தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Raayan: ‘பெரிய பாயை சந்தித்த ராயபுரத்து குட்டி பாய்’ - வாட்டர் பாக்கெட் பாடல் எழுதிய கானா காதருடன் ஏ.ஆர்.ரஹ்மான் கல கல!

Raayan: ‘பெரிய பாயை சந்தித்த ராயபுரத்து குட்டி பாய்’ - வாட்டர் பாக்கெட் பாடல் எழுதிய கானா காதருடன் ஏ.ஆர்.ரஹ்மான் கல கல!

Marimuthu M HT Tamil
May 25, 2024 09:21 PM IST

Raayan: நடிகர் தனுஷ் உடைய 50ஆவது படமான ராயன் திரைப்படத்தில் வாட்டர் பாக்கெட் பாடலை எழுதிய கானா காதர் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான், தனுஷ் ஆகியோருக்கு இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் வீடியோ வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

Raayan: ‘பெரிய பாயை சந்தித்த ராயபுரத்து குட்டி பாய்’ - வாட்டர் பாக்கெட் பாடல் எழுதிய கானா காதருடன் ஏ.ஆர்.ரஹ்மான் கல கல!
Raayan: ‘பெரிய பாயை சந்தித்த ராயபுரத்து குட்டி பாய்’ - வாட்டர் பாக்கெட் பாடல் எழுதிய கானா காதருடன் ஏ.ஆர்.ரஹ்மான் கல கல!

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகரில் இருந்து இயக்குநரான தனுஷின் பயணம்:

நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் எனப் பல துறைகளிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார், தனுஷ். நடிகர் தனுஷ், நடிகர் ராஜ்கிரண் மற்றும் ரேவதியைப் பிரதான கதையின் மைந்தர்களாக வைத்து இயக்கி நடித்த படம், பவர் பாண்டி. அதன் பிறகு, நடிகர் ஸ்ரீகாந்தை வைத்து ஒரு படத்தை இயக்கினார். ஆனால், அப்படம் இன்னும் ரிலீஸாகவில்லை. அதன்பின், நடிகர் தனுஷ் சில ஆண்டுகள் கழித்து, மீண்டும் இயக்கம் பக்கம் வந்தார்.

நடிகர் தனுஷ் தனது கேரியரில் மதிப்புமிக்க, தனது 50ஆவது படத்தை தானே இயக்கிவந்தார். அப்படம் தான் ’ராயன்’. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் தனுஷ் மொட்டையடித்த நிலையில் நடித்துள்ளார். அறிவிப்பு போஸ்டரில், தனுஷ் பின்னால் இருந்து, சட்டையின்றி கையில் கத்தியுடன் காட்சியளித்தார்.

பிப்ரவரி 19ஆம் தேதி வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் வத்திக்குச்சி திலீபனும் பின்னணியில் இருக்கின்றனர். அதில் காளிதாஸ் ஜெயராமும் வத்திக்குச்சி திலீபனும் ஒரு நடமாடும் உணவகத்தில் கூரிய கத்திகளை வைத்து முறைக்கின்றனர். அந்த நடமாடும் உணவகத்தின் செஃப் போன்று நிற்கும் நடிகர் தனுஷ் கையில் ஒரு இரும்புக் கம்பியைப் பிடித்திருக்கிறார். இப்படம் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியாகிறது.

வாட்டர் பாக்கெட் பாடல் எழுதிய கானா காதர்:

இந்நிலையில் நடிகர் தனுஷின் ராயன் படத்தின் இரண்டாவது பாடலான ’வாட்டர் பாக்கெட்’ மே 24ஆம் தேதியான நேற்று வெளியானது. இப்படத்திற்கான இசையை ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் செய்திருக்கிறார். அதில் சந்தீப் மற்றும் அபர்ணா கதாபாத்திரங்களின் காதல் கதையைக் காட்டும் பாடலுக்கான லிரிக்கல் வீடியோ இருந்தது. அதனை தனுஷ் வெளியிட்டார். இந்த மாதத் தொடக்கத்தில் ’அடங்காத அசுரன்’ என்ற முதல் பாடல் வெளியிடப்பட்டது. அந்தப் பாடலை தனுஷ் எழுதி, பாடவும் செய்திருந்தார். ராயன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஜூன் 13-ம் தேதி வெளியாகிறது.

மேலும், வாட்டர் பாக்கெட் வீடியோ பாடலை எழுதிய கானா காதரை ராயபுரத்தில் இருந்து அழைத்து வந்து, நடிகர் தனுஷ், ஏ.ஆர். ரஹ்மானுக்கு அறிமுகப்படுத்துகிறார். அப்போது உங்களுடைய பாடலில் காமெடி அதிகமாக இருக்கிறது என தனுஷ் பாராட்டுகிறார். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் முன் பாட்டுப்பாடி காட்டுகிறார், கானா காதர். அதில் மயங்கும் ஏ.ஆர். ரஹ்மான் ’சூப்பர்ப்பா, உனக்கு நல்ல ஃபியூச்சர் அமையணும். நிறைய கம்போஸ் செய்யணும்’’ என வாழ்த்துகிறார்.

இப்படம் 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வரவுள்ளது.ராயன் படத்துக்குண்டான ஒளிப்பதிவினை ஓம் பிரகாஷூம், எடிட்டிங்கினை ஜி.கே.பிரசன்னாவும் மேற்கொள்கின்றனர். சண்டைக்காட்சிகளை பீட்டர் ஹெயின் மாஸ்டர் செய்துள்ளார்.

நடிகர் தனுஷின் வரவிருக்கும் படங்கள்:

நடிகர் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் 100 கோடி ரூபாயைத்தாண்டி வசூல் செய்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, நடிகர் தனுஷ், பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் 'தேரே இஷ்க் மே' என்ற படத்திலும் நடித்து வருகிறார். அதேபோல் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நடிகர் நாகார்ஜூனா இணைந்து நடித்து வரும் ‘குபேரா’ படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்