AR Rahman: 5 வருடத்திற்கு ஒரு முறை.. கட்டாயம் உடைக்க வேண்டிய கட்டுமரம் என்ன? - ஏ.ஆர்.ரஹ்மான் லைஃப் சீக்ரெட் இங்கே!
என்னுடைய ட்ரைவர்தான் என்னுடய நண்பர். அவர் பெயர் ராஜ். உண்மையில் என்னுடன் வேலை பார்ப்பவர்கள்தான் என்னுடைய நண்பர்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடன் உடன் வேலைபார்ப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து பேசி இருக்கிறார்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அறிமுகம் தேவையில்லை. இவர் தன்னுடைய 57 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இந்த சமயத்தில் சூரியன் எஃப்.எம் சேனலுக்கு கடந்த 4 மாதங்களுக்கு அவர் கொடுத்த பேட்டியில், தன்னுடைய நண்பர் யார், வாழ்க்கை பற்றி அவருடைய பார்வை குறித்து பேசி இருந்தார். அந்த பேட்டி இங்கே!
அவர் பேசும் போது, “என்னுடைய ட்ரைவர்தான் என்னுடய நண்பர். அவர் பெயர் ராஜ். உண்மையில் என்னுடன் வேலை பார்ப்பவர்கள்தான் என்னுடைய நண்பர்கள். என்னுடன் வேலை பார்ப்பவர்களை பார்த்து, நீங்கள் எவ்வளவு நாட்கள் இங்கேயே சுற்றிக்கொண்டிருக்கப் போகிறீர்கள் என்று நான் கேட்பதுண்டு.
ஆம், 5 வருடங்களுக்கு ஒருமுறை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அடுத்தடுத்த கட்டத்தை அடைந்திருக்க வேண்டும். எனக்கு எல்லோருமே முன்னுக்கு வரவேண்டும் என்பதே ஆசை. என்னுடன் வேலைபார்ப்பவர்கள் யாராவது மிகவும் ஈஸியாக,முன்னேறாமல் கம்ஃபர்ட் சோனில் வாழ்ந்து கொண்டிருந்தால், அவர்களை பார்த்து உன்னை கட் செய்யப்போகிறேன் என்று மிரட்டுவேன்” என்று பேசினார்.
யார் இந்த ஏ.ஆர்.ரஹ்மான்?
பிறப்பு.
மலையாள இசை அமைப்பாளர் ஆர்.கே.சேகர் மற்றும் கஸ்தூரி தம்பதியருக்கு மகனாக 1967 ஜனவரி 6 ல் சென்னையில் பிறந்தவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். தனது பதினோராம் வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்ட் வாசிக்க ஆரம்பித்தார்.
எம்.எஸ். விஸ்வநாதன், குன்னக்குடி வைத்தியநாதனிடமும் பணி புரிந்தார். மேற்கத்திய இசையை மாஸ்டர் தன்ராஜிடம் கற்றார். நிறைய விளம்பர படங்களுக்கு இசை அமைத்தார்.1992 ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த "ரோஜா" திரைப்படம் இவரின் இசையில் முதல் படமாக வெளியானது. முதல் படத்திலேயே முந்தைய காலகட்டத்தின் இசையை போல இல்லாமல் புது மாதிரியாக ரசிகர்களை உணர வைத்தார். ரோஜா வின் பாடல்களும் பின்னனி இசை கோர்ப்பும் ரசிகர்களை புதிதாக கொண்டாட வைத்தது. எல்லோரது கவனமும் இவர் மேல் விழுந்தது.
ரோஜாவில் ஆரம்பித்த பயணம் புயல் வேகமாக இந்திய எல்லைகளை கடந்து உலகெங்கும் பரவியது. இசைக்கு ஏது மொழி என்பது போல தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று தனது எல்லையை விரித்தார்.
விருதுகள்:
இவர் பெற்ற விருதுகளை பட்டியல் போட பல பக்கங்கள் தேவை. பலமுறை பிலிம்பேர் விருதுகள், பல மாநில அரசு விருதுகள், பல முறை தேசிய விருதுகளை இவரின் கைகள் சுமந்தன. "ஸ்லம் டாக் மில்லியனர்" என்ற ஆங்கில படத்தில் இசை அமைத்ததற்காக கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருதுகளை பெற்ற முதல் இந்தியர் ஆவார். இதே படம் ஆஸ்கார் விருதையும் பெற்று தந்தது. உலகின் எந்த விழா மேடையிலும் "எல்லா புகழும் இறைவனுக்கே" என்ற வார்த்தைகளை சொல்லி விட்டு தான் பேச ஆரம்பிப்பார்.
கிராமிய இசை முதல் மேற்கத்திய இசை வரை தனது இசையால் தனித்து தெரிபவர். இசையில் புதுமையை கொண்டு வந்தவர். திரைப்படம் மட்டும் இன்றி தனிப் பாடல்களை ஆல்பமாக வெளியிடுவதும் இசைக்கச்சேரிகள் நடத்தவும் செய்கிறார்.
இவரது மனைவி பெயர் ஷெரீணாபீவி. மூன்று குழந்தைகள் உள்ளனர். இவரின் சகோதரி ரைஹானா அவர்களின் மகன் தான் இசை அமைப்பாளரான ஜீ.வி. பிரகாஷ்.
டாபிக்ஸ்