Bigg Boss Arun & Archana:'அர்ச்சனா ஹார்லி குயின் ஆன கதை.. அருணின் பிளஸ்ஸிங்ஸ்..' அர்ச்சனா, அருண் ஷேரிங்ஸ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss Arun &Amp; Archana:'அர்ச்சனா ஹார்லி குயின் ஆன கதை.. அருணின் பிளஸ்ஸிங்ஸ்..' அர்ச்சனா, அருண் ஷேரிங்ஸ்

Bigg Boss Arun & Archana:'அர்ச்சனா ஹார்லி குயின் ஆன கதை.. அருணின் பிளஸ்ஸிங்ஸ்..' அர்ச்சனா, அருண் ஷேரிங்ஸ்

Malavica Natarajan HT Tamil
Feb 04, 2025 08:43 PM IST

Bigg Boss Arun & Archana: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அர்ச்சனா மற்றும் அருணின் காதல் கதை மக்களுக்கு தெரிய வந்த நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து சமீபத்தில் கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது.

Bigg Boss Arun & Archana:'அர்ச்சனா ஹார்லி குயின் ஆன கதை.. அருணின் பிளஸ்ஸிங்ஸ்..' அர்ச்சனா, அருண் ஷேரிங்ஸ்
Bigg Boss Arun & Archana:'அர்ச்சனா ஹார்லி குயின் ஆன கதை.. அருணின் பிளஸ்ஸிங்ஸ்..' அர்ச்சனா, அருண் ஷேரிங்ஸ்

அர்ச்சனாவின் ஆதரவு

பின், பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற அவர், அருணுடனான காதலை உலகிற்கு காட்டினார். அங்கு, அவருக்கு தன் ஆதரவை தெரிவித்தார். பின், பிக்பாஸில் இருந்து அருண் வெளியேறிய பின்னும் அவரை வரவேற்று கொண்டாடினார். இந்நிலையில், இவர்கள் இருவரும் முதல் முறையாக சேர்ந்து ரெட் நூல் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தனர்.

ஹார்லி குயினான கதை

அதில் பேசிய அருண், "இவங்க ஏன் என்னோட ஹார்லி குயின்னா எனக்கு படம் பாக்குறது ரொம்ப பிடிக்கும். அப்படி நாங்க ரெண்டு பேரும் பாத்த படத்துல ரொம்ப பிடிச்ச ஒரு கார்ட்டூன் காமிக் கேரக்டர் தான் ஹார்லி குயின். அந்த கேரக்டர் அர்ச்சனாவோட கேரக்டருக்கு ரொம்ப செட் ஆச்சு. அதுனால அவங்க என்னோட ஹார்லி குயின் ஆகிட்டாங்க.

கல்யாணம் எப்போ?

அதே மாதிரி இந்த வருஷம் எங்களுக்கு கல்யாணம்ன்னு சொன்னோம். வீட்ல இத பத்தி பேசிட்டு இருக்காங்க. கூடிய சீக்கிரம் அதபத்தி சொல்லுவோம். இந்த வருஷம் எனக்கு ரொம்ப சந்தோஷமா ஆரம்பிச்சிருக்கு. நான் இந்த வருஷத்த பிக்பாஸ்ல தான் தொடங்குனேன். எல்லாமே பாசிட்டிவ்வா போற மாதிரி இருக்கு எனக்கு என்றார் அருண்.

இந்த தருணத்த ரசிக்குறேன்

தொடர்ந்து பேசிய அர்ச்சனா, நாங்க ரெண்டு லவ் பண்றது ரொம்ப நாளா வெளிய சொல்லாம இருந்ததுக்கு காரணம் இருக்கு. பல இடத்துல இத பத்தி கேக்கும் போது கூடட நான் அமைதியா தான் இருந்தேன். அதுக்கு காரணம் ஒரு பொன்னா நான் இவரு தான் என் பாய் பிரண்ட்டுன்னு சொல்லும் போது ஒரு ஃபீல் வரும் இல்ல அத யோசிச்சி யோசிச்சு ஃபீல் பண்ணிருக்கேன். ஆனா, அது இப்போ நாங்க ரெண்டு பேரும் பக்கத்துல பக்கத்துல உக்காந்து இருக்கும்போது, அந்த ஃபீல் வேற மாதிரி இருக்கு. இந்த தருணத்த நான் ரசிக்குறேன். எனக்கு பேசவே வர மாட்டிங்குது. இதுதான் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து கொடுக்குற முதல் இன்டர்வியூ.

பெருமையா இருக்கு

அருண் பிக்பாஸ் உள்ள போகும் போது அவருக்குள்ள நிறைய டவுட் இருந்தது. ஆனா அவரு 98 நாள் பிக்பாஸ்ல இருந்தது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. எனக்கு இவரோட கேரக்டர் என்னென்னு தெரியும். ஆனா நாம்ம எதிர்பாத்தத தாண்டி ஒரு விஷயம் பண்ணிட்டு வந்திருக்காரு. மக்கள் அவரோட எவிக்ஷன அன்ஃபேர்ன்னு சொன்னது ரொம்ப சந்தோஷமா இருந்தது.

லக்கி சார்ம் அருண்

எனக்கு நடிப்பு மேல எல்லாம் ஆசையே இல்ல. ஆனா, எனக்கு சினிமா மேல ஆசை வர வச்சதே இவரு தான். இவர் பேசி பேசி இப்போ நான் படத்துல நடிச்சிருக்கேன். அதுனால அவர் தான் என்னோட லக்கி சார்ம். அவர்கிட்ட பிளஸிங் வாங்கிட்டு போற எந்த வேலையும் சக்ஸஸ் ஃபுல்லா தான் முடியும் எனக் கூறி தன் காதலை வார்த்தைகளால் வெளிப்படுத்தினார்.

எல்லாம் பிரபஞ்சத்தின் வேலை

மேலும் பேசிய அவர், அருண் பிக்பாஸ் வீட்டில் இருந்த அந்த 3 மாசம் சீக்கிரம் ஓடிடாதா இல்ல நான் எங்கயாவது ஓடிடலாமா என்ற சிந்தனை தான் இருந்தது. நான் அருண மீட் பண்ண போனதுக்கு அடுத்த நாள் எனக்கு ஷீட்டிங் இருக்கு. இத அவர்கிட்ட சொல்லக் கூட முடியலன்னு ரொம்ப கஷ்டமா இருந்தது. திடீர்ன்னு நான் பிக்பாஸ் வீட்டுக்குள்ள இவர மீட் பண்ண என்ன கூப்டுறாங்க. இத எல்லாம் கனெக்ட் பண்ணா இதெல்லாம் யுனிவர்ஸ் வேலை தான்னு தோனுச்சு.

பிரிபேர் பண்ணது எல்லாம் போச்சு

நான் பிக்பாஸ் உள்ள போறதுக்கு முன்னாடி நிறைய பிரிபேர் பண்ணுனேன். ஆனா, அங்க போய் இவர் முகத்த பாத்த உடனே எல்லாம் மறந்துடுச்சு. அதுக்கு அப்புறம் அங்க நடந்தது எல்லாமே ரொம்ப இயல்பா நடந்தது தான்." என்றார் வெட்கத்துடன்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.