Prabhu Deva AR Rahman: ‘ரஹ்மான் ஸ்டார்ட் மியூசிக்’; மீண்டும் வரும் முக்காலா முக்காபுலா கூட்டணி;பட தலைப்பு என்ன தெரியுமா?
PrabhuDeva AR Rahman: Behindwoods நிறுவனம் இந்தப்படத்திற்கு #ARRPD6 என்ற தற்காலிகமாக பெயர் வைத்து படப்பிடிப்பை துவங்கியது. இப்போது படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை வெளியிட்டு இருக்கிறது - தலைப்பு என்ன தெரியுமா?

Prabhu Deva AR Rahman: Behindwoods தயாரிப்பில், AR ரஹ்மான், பிரபு தேவா இணையும் திரைப்படத்திற்கான தலைப்பு குறித்தான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தலைப்பு என்ன?
இந்தியத் திரையுலகில் பல சாதனைகளை நிகழ்த்திய வரலாற்று ஆளுமைகளான AR ரஹ்மானும், பிரபு தேவாவும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படத்தை, பிரபல யூடியூப் சேனலான Behindwoods நிறுவனம் தயாரித்து வருகிறது. இதுவே Behindwoods நிறுவனத்தின் முதல் படைப்பாகும்.
முன்னதாக, Behindwoods நிறுவனம் இந்தப்படத்திற்கு #ARRPD6 என்ற தற்காலிகமாக பெயர் வைத்து படப்பிடிப்பை துவங்கியது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்குமென ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. இந்த நிலையில் இந்தப்படத்திற்கு ‘மூன் வாக்’ என பெயர் வைத்திருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் கூட்டணி
இந்தப்படத்தின் வாயிலாக 25 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களால் இசைப்புயல் என்று அழைக்கப்படும் AR ரஹ்மானும், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபு தேவாவும் இணைகிறார்கள். ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகும் இப்படத்தில், நடிகர்கள் பிரபு தேவா, யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா மற்றும் சுஷ்மிதா ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடிக்கிறார்கள்.இசைப்புயல் AR ரஹ்மானின் இசையமைக்கிறார்.
இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் இப்படம் மிகவும் சிறப்பாக உருவாகி வருதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், அனைத்து பொழுது போக்கு அம்சங்களுடன், நகைச்சுவை கலந்த அட்டகாசமான ஃபேமிலி எண்டர்டெயினராக இப்படம் இருக்கும் என்றும் கூறும் படக்குழு, இப்படத்தை அடுத்த ஆண்டு 2025-ல் பான்-இந்திய படமாகத் திரைக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருக்கின்றனராம்.
Behindwoods வழங்கும் இந்தத் திரைப்படத்தை, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலருமான (CEO) மனோஜ் NS இயக்கி வருகிறார்.மனோஜ் NS, திவ்யா மனோஜ் மற்றும் பிரவீன் இலக் தயாரித்து வருகின்றனர். அனூப் VS ஒளிப்பதிவிற்கும், ஷானு முரளிதரன் தயாரிப்பு வடிவமைப்பிற்கும், ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா எடிட்டிங்கிற்கும் பொறுப்பு ஏற்று உள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி
முன்னதாக, இப்படத்தில் பங்காற்றுவது குறித்து பேசிய இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், "சில நல்ல யோசனை நம் மனதுக்கு வரும், அதை இப்போது செய்யலாம், பிறகு செய்யலாம் என வருடங்கள் ஓடிவிடும், இந்த திரைப்படம் அதை மீண்டும் கண்டுபிடித்து என் கவனத்தை ஈர்த்தது” என்று பேசினார்.
நடனப்புயல் பிரபு தேவா கூறியபோது, "நடன இயக்குனர்களை ஊக்கப்படுத்திய ரஹ்மானுடன் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
மனோஜ் NS கூறுகையில், "இந்தத் திரைப்படம் இந்தியாவின் இரண்டு மாபெரும் கலைஞர்களான ஏ.ஆர் ரஹ்மான், பிரபு தேவா இருவரையும் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
காமெடி நடிப்பில் உச்சம் தோட்ட யோகி பாபு ஒரு வித்யாசமான, மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மலையாள சினிமாவில் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள அஜ்ஜு வர்கீஸ் மற்றும் அர்ஜுன் அசோகன் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்." என்றார்.
இது குறித்து Behindwoods நிறுவனம் கூறும் போது, “ இந்திய திரையிசை மற்றும் நடனத்துறையில் பேராற்றல் மிக்கவர்களான இருபெரும் ஜாம்பவான்களின் கூட்டணி ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு பிறகு இந்த திரைப்படம் மூலம் மீண்டும் இணைத்துள்ளோம். இசை, நடனம், பாடல்கள், நகைச்சுவை என முற்றிலும் பொமுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக இருக்கும் படம் வெகுஜன மக்களை நிச்சயம் ஈர்க்கும்.
இத்திரைப்படத்தில் ரத்தமோ, வன்முறையோ, முகம் சுழிக்க வைக்கும் காட்சிகளோ எந்த வடிவத்திலும் இருக்காது. இந்திய சினிமா வரலாற்றில் இது ஒரு மிக முக்கிய திரைப்படமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்