தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Aranthangi Nisha Asked Why Women's Are Treaten In Bad Ways

Aranthangi Nisha: எல்லாமே விளம்பரமா.. வார்த்தைகளால் அப்படி சொல்ல வேண்டாம்.. பொங்கி எழுந்த அறந்தாங்கி நிஷா!

Aarthi Balaji HT Tamil
Mar 21, 2024 05:16 PM IST

சென்னை மக்கள் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தவர்கள் . அவர்கள் மீது எனக்கு எப்போதுமே தனி அன்பு உண்டு என்றார் அறந்தாங்கி நிஷா.

அறந்தாங்கி நிஷா
அறந்தாங்கி நிஷா

ட்ரெண்டிங் செய்திகள்

இதற்கு இடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருக்கிறார் . சினிமா மற்றும் சின்னத்திரையில் பிசியாக நடித்து வரும் அறந்தாங்கி நிஷா, சமூக சேவையிலும் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது நேரடியாக களத்தில் சென்று மக்களுக்கு உதவிய வீடியோக்கள் இணையத்தில் வைரலானது.

அறந்தாங்கியில் இருந்து உணவுகளை எடுத்து கொண்டு சாப்பாட்டிற்கு வழியில்லாமல் தவித்த எத்தனையோ பேருக்கு அவர் களத்தில் இறங்கி உதவி செய்து அசத்தினார்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் எதிர்மறையான கருத்துகளால் அவதிப்பட்டு வரும் அறந்தாங்கி நிஷா , சமீபத்தில் அளித்த பேட்டியில் இது குறித்து வெளிப்படையாகப் பேசியு உள்ளார். " சென்னை மக்கள் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தவர்கள் . அவர்கள் மீது எனக்கு எப்போதுமே தனி அன்பு உண்டு. அவர்கள் கொடுத்ததை நான் திருப்பி தருகிறேன். அவ்வளவு தான் வேறு எதுவுமே இல்லை. ஆனால் சமூகத்தில் உள்ளவர்கள் அதை புரிந்து கொள்ளவே இல்லை .

வார்த்தைகளால் எளிதில் காயப்படுத்தி கொண்டே இருக்கிறார்கள். மேலும் வாய்மொழி கற்பழிப்பு என்பது கொடுமையின் உச்சம். இதை பெண்கள் மீது திணிக்கிறார்கள். நான் என்ன செய்தாலும் விளம்பரத்துக்காக செய்கிறேன் என்று விமர்சிக்கிறார்கள். 

பப்ளிசிட்டிக்காக இதையெல்லாம் செய்து விட்டு நான் CM ஆகப் போகிறேனா? அல்லது பிரதமராகப் போகிறாரா? மக்கள் கொடுக்கும் பணத்தில் மேடையில் பேசி சாப்பிடப் போகிறேன் . மக்களுக்கு உதவ நினைப்பவர்களை நீங்கள் தொடர்ந்து காயப்படுத்துகிறீர்கள் . அந்த காயம் என் மனதில் நீங்கவில்லை. வேறு யாராவது செய்தால் பாராட்டுகிறீர்கள்.

ஆனால் பெண்கள் உதவி செய்தால் மட்டும் ஏன் அவமானப்படுத்துகிறீர்கள் . இந்த கோபம் என் உள்ளத்தில் இருக்கிறது “ என்று அறந்தாங்கி நிஷா கடும் கோபத்தில் அந்த பேட்டியில் பேசி உள்ளார் .

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் சமீபத்தில் செய்த உதவி ஒரு விளம்பர நோக்கத்தில் செய்தது என்று விமர்சிக்கப்பட்டது. அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக அறந்தாங்கி நிஷா இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் தொலைக்காட்சியை சேர்ந்த பலரும் மக்களுக்கு நேரடியாக சென்று உதவி செய்து வருகிறார்கள். சமீப காலமாக கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான பாலா பலருக்கும் உதவி செய்து வருகிறார். மலை வாழ் மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ், ஆட்டோ, பைக் இல்லாமல் தவித்த இளைஞர்களுக்கு பைக் உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்து இருந்தார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்