Aranmanai 4 Twitter Review: மிரட்டும் பேய்.. மயக்கும் தமன்னா.. அரண்மனை 4 நம்பி போலாமா? - விமர்சனம் இங்கே!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Aranmanai 4 Twitter Review: மிரட்டும் பேய்.. மயக்கும் தமன்னா.. அரண்மனை 4 நம்பி போலாமா? - விமர்சனம் இங்கே!

Aranmanai 4 Twitter Review: மிரட்டும் பேய்.. மயக்கும் தமன்னா.. அரண்மனை 4 நம்பி போலாமா? - விமர்சனம் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
May 03, 2024 01:37 PM IST

சுந்தர் சி இயக்கத்தில், தமன்னா, ராஷிக்கண்ணா உள்ளிட்ட பல நடிப்பில் வெளியாகி இருக்கும் அரண்மனை 4 படம் எப்படி இருக்கிறது என்பதை இங்கு பார்க்கலாம்.

அரண்மனை 4  நெட்டிசன்கள் கருத்து!
அரண்மனை 4 நெட்டிசன்கள் கருத்து!

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அரண்மனை 3'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் சுந்தர் சி அரண்மனை 4 படத்தை இயக்கும் வேலையில் மும்மரமானார். 

தமன்னா, ராஷிக்கண்ணா உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த இப்படம், இன்று வெளியாகி இருக்கிறது. முதல் காட்சி முடிந்த நிலையில், ரசிகர்கள் சொல்லும் கருத்தை வைத்து பார்க்கும் போது,  படம் ஓரளவு நன்றாக இருப்பதாகவே தெரிகிறது. 

குறிப்பாக இந்தப்படத்தில் நடிகை தமன்னா மிகவும் கவர்ச்சியாக நடித்திருந்தார். இந்த நிலையில், அரண்மனை 4 படம் தொடர்பான நேர்காணல்களில் அவரிடம் அது குறித்து கேட்கப்பட்டது. 

இது குறித்து அண்மையில் அவர் கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில், “நான் ஒரு முறை, ஒரு பேட்டியில் நடிகர்கள் என்பவர்கள் நல்ல ஆடைகளை உடுத்தி வேலை செய்யும் வேலை ஆட்கள்” என்று கூறியிருந்தேன். அதைப்பற்றி நீங்கள் தற்போது கேட்கிறீர்கள்.

இந்த துறையில் இருந்து கிடைக்கும் பணம், புகழ்,கிளாமர் என எல்லாமும் பிடிக்கும். இதையெல்லாம் பிடிக்காது என்று சொன்னால் அது நியாயமாக இருக்காது. நான் இருக்கும் இடமானது எனக்கு பெரிய அங்கீகாரத்தை கொடுக்கக் கூடிய இடமாக இருக்கிறது.

இந்த துறையின் மேற்பரப்பானது மிகவும் அழகாக இருக்கும். ஆனால் சில நேரங்களில் அது வேறு மாறியாக இருக்கும். நீங்கள் இந்த துறையில் பார்வையாளர்களுக்கு மிகவும் சவாலான ஒரு விஷயத்தை, கடினமாக உழைத்து கொடுப்பீர்கள்.

ஆனால் அதை பார்க்கும் பொழுது எந்தவித மெனக்கெடலும் இல்லாமல் செய்தது போல இருக்கும். இது உண்மையில் ஒரு பணியாளரின் மனநிலையில் இருந்து செய்யக்கூடிய வேலைதான். இதை நிகழ்த்துவதற்கு மனதளவில், எமோஷனல் அளவில், உடல் அளவில் கடினமாக உழைக்க வேண்டும். அதனால்தான் நான் அப்படி சொன்னேன்.

கிளாமரான பாடலைப் பற்றிய பார்வையானது மாற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். உண்மையில் அவை கிளாமரை கொண்டாடும் செயல்முறை தான். பெண்களும் இந்த மாதிரியான ஒரு பார்வையை எடுத்து வர வேண்டும். அந்த பாடலில் இருக்கக்கூடிய சில விஷயங்கள் மிகவும் கீழ்த்தரமானவையாக இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால், அது ஒரு கொண்டாட்டம் அவ்வளவே!

பெண்ணானவள் மிக மிக அழகானவள். ஆகையால், அந்த மாதிரியான கிளாமர் பாடல்கள் கொண்டாடப்பட வேண்டும். இதன்மூலம் மக்களுடன் எனக்கு பெரிய கனெக்சன் உண்டாகிறது ஒரு சிறிய குழந்தை கூட அந்த பாடலைக் கேட்டு ஆடுகிறது. இதுதான் ஒரு நடிகராக,ஒரு நடன கலைஞராக என்னுடைய வேலை என்று நினைக்கிறேன்.

தன் எதிரே இருக்கக்கூடிய மனிதரின் மகிழ்ச்சியை வெளியே கொண்டு வர வேண்டும். இது போன்ற பாடல்களை நான் தொடர்ந்து செய்ய போகிறேன்.” என்று பேசினார்

முன்னதாக பாலிவுட் நடிகர் விக்ரம் வர்மா உடனான காதல் குறித்து பேசிய தமன்னா, “லஸ்ட் ஸ்டோரிஸ் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பில்தான் நாங்கள் முதன் முதலில் சந்தித்தோம். அதன் பின்னர் தான் இருவரும் டேட்டிங் செய்ய ஆரம்பித்தோம். ஒருவர் சக நடிகராக இருப்பதாலேயே அவருடன் காதல் வந்துவிடும் என சொல்ல முடியாது.

ஒருவருடன் காதல் வரவேண்டும் என்றால், அவரிடம் ஏதாவது ஒன்றை உணர வேண்டியது அவசியம். அது என்ன என்பது தனிப்பட்ட விஷயம். நான் எதிர்பார்த்து காத்திருந்த நபர் விஜய் வர்மாதான் என என்னால் உணர முடிந்தது. சரியான நபரை தேர்ந்தெடுப்பது முக்கியம். அவருடனான புரிதல் அவசியம். அதை விஜய் வர்மாவிடம் பார்த்தேன். அவர் என் மகிழ்ச்சியின் இடமாக மாறி இருக்கிறார்” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.