ஃபுல் தண்ணியா இருப்பாங்க.. வேட்டியெல்லாம் அவிழும்.. ஒரு பாடலுக்கு 3 மாசம் வரை வெயிட்.. வைரமுத்து பற்றி ஏ.ஆர்.ரஹ்மான்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஃபுல் தண்ணியா இருப்பாங்க.. வேட்டியெல்லாம் அவிழும்.. ஒரு பாடலுக்கு 3 மாசம் வரை வெயிட்.. வைரமுத்து பற்றி ஏ.ஆர்.ரஹ்மான்

ஃபுல் தண்ணியா இருப்பாங்க.. வேட்டியெல்லாம் அவிழும்.. ஒரு பாடலுக்கு 3 மாசம் வரை வெயிட்.. வைரமுத்து பற்றி ஏ.ஆர்.ரஹ்மான்

Marimuthu M HT Tamil
Jan 10, 2025 09:44 AM IST

ஃபுல் தண்ணியா இருப்பாங்க.. வேட்டியெல்லாம் அவிழும்.. ஒரு பாடலுக்கு 3 மாசம் வரை வெயிட்.. வைரமுத்து பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டியளித்துள்ளார்!

ஃபுல் தண்ணியா இருப்பாங்க.. வேட்டியெல்லாம் அவிழும்.. ஒரு பாடலுக்கு 3 மாசம் வரை வெயிட்.. வைரமுத்து பற்றி ஏ.ஆர்.ரஹ்மான்
ஃபுல் தண்ணியா இருப்பாங்க.. வேட்டியெல்லாம் அவிழும்.. ஒரு பாடலுக்கு 3 மாசம் வரை வெயிட்.. வைரமுத்து பற்றி ஏ.ஆர்.ரஹ்மான்

இதுதொடர்பாக பிஹைண்ட்வுட்ஸ் டிவி யூட்யூப் சேனலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பேட்டியின் தொகுப்பு.

‘’மேற்கத்திய இசையுடன் மிருதங்கம், தவில், நாதஸ்வரத்தை இணைத்தது எப்படி?

நாதஸ்வரம் தெருவில் வாசித்தால் கூட இதமாக இருக்கும். அதெல்லாம் உள்ளே கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்தோம். சில இடங்களில் திட்டமிட்டு உள்ளே கொண்டு வந்திருப்போம். சில இடங்களில் அதுவாகவே வந்து உட்காரும்.

உங்களது வருகையை பல இசையமைப்பாளர்களுடன் ஒப்பிடுவார்கள். ஆரம்பகட்டத்தில் இந்த ஒப்பீடு எவ்வளவு சவாலாக இருக்கிறது?

மணிரத்னம் என்ற நபர் கிடைச்சதும் முடிஞ்சது கதை. அவருடைய பெரிய ஃபேன். அவருடைய வழிகாட்டுதல் கிடைச்சது எனக்கு ரொம்பப் பெரிசு. அதன்பின், தமிழுக்கு வைரமுத்து சார்.

வைரமுத்துவின் வரிகள் எல்லாம் உங்கள் இசையில் அப்படியே உட்கார்ந்ததுபோல் இருக்கும்? அது எப்படி?

மெனக்கெட்டிருக்கிறோம். சில பாடல்களுக்கு மூன்று மாசம் கூட ஆகியிருக்கு. பாவம். அவர் எழுதி எழுதி எழுதி கொடுப்பார். ரெக்கார்டு பண்ணிருவோம். இன்னும் பெட்டராக இருக்கலாம். இன்னும் பெட்டராக இருக்கலாம்னு மாத்துவோம். எனக்கே சிலநேரம் அவரை டார்ச்சர் பண்றோமேன்னு இருக்கும். பாரதிராஜா சாருக்கு பண்ணும்போது ஒரு பாட்டிலேயே ஓ.கே.ஆகிடும். ஊர்வசி ஊர்வசி முதல் வரி வருவதற்கு மூன்று மாதம் ஆச்சு.

அமைதி என்பது மிகப்பெரிய ஆயுதம். பத்து தல படத்தில் சில இடங்களில் அமைதியாக விட்டுவிட்டு அடுத்து ஒரு ஹைப் கொடுத்திருப்பீங்க?

அது நமக்கே தெரியும். காதல் எனும் தேர்வு எழுதி பாட்டில் மூச்சுவிடாமல் பாடினால் தான் சரியாக இருக்கும். மூச்சுவிட்டு பாடினால், அந்த சாரம் வராது. எஸ்.பி.பி சார் ஒரு கச்சேரியில் பேசிட்டு பாடும்போது அதைவிட்டுட்டார். அவர் தான் அந்தப் பாட்டை சினிமாவில் பாடியவர்.

மூச்சு விடுறது என்பது கமா போடுறது மாதிரி. மேடையில் ஒருவர் பேசிட்டு இருக்கும்போது விடாமல் பேசிட்டு இருந்தால் போயான்னு சொல்லிடுவாங்க. இரண்டு வார்த்தைப் பேசி நிறுத்திட்டு, அடுத்து பேசும்போது நிறையபேர் ரசிப்பாங்க. அது மேஜிக்காக இருக்கு இல்லையா.

உங்கள் சீனியர்ஸிடம் இசை தொடர்பாக நீங்கள் கற்றுக்கொண்டு, இதை எப்போதுமே வைத்திருக்கவேண்டும் என நினைப்பது என்ன?

எம்.எஸ்.வி அவர்களிடம் தமிழை எடுத்து குழைத்து வெண்ணெய், தேன், தங்கம் அப்படியெல்லாம் போட்டு கொடுத்து பாடச்சொல்வார். டி.ராஜேந்தரை எடுத்துக்கிட்டால் அவர் இசையைக் கத்துக்கவில்லை. ஆனால், மனதில் இருந்து டியூன் போடுவார். ராஜா சார்கிட்ட மெயினா நான் கத்துக்கிட்டது. அந்தக் காலத்தில் எல்லாரும் மது குடிப்பாங்க. ரெக்கார்டிங் முடிச்சதும் ஃபுல் தண்ணியாக இருக்கும். வேட்டியெல்லாம் அவிழும். அப்படிப்பட்ட காலத்தில் கலையை மதிக்கணும்னு ரொம்ப கண்ணியமாக இருக்கணும்னு கொண்டுவந்தார், இளையராஜா சார். இசையைத் தாண்டி அவரிடம் அதுதான் கத்துக்கிட்டேன்.

அடுத்த ஜெனரேஷன் இசையமைப்பாளர்கிட்ட கத்துக்கிட்டது என்ன?

சோசியல் மீடியாவில் அவங்க எப்படி இருக்காங்க. இதுதான் வேண்டும்னு தெளிவாக இருப்பாங்க. பிரசாந்த் நீல் சொல்றார். பணத்துக்காக நான் ஏன் படம் எடுக்கணும் சொல்றார். அது தவறு கிடையாது. இங்கு எந்த ஃபார்முலாவும் இல்லை. நாம் யோசிக்கிற மாதிரி இன்னொருத்தர் யோசிக்கணும்னு இல்லை.

நன்றி: பிஹைண்ட்வுட்ஸ் டிவி

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.