தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajith On Shankar Movie: நீண்ட கால காத்திருப்பு.. அஜித் குமார்- ஷங்கர் கூட்டணி இணைவது உறுதியா? - உண்மை என்ன?

Ajith on Shankar Movie: நீண்ட கால காத்திருப்பு.. அஜித் குமார்- ஷங்கர் கூட்டணி இணைவது உறுதியா? - உண்மை என்ன?

Kalyani Pandiyan S HT Tamil
Jun 10, 2024 05:37 PM IST

Ajith on Shankar Movie: ஷங்கர் - அஜித் கூட்டணி இணைய இருப்பதாக சொல்லப்படும் நிலையில், உண்மை என்ன?, என்பதை இங்கே பார்க்கலாம்.

Ajith on Shankar Movie: நீண்ட கால காத்திருப்பு.. அஜித் குமார்- ஷங்கர் கூட்டணி இணைவது உறுதியா? - உண்மை என்ன?
Ajith on Shankar Movie: நீண்ட கால காத்திருப்பு.. அஜித் குமார்- ஷங்கர் கூட்டணி இணைவது உறுதியா? - உண்மை என்ன?

ட்ரெண்டிங் செய்திகள்

அஜித் போட்ட கட்டளை 

முன்னதாக, தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் அஜித்குமாரை வைத்து, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் வரக்கூடிய, 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். படத்தில் அவரது லுக்கை பாதுகாக்க வேண்டும் என்பதால், படப்பிடிப்பில் அஜித்குமாருடன் செல்ஃபி எடுக்க படக்குழு தடை விதித்திருந்தது. இதைக்கேள்விபட்ட அஜித் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்யுமாறு கூறினார்.

அதன் படி, அந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மே 19ல் வெளியிடப்பட்டது. அதில் அஜித்தின் வெவ்வேறு பாணியிலான மூன்று படங்கள் இடம்பெற்று இருந்தன. இதில் நடிகர் அஜித் குமார் கலர் ஃபுல்லான சட்டை அணிந்து, ஸ்டைலான கூலர் போட்டு, கையில் டாட்டூக்களுடன் மாஸாக இருந்தார். 

முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு 

அண்மையில் இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது.இந்த படப்பிடிப்பு அடுத்த வார செவ்வாய்க்கிழமை முடிவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் படக்குழு வேகமாக வேலை பார்த்த காரணத்தால் முன்னதாகவே அந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது.இந்த நிலையில் அஜித்துடன் இருப்பது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்த அந்தப்படத்தின் இயக்குநர் ஆத்விக் ரவிச்சந்திரன், “ உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டைக்கண்டு வியக்கிறேன். எப்போதும் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். லவ் யூ மை சார்” என்று பதிவிட்டு இருக்கிறார்.

இதற்கிடையே இதற்கு முன்னதாக மகிழ் திருமேனி இயக்கத்தில் தொடங்கப்பட்ட விடாமுயற்சி திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனை தொடர்ந்து, அஜித்தின் 64 வது திரைப்படத்தை இயக்குநர் சிவா இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகளும் சென்று கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன.

பிசியாக இருக்கும் ஷங்கர்

கடந்த 1996 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் - கமல் கூட்டணி எடுக்க முடிவு செய்த நிலையில், இந்தப்படத்தின் தயாரிப்பாளராக லைகா சுபாஷ்கரன் கமிட் ஆனார். ஆனால் படப்பிடிப்பில் நடந்த விபத்து, கொரோனா ஊரடங்கு, ஷங்கர் - தயாரிப்பாளர் இடையே நடந்த மோதல் ஆகியவை இந்தப்படத்தை தாமதப்படுத்தியது. அதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சினையில் தலையிட, இருதரப்பும் சமாதானம் ஆகி படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.

இந்தப்படத்தில் நடிகை காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர் சமுத்திரக்கனி, ரோபா ஷங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். அண்மையில், இந்தியன் 2 அறிமுக வீடியோ வெளியிடப்பட்டது. டீசரை பார்க்கும் போது இந்தியன் பாகம் ஒன்றில் மையக்கருவாக இருந்த லஞ்சம் வாங்குதலை மையப்படுத்தியே இந்தியன் பாகம் 2 ம் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்பது தெளிவாக தெரிந்தது. ஜூலை 12 ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப்படத்தின் புரோமோஷனில் ஷங்கர் பிஸியாக இருக்கிறார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்