AR Rahman: பரம்பொருள் பட புரொமோ பாடல்! யுவன் ஷங்கர் ராஜா - அனிருத்துடன் கைகோர்த்த இசைப்புயல் ஏர்ஆர் ரஹ்மான்
யுவன் ஷங்கர் ராஜா - அனிருத் முதல் முறையாக இணைந்து தோன்றும் புரொமோ பாடலை இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.
முதல் முறையாக தமிழ் பாடல் ஒன்றுக்காக லிட்டில் மேஸ்ட்ரோ இளையராஜா - ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோர் இணைந்துள்ளனர். கோலிவுட் சினிமாவின் சிறந்த இசையமைப்பாளர்களான இவர்கள் சரத்குமார் நடிக்கும் பரம்பொருள் என்ற படத்தில் இடம்பெறும் அடியாத்தி என்ற புரொமா பாடலில் ஒன்றாக பாடி, அதன் விடியோவிலும் தோன்றியுள்ளனர்.
பெப்பியான பாடலான இதை பாடலாசிரியர் சிநேகன் எழுதியுள்ளார். இதன் புரொமோ விடியோ வெளியாகி வைரலாகியிருக்கும் முழு பாடலை இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் வெளியிட்டுள்ளார். இதுவே முதல் முறையாக யுவன் - அனிருத் ஆகியோர் இணைந்து பாடலில் தோன்றியுள்ளனர்.
இதனால் இந்த பாடல் ரசிகர்களுக்கு சிறந்த வைப் மெட்டீரியலாக அமைந்திருப்பதோடு, சமூக வலைத்தளங்களிலும் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
பரம்பொருள் திரைப்படம் கடவுள் சிலை திருட்டு கும்பல் மற்றும் அதன் மாஃபியா கும்பலை பின்னணியாக கொண்ட கதையம்சத்தில் உருவாகியுள்ளது. போலீசாக வரும் சரத்குமார், சிலை திருட்டு கும்பலை சேர்ந்த அமிதாஷுடன் இணைந்து பணத்துக்காக சாமி சிலை திருட்டில் ஈடுபடும் விதமாக படத்தின் கதை அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை அரவிந்த் ராஜ் இயக்கியுள்ளார். கதாநாயகியாக காஷ்மிரா பிரதேஷி நடித்துள்ளார். கவி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்த படம் விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்