Yaaradi Nee Mohini: காதலியை கரம்பிடிக்க ஐ.டி. ஊழியராக மாறிய, சுமாராகப் படிக்கும் இளைஞரின் கதை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Yaaradi Nee Mohini: காதலியை கரம்பிடிக்க ஐ.டி. ஊழியராக மாறிய, சுமாராகப் படிக்கும் இளைஞரின் கதை!

Yaaradi Nee Mohini: காதலியை கரம்பிடிக்க ஐ.டி. ஊழியராக மாறிய, சுமாராகப் படிக்கும் இளைஞரின் கதை!

Marimuthu M HT Tamil
Apr 04, 2024 08:05 AM IST

Yaaradi Nee Mohini:யாரடி நீ மோகினி திரைப்படம் வெளியாகி 16ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது. அது தொடர்பான கட்டுரை..

யாரடி நீ மோகினி திரைப்படம் வெளியாகி 16ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது தொடர்பான கட்டுரை
யாரடி நீ மோகினி திரைப்படம் வெளியாகி 16ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது தொடர்பான கட்டுரை

யாரடி நீ மோகினி திரைப்படத்தின் கதை என்ன?: யாரடி நீ மோகினி படத்தின் கதை என்ன? ஒரு மிடில் கிளாஸ் குடும்ப இளைஞர், வாசுதேவன். வாசு என அழைக்கப்படுகிறார். வாசுவுக்கு கணேஷ் மற்றும் சீனு ஆகிய இரண்டு நெருங்கிய நண்பர்கள் உள்ளனர். வாசுவின் தந்தை ஆசிரியராக இருக்கிறார். இளைஞராக இருக்கும் வாசுவுக்கு வேலை கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. இதனால் பல மென்பொருள் நிறுவனங்களில் வேலைக்கு முயன்று தோற்றுப்போகிறார். இதனால் அவரது தந்தையிடம் அடிக்கடி திட்டு வாங்குகிறார்.

அதன்பின், கீர்த்தி என்ற பெண்ணைப் பார்க்கிறார். Love At First Sight என்பதுபோல், பார்த்தவுடன் காதலில் விழுகிறார். அதன்பின், அப்பெண் பணிசெய்யும் மென்பொருள் நிறுவனத்தில் பல்வேறு கட்ட தேர்வுகளுக்குப் பின் செயல்படுகிறார். இதனையடுத்து, கீர்த்தியுடன் ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பு வாசுவுக்குக் கிடைக்கிறது. அங்கு தான், கீர்த்தியைக் காதலிப்பதை உணர்வுகள் மூலம் வெளிப்படுத்துகிறார். அவள் தனக்கு நிச்சயம் ஆனதைச் சொல்லி அவனை நிராகரிக்கிறார்.

இதனால் சோர்வுடன் இந்தியா திரும்பும் வாசுவின் நிலையை நண்பர்கள் மூலம் அறிந்துகொண்ட, வாசுவின் தந்தை, கீர்த்தியிடம் சென்று, தனது மகனின் நிலையை விளக்க முயற்சிக்கிறார். அப்போது தெரியாமல், அவரது கை, வாசுவின் தந்தையின் கன்னத்தில் விழுந்துவிடுகிறது. இதன்மூலம் நிலைகுலைந்துபோன வாசுவின் தந்தை, அன்று இரவு மாரடைப்பால் மரணம் அடைந்துபோகிறார்.

இதற்கிடையே வாசுவின் இக்கட்டான சூழலுக்குத் தோள் கொடுக்க, வாசுவை அவரது சொந்த ஊருக்கு அழைத்துச் செல்கிறார், சீனு. அவர்கள் செல்லும் அதே ரயிலில் பயணிக்கும் கீர்த்தி தான், சீனுவுடன் நிச்சயிக்கப்பட்ட பெண் என்ற உண்மை தெரிகிறது. இதை இருவரும் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. சீனுவின் இல்லத்துக்குச் செல்லும் வாசு, அந்த வீட்டில் ஒருவராக மாறுகிறார். இதற்கிடையே கீர்த்தி, வாசுதேவனை காதலிப்பதை உணர்கிறார். அதன்பின், வாசுதேவன் கீர்த்தியின் காதலை நிறுத்திக்கொள்ளும்படி பேசுகிறார். இதை சீனு பார்த்துவிடுகிறார். அதன்பின், சீனு தனக்கு சென்னையில் முன்பே திருமணம் நடந்துவிட்டதாகக் கூறி கல்யாணத்தை நிறுத்துகிறார். அதன்பின், வாசு தனது காதல் பற்றி அந்த வீட்டில் சொல்கிறார். அதனால் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார்.

அப்போது வாசுவுடன், அவ்வீட்டில் பழகுவதற்கு கடினமான பாட்டி மட்டும் அவனுடன் செல்கிறார். அதன்பின், மெல்ல கீர்த்தியின் குடும்பத்தினர் அனைவரும் வாசுவின் சென்னை வீட்டுக்குச் சென்று கொஞ்சநாட்கள் தங்கவருகின்றனர். இதனைத் தொடர்ந்து, சீனுவின் தாத்தாவும் தான் மாற கொஞ்சம் டைம் கேட்கிறார். இறுதியில் வாசுவும் கீர்த்தியும் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் படம் முடிகிறது.

இப்படத்தில் வாசுதேவனாக நடிகர் தனுஷூம், கீர்த்தியாக நடிகை நயன்தாராவும், வாசுவின் தந்தையாக ரகுவரனும் நடித்துள்ளனர். மேலும், சீனுவாக நடிகர் கார்த்திக் குமாரும், கணேஷாக நடிகர் கருணாஸூம் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

படம் வெளியாகி 16 ஆண்டுகளை நிறைவுசெய்தாலும் இன்று டிவியில் போட்டாலும் பலரால் ரசிக்கப்படுகிறது, யாரடி நீ மோகினி.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.