Sex: நீங்கள் செக்ஸ் நடத்தையில் அடிமையாகிறீர்களா? ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?
Sex: நீங்கள் செக்ஸ் நடத்தையில் அடிமையாகிறீர்களா? ஆண்கள் மற்றும் பெண்கள் இடையே நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன? என்பது குறித்துப் பேசுவோம்.
ஒரு சமீபத்திய ஆய்வின்படி, 7% க்கும் அதிகமான அமெரிக்கர்கள் பாலியல் நடத்தைகள் பற்றிய கவலைகளை ’போதை’ என்று விவரிக்கின்றனர்.
நோய்களின் சர்வதேச வகைப்பாட்டில், கட்டாய பாலியல் நடத்தைக் கோளாறு(Compulsive sexual behavior disorder (CSBD)) பற்றி விளக்குகிறது. இந்த ஆய்வு மூலம், பாலினம், வயது, பாலியல் நோக்குநிலை பற்றி, பல புதிய சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன.
கட்டாய பாலியல் நடத்தையைப் புரிந்துகொள்வது:
கட்டாய பாலியல் நடத்தைக்கோளாறு என்பது எதிர்மறையான விளைவுகளை மீறி, பாலியல் நடத்தைகளைக் கட்டுப்படுத்துவதில் இருக்கும் பிரச்னைகளைக் குறிக்கிறது.
இது குறிப்பிடத்தக்க சமூக துயரத்தை ஏற்படுத்துகிறது; இருப்பினும், நோயறிதல் விவாதத்திற்குரிய தலைப்பாக உள்ளது. கலாசார முறைகள் மற்றும் சமூக எதிர்பார்ப்புகள் பெரும்பாலும் மக்கள் தங்கள் அனுபவங்களை எவ்வாறு விளக்குகிறார்கள் என்பதைப் பொறுத்தது.
இதனை நன்கு புரிந்து கொள்ள, அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜோசுவா பி கிரப்ஸ் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் 2,800-க்கும் மேற்பட்ட 49 வயதுடையவர்களிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தினர். ஒருவருக்கு செக்ஸ் உணர்வுகள் "கட்டுப்பாட்டை மீறி இருக்கிறதா" அல்லது சிலர் "போதைக்குரியதாக" அதனை உணர்ந்தார்களா என்று கேட்கப்பட்டது.
முக்கிய ஆய்வு முடிவுகள்:
1. பாலினம் மற்றும் நடத்தை வேறுபாடுகள்:
செக்ஸ் நடத்தைகள் பற்றிய கவலைகளை 'போதை’ என்று பெண்களை (3.4%) விட, ஆண்கள் (11.8%) அதிகமாக சொல்லியிருக்கின்றனர்.
ஆண்கள் முக்கியமாக ஆபாசமான விஷயங்களில் தொடர்பு, மற்றும் சுயஇன்பம் போன்ற நடத்தைகளை கவலைக்குரியதாக கருதுகின்றனர். ஆனாலும், ஆண்கள் பெரும்பாலும் அதிகமாக சுய இன்பம் காண்கிறார்கள்.
இதற்கு நேர்மாறாக, பெண்கள், ஆண்களின் சாதாரண பாலியல் உணர்வுகளை, தொந்தரவாக நினைக்க அதிக வாய்ப்புள்ளது.
2. வயது மற்றும் தலைமுறை காரணிகள்:
செக்ஸ் ஆர்வம், செக்ஸ் தொடர்பான அணுகுமுறைகளில் தலைமுறைக்கு தலைமுறை மாறுபடுகிறது. செக்ஸ் ஆர்வம், டிஜிட்டல் தளங்களால் அதிகமாகியுள்ளது. மேலும், மாறும் கலாசார விதிமுறைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
3. பாலியல் சிறுபான்மையினர் மீதான தாக்கம்:
பாலியல் சிறுபான்மையினர் என சுட்டிக்காட்டப்படும் ஓரினச்சேர்க்கையாளர்கள், எதிர்பாலின நபர்களுடன் ஒப்பிடும்போது கட்டாய செக்ஸ் நடத்தை பற்றி, அதிகம் கவலைப்படுகின்றனர். இந்த வேறுபாடுகள் தனித்துவமான சமூக அழுத்தங்கள், தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் மூலம் உருவாகுகிறது.
4. மத நம்பிக்கை:
ஒருவரது பாலியல் நடத்தையில் சமய நம்பிக்கைகளும் முக்கியப் பங்காற்றுகின்றன. மத பங்கேற்பாளர்கள் சுயஇன்பத்தை சிக்கலாகக் கருதுகின்றனர். எனவே, அவர்களும் செக்ஸ் நடத்தைகள் பற்றிய கவலைகளை ’போதை’ என்கின்றனர்.
5. அடிமையாதல் மற்றும் கட்டுப்பாடு இல்லாமை ஓர் ஒப்பீடு:
சுவாரஸ்யமாக, ஒருவர் தங்கள் செக்ஸ் நடத்தைகளை "போதை" மற்றும் "கட்டுப்பாட்டு இல்லாதது" என்று பெயரிடுவதற்கு இடையே வேறுபாடுகளைக் காட்டுகின்றனர், நிபுணர்கள்.
ஆண்கள், குறிப்பாக செக்ஸில் ஈடுபடும் ஆண்கள், தங்கள் செக்ஸ் அனுபவங்களை "போதை" என்று விவரிக்க அதிக விருப்பம் கொண்டிருந்தனர்.
கட்டாய பாலியல் நடத்தையைச் சுற்றியுள்ள கவலைகளின் பன்முகத்தன்மை இந்த ஆய்வு வழங்கும் அதே வேளையில், சமூக ஆதரவையும் சுட்டிக்காட்டுகிறது.
கட்டாய செக்ஸ் உணர்வு நடத்தை என்பது, அனைவருக்கும் பொருந்தும் பிரச்னை அல்ல. ஆனால், மக்கள்தொகை, கலாசாரம் மற்றும் தனிப்பட்ட காரணிகளையும் இது சார்ந்தது என்பதை இந்த ஆய்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
சமூகம் தொடர்ந்து உருவாகி வருவதால், செக்ஸ் உணர்வு மற்றும் மன ஆரோக்கியம் பற்றிய நமது புரிதலும் இருக்க வேண்டும். திறந்த உரையாடலை வளர்ப்பது நல்லது.
ஆய்வு குறிப்பு:
"கட்டாய செக்ஸ் நடத்தையை ஆதரிப்பவர்களிடையே சிக்கல் நடத்தைகள் இருக்கின்றன" என்று ஜோசுவா பி கிரப்ஸ், பிரின்னா லீ, கிறிஸ்டோபர் ஜி ஃபிலாய்ட், பீட்டா போதே, டோட் ஜென்னிங்ஸ் மற்றும் ஷேன் டபிள்யூ க்ராஸ் ஆகியோரின் ஆய்வுக்குறிப்பு உறுதிசெய்கிறது.
பொறுப்புத் துறப்பு: இந்த கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே தரப்படுகிறது. தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக அல்ல. மருத்துவ நிலை குறித்த ஏதேனும் கேள்விகளுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.
டாபிக்ஸ்