Tamil News  /  Entertainment  /  Archana Met Her Teacher After Winning Bigg Boss 7 Tamil Title

Archana: பிக் பாஸ் கோப்பையோடு அர்ச்சனா சென்று சந்தித்த நபர் யார் தெரியுமா?

Aarthi Balaji HT Tamil
Jan 20, 2024 07:24 AM IST

பிக் பாஸ் டைட்டில் வென்றவுடன் அர்ச்சனா தனது ஆசிரியரை சென்று பார்த்து உள்ளார்.

அர்ச்சனா
அர்ச்சனா

ட்ரெண்டிங் செய்திகள்

பிக் பாஸ் தமிழ் 7 இல் அர்ச்சனா தனது வலுவான விளையாட்டின் மூலம் மில்லியன் கணக்கான இதயங்களை வென்றார். உண்மையில், பிக் பாஸ் தமிழ் 7 இல் அர்ச்சனா வெற்றி பெற்றார் என்ற செய்திகள் இறுதிப் போட்டிக்கு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்பே சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கின.

பிக்பாஸ் சீசன் முடிந்தாலும், அதில் பங்கேற்று வெளியில் வந்தவர்களின் அலப்பறை இன்னும் முடியவில்லை. டைட்டில் வென்ற அர்ச்சனா எந்த ஒரு பதிவும் வெளியிடாமல் மவுனமாக இருந்த நிலையில் மற்ற போட்டியாளர்கள் தான் அலப்பறை செய்து வருகிறார்கள்.

இதனிடையே நிகழ்ச்சி முடிந்து கிட்டதட்ட ஐந்து நாட்களுக்கு பிறகு அர்ச்சனா தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “ அதில், ” பீரவீன் சார், உங்கள் வழிகாட்டுதல் மற்றும் ஊக்கத்தின் சிம்பொனி. ஒரு நல்ல ஆசிரியரின் மந்திரம். உங்கள் அன்புடன் தொடர்ந்து வழி நடத்தியதற்கு மிக்க நன்றி- என்றென்றும் உங்கள் மாணவர் ” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

அர்ச்சனா இன்ஸ்டா போஸ்ட்
அர்ச்சனா இன்ஸ்டா போஸ்ட்

105 நாட்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி என்பதால் வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா, மொத்தம் 77 நாட்கள் விளையாடி உள்ளார்.

ஒரு நாளைக்கு அர்ச்சனாவுக்கு சம்பளமாக 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. 77 நாட்கள் அவருக்கு 15 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

பரிசுத்தொகையுடன் 50 லட்சம் ரூபாய், 15 லட்சம் மதிப்புள்ள பிளாட், Grand Vitara கார் ஆகியவை அவருக்கு பரிசாக கிடைத்து உள்ளது. மொத்தமாக பார்த்தால் அவர் சுமார் 80 லட்சம் மதிப்பில் பரிசை அள்ளி உள்ளார். ரைஸிங் ஸ்டார் பட்டம் அர்ச்சனாவுக்கு தரப்பட்டது.

பிக் பாஸ் வீட்டுக்குள் 60 கேமராக்கள் போட்டியாளர்களின் செயல்பாடுகளை மறைமுகமாகப் பதிவு செய்து, ஒவ்வொரு நாளும் நடந்த சுவாரஸ்யமான தொகுப்புகளை விஜய் டிவியில் இரவு 9.30 மணிமுதல் 11 மணி வரை ஒளிபரப்பட்டது. டி.ஆர்.பியில் உச்சம் பெற்ற நிகழ்ச்சியாக பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இருந்து வருகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.