தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  9 Years Of Demonte Colony: கதாநாயகி இல்லாத கதை.. பேயினால் இளைஞர்களுக்கு நடக்கும் டிவிஸ்ட் தான் டிமான்ட்டி காலனி

9 years Of Demonte Colony: கதாநாயகி இல்லாத கதை.. பேயினால் இளைஞர்களுக்கு நடக்கும் டிவிஸ்ட் தான் டிமான்ட்டி காலனி

Marimuthu M HT Tamil
May 22, 2024 09:33 AM IST

9 years Of Demonte Colony: கதாநாயகியே இல்லாத கதையில் பேயினால் இளைஞர்களுக்கு நடக்கும் திருப்பமே டிமான்ட்டி காலனி. இதனை நம்பி நடித்த அருள்நிதிக்கு இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. இப்படம் வெளியாகி 9 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

9 years Of Demonte Colony: கதாநாயகி இல்லாத கதை.. பேயினால் இளைஞர்களுக்கு நடக்கும் டிவிஸ்ட் தான் டிமான்ட்டி காலனி
9 years Of Demonte Colony: கதாநாயகி இல்லாத கதை.. பேயினால் இளைஞர்களுக்கு நடக்கும் டிவிஸ்ட் தான் டிமான்ட்டி காலனி

ட்ரெண்டிங் செய்திகள்

டிமான்ட்டி காலனி படத்தின் கதை என்ன?:

 

நண்பர்கள் நான்கு பேர் வேலைவெட்டி இல்லாமல் சென்னை, பட்டினப்பாக்கம் ஹவுசிங் போர்டு பகுதியில் அறை எடுத்து தங்கி இருக்கின்றனர். நான்கு பேரில் பயந்த நண்பர் ஒருத்தரை பயமுறுத்துவதற்காக, மற்ற மூன்று பேரும் டிமான்டி காலனியில் உள்ள பேய் பங்களாவுக்கு அந்த நண்பரை அழைத்துச் செல்கின்றனர்.

அந்த பங்களாவில் பிரிட்டிஷ் காலத்தில் வாழ்ந்து மரணம் அடைந்த நபர்களின் பேய்களுடன், இவர்கள் நான்கு பேருக்கும் ஏற்படும் அனுபவமும், அங்கு கிடைக்கும் ஒரு விலை மதிப்பில்லாத வைர ஆபரணத்தால் இவர்கள் நான்கு பேருக்கும் அறை திரும்பிய பின்பும் நடக்கும் விஷயங்களும் விபரீதங்களுமே 'டிமான்ட்டி காலனி'.

ஆண்டாண்டு காலமாய் தன் பங்களாவுக்குள் அமைதியாய் வாழ்ந்து வரும் டிமான்ட்டி பேயை, அந்த ஆபரணத்தை தங்களது ரூமுக்கு எடுத்து வந்ததின் மூலம் கோபப்படுத்தி விடுகிறார்கள். இவர்கள் நான்கு பேருக்கும் நிகழும் சம்பவங்களை உட்சபட்ச காட்சியாக சொல்லி இருப்பார், இயக்குநர் அஜய் ஞானமுத்து.

அதிலும் அந்த ஆபரணத்தைக் கொண்டு வருபவர்கள் கொல்லப்படுவார்கள் என நம்பப்படுகிறது. இதில் அந்த ரூமில் இருக்கும் ராகவன் மற்றும் விமல் ஆகியோர் அடுத்தடுத்து இறக்கின்றனர். மேலும் அடுத்தடுத்து அனைவரும் இறந்து பேய் ஆகின்றனர்.

 நிறைய பேய்ப் படங்களில் பல காட்சிகள் இடம்பெற்றிருந்தாலும் இதுவரை எந்த பேய்ப் படத்திலும் சொல்லாத அளவுக்கு வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும், கொஞ்சம் பிராமாண்டம் சேர்த்தும் கையாண்டிருப்பார் அஜய்.

டிமான்ட்டி காலனி படத்தில் நடித்தவர்கள் விவரம்:

 

குறிப்பாக இப்படத்தில் ஸ்ரீனிவாசனாக அருள்நிதியும், விமலாக ரமேஷ் திலக்கும், ராகவனாக சனந்தும், சஜித் வேடத்தில் அபிஷேக் ஜோசப் ஜார்ஜூம் நடித்திருந்தனர்.

கதாநாயகியே இல்லாத ஒரு படத்தில், ஒருகதையை தேர்வு செய்து பேயை மட்டுமே நம்பி, ஸ்ரீனிவாசன் என்னும் சீனி கேரக்டரில் நடித்த அருள்நிதி பலரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தார். மு.க.தமிழரசு தயாரிப்பில் உருவான இந்தப் படத்தினை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அஜய் ஞானமுத்து அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்தப்படம் வெளியாகி இன்றோடு (மே 22) 9 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 

ஆண்டுகள் உருண்டோடினாலும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இரண்டாம் பாகத்தை தயாரிக்கிறார். அருள்நிதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சாம்.சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து, ஃபோஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்