‘குடிகார கிட்டாரிஸ்ட் பார்த்த வேல.. விட்டுவர 7 வருஷம் ஆச்சு.. என் மனசு அதையே தேடி தேடி..’ -ஏ.ஆர்.ரஹ்மான்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ‘குடிகார கிட்டாரிஸ்ட் பார்த்த வேல.. விட்டுவர 7 வருஷம் ஆச்சு.. என் மனசு அதையே தேடி தேடி..’ -ஏ.ஆர்.ரஹ்மான்

‘குடிகார கிட்டாரிஸ்ட் பார்த்த வேல.. விட்டுவர 7 வருஷம் ஆச்சு.. என் மனசு அதையே தேடி தேடி..’ -ஏ.ஆர்.ரஹ்மான்

Kalyani Pandiyan S HT Tamil
Dec 27, 2024 10:59 PM IST

ஏ.ஆர்.ரஹ்மான் குடிகார கிட்டாரிஸ்ட் ஒருவர் பேசிய பேச்சுதான் நான் தனித்துவமான இசையை நோக்கி நகர்வதற்கு உந்துதலாக இருந்தது என்று பேசி இருக்கிறார்.

‘குடிகார கிட்டாரிஸ்ட் பார்த்த வேல.. விட்டுவர 7 வருஷம் ஆச்சு.. என் மனசு அதையே தேடி தேடி..’ -ஏ.ஆர்.ரஹ்மான்
‘குடிகார கிட்டாரிஸ்ட் பார்த்த வேல.. விட்டுவர 7 வருஷம் ஆச்சு.. என் மனசு அதையே தேடி தேடி..’ -ஏ.ஆர்.ரஹ்மான்

மணிரத்னம் கொடுத்த வாய்ப்பு

மணிரத்னம் இயக்கிய ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர், தன்னுடைய தனித்துவமான திறமையால், இன்றும் இசைத்துறையில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார். அண்மையில் இவர் ஓடு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்தார்.

அந்த பேட்டியில் குடிகார கிட்டாரிஸ்ட் ஒருவர் பேசிய பேச்சுதான் நான் தனித்துவமான இசையை நோக்கி நகர்வதற்கு உந்துதலாக இருந்தது என்று பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் பேசும் பொழுது,' நான் பல இசையமைப்பாளர்களிடம் வேலை பார்த்து இருக்கிறேன். ஆகையால், அவர்களின் இசையானது எனக்குள் மிகவும் ஆழமாக ஊன்றி போனது. அதனால் என்னுடைய இசையில் இருந்து, அவர்களிடமிருந்து பெற்ற இசையே பெரும்பான்மையான நேரங்களில் வந்து கொண்டிருந்தது.

அவர் கேட்ட கேள்வி

இந்த நிலையில் திடீரென்று ஒரு நாள் என்னுடைய இசைக் குழுவில் இருந்த கிட்டாரிஸ்ட் ஒருவர் நன்றாக குடித்து இருந்தார். அப்போது நான் வாசித்துக் கொண்டிருந்தேன். என்னிடம் வந்த அவர், நீ என்ன வாசிக்கிறாய்... படங்களுக்கான இசையைதானே நீ வாசித்துக் கொண்டிருக்கிறாய் என்றார்.

அந்த மொமெண்டில், என்னால் அவர் சொன்னதை உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை ஆனால், வாரங்கள் செல்லச் செல்ல அவர் உண்மையில் என்ன சொன்னார் என்பதை என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. அவர் சொன்ன அந்த கமெண்ட், என்னை தலைகீழாக போட்டு திருப்பி அடித்தது என்று சொல்லலாம்.

என்னுடைய இசையை

அவர் சொன்னது மிகச் சரியானது என்பதை நான் புரிந்து கொண்டேன். நான் பல இசையமைப்பாளர்களிடம் வேலை செய்து, அவர்கள் இசையமைக்கும் இசையின் மூலமாக அதிகமாக இன்ஸ்பையர் செய்யப்பட்டிருக்கிறேன் என்பது எனக்கு புரிந்தது.

அந்த புரிந்த மொமென்டில் இருந்து நான் எனக்கான இசையை தேடி அலைய ஆரம்பித்தேன். என்னுடைய மனது எது என்னுடைய இசை என்பதை தேடி அலைந்தது. அந்த செயல்முறையில், பிற கலைஞர்களிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட இசையின் தாக்கத்தை கைவிட்டு என்னுடைய இசையை கண்டுபிடிப்பதற்கு கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் ஆகிவிட்டது' என்று பேசினார். 

ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி அண்மையில் அவரை பிரிவதாக அறிக்கை வெளியிட்டார். இதனையடுத்து ரஹ்மானை பலரும், பலவிதமாக பேசினர். இந்த நிலையில், அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் அவரது மனைவி ஆடியோ ஒன்றை வெளியிட்டார்

அதில் அவர், ‘ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு அற்புதமான மனிதர் எனவும், அவரை யாருடனும் தொடர்புபடுத்தி பேசாதீர்கள் என்றும் சாய்ரா பானு மிக உருக்கமாக வாய்ஸ் மெசேஜ் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சாய்ரா பானு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’எல்லோருக்கும் எனது நண்பகல் வணக்கம். இங்கே பேசுறது சாய்ரா பானு. நான் இப்போது மும்பையில் இருக்கிறேன். கடந்த இரண்டு மாதங்களாக உடல்நலமின்மையால், சந்தோஷமாக இல்லை. அதனால் தான் நான் ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து பிரிகிறேன்.

நான் ஒட்டுமொத்த யூடியூபர்களுக்கும் தமிழ் ஊடகத்தினருக்கும் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், அவரைப் பற்றி தவறாக செய்திபோடாதீர்கள். மனிதர்களில் அவர் ஒரு ரத்தினம். உலகத்திலேயே சிறந்த மனிதர். ஆம். எனது உடல்நிலைப் பிரச்னைகளால் நான் மும்பையில் சிகிச்சைப் பெற்று வருகின்றேன். ஏ.ஆர்.ரஹ்மானை அந்தளவுக்கு விரும்புகிறேன்: சாய்ரா பானு ஏ.ஆர். ரஹ்மான் சென்னையில் அவரது பணிகளில் பிஸியாக இருக்கிறார்.

அதனால் யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை. எனக்கு நிறைய கவனிப்பு வேண்டும். ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு அற்புதமான மனிதர். அவரை யாருடனும் தொடர்புபடுத்தி பேசாதீர்கள். அவரை நான் வாழ்நாள் முழுவதும் நம்புவேன். அந்தளவுக்கு நான் அவரை விரும்புகிறேன்.

அவரும் என்னை விரும்பினார். அவர் மீதான பொய்யான குற்றச்சாட்டுகள் எல்லாத்தையும் நிறுத்தவேண்டும் எனத் தாழ்மையுடன் வேண்டுகிறேன். கடவுள் ஆசீர்வதிக்கட்டும். அவரை தனிமையில் விட்டு வந்தபின், அவருக்குண்டான இடத்தைக்கொடுக்க கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.

இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் நாங்கள் அறிவிக்கவில்லை. நான் விரைவில் சென்னை வருவேன். என்னுடைய சிகிச்சைகளை முடித்தபின் நான் சென்னைக்கு வருவேன். எனவே, ஏ.ஆர். ரஹ்மான் பற்றி அவதூறு பேசுவதை தயவுசெய்து நிறுத்துங்கள். அப்படி செய்வது ஒரு குப்பைத்தனம். அவர் ஒரு வைரம் போன்ற மனிதர்'' என சாய்ரா பானு உருக்கமாகப் பேசியி

 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.