Archana: ‘பிரதீப் ஒரு அப்பாவி அவனுக்கு அந்த பட்டத்த கொடுத்து.. விசித்ரா ஒரு போன் கூட பண்ணல!’ -அர்ச்சனா பேட்டி!
நீ உன்னுடைய கேமில் கவனம் செலுத்திக் கொண்டே இருக்கும் பொழுது, இயல்பாகவே வெளியில் உள்ள மக்கள் சரி..நிக்சன் ஏதோ தெரியாமல் தவறு செய்து விட்டான் என்ற மனநிலைக்கு வந்து விடுவர் என்று சொன்னேன்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7 வது சீசன் அண்மையில் நடந்து முடிந்தது. இந்த நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரி வழியாக நிகழ்ச்சிக்குள் சென்ற அர்ச்சனா, டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ரன்னராக மணி தேர்வு செய்யப்பட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி வரலாற்றிலேயே வைல்டு கார்டு என்ட்ரி வழியாக உள்ளே வந்து டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போட்டியாளராக அர்ச்சனா மாறி இருப்பது அனைவருக்கு ஆச்சரியம் தரும் விஷயமாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் அண்மையில் கலாட்டா சேனலுக்கு அவர் கொடுத்த பேட்டியில் நிக்சன் - வினுஷா பிரச்சினை விசித்ரா நட்பு முறிவு, பிரதீப் ரெட் கார்டு விவகாரம் உள்ளிட்டவற்றை பற்றி பேசி இருக்கிறார்.
பிரதீப்பிற்கு அந்த பட்டத்தை கொடுத்து வெளியே அனுப்பி இருக்கக்கூடாது. அவர் கேமை சூப்பராக விளையாடக்கூடிய போட்டியாளர்தான். ஆனால், கேரக்டராக அவர் அப்பாவி. வேறு ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி வெளியே அனுப்பி இருந்தால் சரியாக இருந்திருக்கும். அந்த காரணத்திற்காக அவர் வெளியே தகுதியானவர் அவர் இல்லை.
விசித்ராவை பொருத்தவரை அவர் என்னுடன் நின்றதற்கு நான் என்று நன்றிக்கடன் பட்டு இருக்கிறேன். ஆனால் என்னைப் பற்றி யாரோ தவறாக சொல்லும் போது அதை அவர் என்னிடம் நேரடியாக வந்து கேட்கவில்லை. அதில் எனக்கு அவர் மீது இருந்த அபிப்ராயம் சென்று விட்டது. அவர் இன்னும் எனக்கு போன் செய்ய வில்லை.
உண்மையில் நிக்சன் வினிஷாவை பற்றி தவறாக பேசிய பிறகு அவன் பயந்துவிட்டான். இதனையடுத்து நான் அவனிடம் சென்று சரி, மிகப்பெரிய தவறு செய்து விட்டாய். ஆனால் இதை ஒரே ஒரு விஷயத்தால் மட்டும்தான் மாற்ற முடியும். அது என்னவென்றால் நீ உன்னுடைய கேமில் கவனம் செலுத்துவது.
நீ உன்னுடைய கேமில் கவனம் செலுத்திக் கொண்டே இருக்கும் பொழுது, இயல்பாகவே வெளியில் உள்ள மக்கள் சரி..நிக்சன் ஏதோ தெரியாமல் தவறு செய்து விட்டான் என்ற மனநிலைக்கு வந்து விடுவர் என்று சொன்னேன்.
ஆனால் காலப்போக்கில் நிக்சன் எனக்கு எதிராகவே மாறத் தொடங்கினான். ஒரு கட்டத்தில் நான் முதல் வாரத்தில் அழுத விஷயங்களை எல்லாம் கிளற தொடங்கினான. உடனே நான் அவனிடம் ஏன் முதல் வாரத்தில் நடந்ததையெல்லாம் இப்போது பேசுகிறாய் என்று கேட்டேன்.
அதற்கு அடுத்த நாள் விஷ்ணுவும் ஏதோ பிரச்சினை தொடர்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது நீ வினுசாவை பற்றி பேசியது தவறு தானே என்று நான் சொன்னேன். அப்படிதான் எனக்கு அவருக்குமான சண்டை வெடித்தது. ” என்று பேசினார்
பிஆர்ஓ மூலமாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாடி பேர் சம்பாதித்து இருக்கிறார் என்றும் அவரது வெற்றியும் அந்த வகையைச் சேர்ந்ததுதான் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. இது குறித்து அர்ச்சனா பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அவர் பேசும் போது, “எனக்கா 19 கோடி ஓட்டுகள்…அவ்வளவு தூரம் என்னை இந்த நிகழ்ச்சியில் மக்கள் பார்த்து இருக்கிறார்களா என்ற சந்தேகம் எனக்கே இருக்கிறது. உண்மையில் வீட்டிற்குள் இருக்கும் பொழுது நமக்கு எந்த ஒரு விஷயமும் தெரியாது.
வார இறுதி நாட்களில் பேசும் விஷயங்களை வைத்து மட்டும் தான் நம்மால் நிலைமையை புரிந்து கொள்ள முடியும். அந்த சமயங்களில் கமல் சார் சொன்ன சில விஷயங்களை வைத்து தான் நான் சில விஷயங்களை திருத்திக் கொண்டேன்.
உண்மையில் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வரும் பொழுது மிகவும் அமைதியான நிதானமான ஒரு மனுஷியாக மாறி இருக்கிறேன். முன்பெல்லாம் மிகவும் அதிக ஆர்வத்தோடு உற்சாகமாக விஷயங்களை அணுகுவேன்.
இப்போது அது இல்லை. இன்னொரு விஷயம் நான் பிஆர்ஓ வைத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாடினேன் என்ற விமர்சனம் இருக்கிறது.
அவர்கள் வழிக்கே நான் வருகிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜெயித்ததற்காக எனக்கு 50 லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். எனக்கு 19 கோடி மக்கள் ஓட்டு போட்டு இருக்கிறார்கள். இதில் 18 கோடி பேர் என்னை பிடித்து ஓட்டு போட்டு இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். என்னை பிடிக்காமல் 1 கோடி பேர் ஓட்டு போட்டு இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
ஒரு ஓட்டுக்கு ஒரு ரூபாய் என்று வைத்தால் கூட, மொத்தமாக ஒரு கோடி ரூபாய் எனக்கு கிடைத்து விடும்;அந்த ஒரு கோடி என் கையில் இருந்தால், நான் சின்ன பட்ஜெட்டில் ஒரு படத்தை தயாரித்து, அதில் கதாநாயகியாக நடித்து விடுவேன். அதற்காகத்தான் நான் இந்த நிகழ்ச்சிக்குள்ளேயே வந்தேன்.
இந்த விமர்சனம் எப்படி இருக்கிறது என்றால், எனக்கு ஓட்டு போட்ட மக்களையே சந்தேகப்படுவது போல இருக்கிறது. சில இடங்களில் நான் ஜெயிக்க வேண்டும் என்று ஓட்டு போட்டதை விட, நான் ஜெயிக்க கூடாது என்று ஓட்டு போட்டவர்களே அதிகம். போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் புழுதி வாரி தூவட்டும் என்று இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்” என்று பேசினார்

டாபிக்ஸ்