்டுமே பெற்றது. படத்தில் பிரியா மணி பாடல்காட்சிகளில் பிகினி உடைகளில் பெரிய அளவில் கவர்ச்சி காட்டியிருந்தார். இதனால் இப்படம் அன்றைய இளசுகள் இடையே வரவேற்பினைப் பெற்றது. மற்றபடி டிவியில் போட்டால் ஒருமுறை போரடிக்காமல் பார்க்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்