Prabhudheva: ‘இப்பவா.. பின்னரா.. வருஷங்கள் ஓடிரும்’.. நெகிழ்ந்த ரஹ்மான்! - 25 ஆண்டுகளுக்கு பின் ‘முக்காபுலா’ கூட்டணி!
நடனப்புயல் பிரபு தேவா கூறியபோது, "நடன இயக்குநர்களை ஊக்கப்படுத்திய ரஹ்மானுடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

பிரபல யூடியூப் சேனலான Behindwoods பிரபலங்களின் பேட்டிகள், சினிமா மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்வுகள் குறித்தான செய்திகளை டிஜிட்டலில் வழங்கி வருகிறது. இந்த நிலையில், இந்த நிறுவனம் தற்போது திரைப்பட தயாரிப்பிலும் களம் இறங்கி இருக்கிறது.
இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தில் பிரதேவா கதாநாயகனாக நடிக்கும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். இதன்மூலம் இந்தக்கூட்டணி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்திருக்கிறது. இந்தப்படத்தை Behindwoods நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அலுவலருமான (CEO) மனோஜ் NS இயக்குகிறார்.
இப்படத்தில் பங்காற்றுவது குறித்து பேசிய இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், "சில நல்ல யோசனை நம் மனதுக்கு வரும், அதை இப்போது செய்யலாம், பிறகு செய்யலாம் என வருடங்கள் ஓடிவிடும், இந்த திரைப்படம் அதை மீண்டும் கண்டுபிடித்து என் கவனத்தை ஈர்த்தது” என்று பேசினார்.