"டி.ஆரால் தான் நான் இப்படி ஆனேன்.. வேற வழி இல்லாம போச்சு" என்ன சொல்கிறார் ஏ.ஆர்.ரகுமான்?
ஏ.ஆர்.ரகுமான், தான் இந்த நிலைக்கு வந்ததற்கும் தன்னுடைய இயல்பான குணம் மாறியதற்கும் டி.ராஜேந்தர் தான் காரணம் என கூறியிருக்கிறார்.ந
தமிழ் மட்டுமல்ல இந்திய சினிமாவில் மிக முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரகுமான். இவர், 1992ம் ஆண்டு வெளியான மணிரத்னத்தின் ரோஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது நம் அனைவரும் அறிந்ததே.
டி.ஆரின் உதவியாளர்
ஆனால், அவர் ரோஜா படத்திற்கு முன் பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார். அவர்களில் முக்கியமானவர் டி,ராஜேந்திரன். தமிழ் சினிமாவின் பண்முக கலைஞனான இவரிடம் ஏ.ஆர்.ரகுமான் உதவியாளராக பணியாற்றினார்.
டி.ராஜேந்தருக்கு ஏ.ஆர்.ரகுமான், டிரம்ஸ் சிவமணியின் இசை மீது மிகுந்த பிரியம் இருப்பதால், இவர்கள் வரவில்லை எனில் அவர் ரெக்கார்டிங்கை கேன்சல் செய்யும் அளவிற்கு டி.ராஜேந்தர் சென்றிருக்கிறாராம். இதனாலேயே டி.ராஜேந்தர் குடும்பம் மீது ஏ.ஆர்.ரகுமானுக்கு தனி பிரியம் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.
எஸ்.டி.ஆருக்காக இறங்கிய ஏ.ஆர்.ஆர்
அதுமட்டுமல்லாது, சிலம்பரசன் வெளியிட்ட பீப் சாங் பெரும் பிரச்சனையை ஏற்படுத்திய நிலையில், அதிலிருந்து மக்களை சற்று திசைத்திருப்ப நினைத்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இதனால், வெளிநாடு செல்லும் திட்டங்களை எல்லாம் ஒத்தி வைத்து, சிம்பு படத்தின் பாடல் ஒன்றை அவசர அவசரமாக தயார் செய்து கொடுத்தார் எனக் கூறப்பட்டது.
இந்த சமயத்தில் அவர், சிலம்பரசனின் பத்து தல படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான் அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு தனக்கும் சிலம்பரசன் குடும்பத்திற்கும் உள்ள சில மறக்க முடியாத நினைவுகள் குறித்து பேசியிருக்கிறார்.
டி.ஆரைப் பார்த்து வியந்தேன்
"டி.ராஜேந்தர் சார் நான் வியந்து பார்த்த மனிதர்களில் ஒருவர். அவர் போல் மாற வேண்டும் என நான் ஆசைப்பட்டேன். இளையராஜா சார், எம்.எஸ்.விஸ்வநாதன் சார், கே.வி.மகாதேவன் சார்கிட்ட எல்லாம் நான் வேலை பார்த்திருக்கிறேன். அவர்களிடம் வேலை செய்யும் போது நான் யாரிடமும் அதிகம் பேச மாட்டேன். நான் மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட நபராக இருந்தேன்.
இப்படி மாறியதே அவரால் தான்
ஆனால், நான் டி.ராஜேந்தர் சார்கிட்ட வேலை செய்யும் போது அவரின் வேலைத் திறனைப் பார்த்து வியந்தேன். அவர் வேலை செய்யும் ஸ்டைலைப் பார்த்து கவர்ந்து இழுக்கப்பட்டேன். அது தான் இன்ட்ரோவெர்ட்டாக இருந்த என்னை எக்ஸ்ட்ரோவெர்ட்டாக மாற்றியது. அவரால் தான் நான் இவ்வளவு பேசுகிறேன்" எனக் கூறினார்.
பத்து தல படம் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்த சிலம்பரசனின் 5வது படம். இதற்கு முன், வெளிந்த வெந்து தணிந்தது காடு படத்தில், சிலம்பரசனைப் பாட வைத்தது போல் இந்தப் படத்தில் ஏன் பாட வைக்கவில்லை என கேட்கப்பட்டது.
இது சிம்புவிற்கானது
இதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான் "பத்து தல படத்தில் இடம்பெற்ற அக்கறையில பாடல் சிலம்பரசன் பாட வேண்டியது. ஆனால், அந்த சமயத்தில் அவர் தாய்லாந்து சென்றுவிட்டார். இதனால் தான் அந்த வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. அதனால் தான் அந்தப் பாடலை நான் பாட வேண்டியதாக போய்விட்டது" எனக் கூறினார்.
ஏ.ஆர்.ரகுமானின் விவாகரத்து அறிவிப்புக்குப் பின் அவரது பல வீடியோக்கள் ட்ரெண்ட் செய்யப்பட்டு வந்த நிலையில், பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் அவர் பேசிய வீடியோ தற்போது ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
ஏ.ஆர்.ரகுமான் இதற்கு முன் சிலம்பரசனின் விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, செக்கச் சிவந்த வானம், வெந்து தணிந்தது காடு போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.