Adhik Ravichandran: படம் இயக்காத தந்தையின் 20 வருட வலி.. அடல்ட் காமெடி.. நம்பி வாய்ப்பு அளித்த அஜித்.. ஆதிக்கின் கதை
Adhik Ravichandran: படம் இயக்காத தந்தையின் 20 வருட வலி.. அடல்ட் காமெடி.. நம்பி வாய்ப்பு அளித்த அஜித்.. ஆதிக்கின் கதையினை அவரது பிறந்தநாளான இன்று பார்ப்போம்.

Adhik Ravichandran: படம் இயக்காத தந்தையின் 20 வருட வலி.. அடல்ட் காமெடி.. நம்பி வாய்ப்பு அளித்த அஜித்.. ஆதிக்கின் கதையினை அவரது பிறந்தநாளான இன்று பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் வந்த வைப்ரன்ட் ஆன இயக்குநர்களில் ஒருவர், ஆதிக் ரவிச்சந்திரன். திரிஷா இல்லைனா நயன்தாரா, அன்பானவன் அடங்காதவன் அசராதவன் ஆகியப் படங்களை இயக்கி, தற்போது அஜித்தை வைத்து குட் பேட் அக்லி என்னும் படத்தை இயக்கி வருகிறார்.
யார் இந்த ஆதிக் ரவிச்சந்திரன்?:
ஆதிக் ரவிச்சந்திரன் 1990ஆம் ஆண்டு, ஜனவரி 17ஆம் தேதி பிறந்தவர். இவரது தந்தையின் பெயர் ரவிச்சந்திரன் என்கிற ரவி கந்தசாமி. ஆதிக்கின் தந்தை ரவி கடந்த இருபது வருடங்களாக திரைத்துறையில் உதவி இயக்குநராக இருந்து இருக்கிறார். ஆனால், சரியான வாய்ப்புகள் அமையாததால் ஒரு படத்தைக் கூட இயக்கமுடியவில்லை. தந்தை விட்ட இடத்தைப் பிடிக்க முயற்சித்த ஆதிக், விசுவல் கம்யூனிகேசன் படித்துவிட்டு, இயக்குநராக திரைத்துறைக்குப் போக ஆசைப்பட்டார்.
