இசைப்புயலை வாட்டும் மன உளைச்சல்.. இனி சினிமாவிற்கு பிரேக்.. அதிரடி முடிவெடுத்தாரா ஏ.ஆர். ரஹ்மான்?
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கடும் மன உளைச்சலில் இருப்பதால் அவர் இனி சினிமாவில் இருந்து சில காலம் ஓய்வெடுக்க உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில், அவரது மகள் கதீஜா மிகக் காட்டமாக பதிலளித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிய உள்ளதாக அவரது மனைவி சாய்ரா பானு, வழக்கறிஞர் மூலமாக அறிவித்தார். இது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி பலரும் அடுத்தடுத்த வதந்திகளைப் பரப்பத் தொடங்கினர்.
ஏ.ஆர்.ரஹ்மானை சுற்றும் வதந்திகள்
ஏ.ஆர்.ரஹ்மான வேலை வேலை என இருந்ததால் அவர் குடும்பத்தை கவனிக்க தவறி விட்டார். அவர், மனைவியுடன் நேரம் செலவிடுவது குறைந்துவிட்டது.
மகளுக்கு திருமணம் முடித்து வைத்ததால் தன் கடமை முடிந்ததாக இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் பேஸிஸ்ட் மோகினி டே உடன் உறவில் இருக்கிறார் என எண்ணற்ற வதந்திகள் உலா வரத் தொடங்கின.
முற்றுப்புள்ளி வைத்த மனைவி
இதை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத அவரது மனைவி சாய்ரா, யாரும் என் கணவரைப் பற்றி தவறாக பேச வேண்டாம். அவர் இந்த உலகத்திலேயே தூய்மையான நபர். நான் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால் தான் இந்த முடிவை எடுத்தேன்.
சிகிச்சை முடித்து வீடு திரும்பிய உடன் உங்களிடம் நான் இதுகுறித்து பேசுவேன் என தன் கணவர் மேல் சுமத்தப்படும் அவதூறுகளைத் தாங்க முடியாமல் விளக்கமளித்தார்.
இந்நிலையில், அவர் தற்போது தான் பொது இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நிலையில், மீண்டும் சிலர் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து அவதூறு கருத்துகளை பரப்பத் தொடங்கி உள்ளனர்.
சினிமாவில் இருந்து ஓய்வு
ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி விவாகரத்து அறிவித்த வருத்தத்தில் இருந்து மீள முடியாமல் இருக்கிறார். அவரால் படங்களுக்கு இசை அமைப்பதில் கவனம் செலுத்த முடியவில்லை. அதனால், சினிமாவில் இருந்து அவர் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார். இவரது இசையை கேட்காமல் நாம் அனைவரும் வருத்தத்தில் உள்ளோம் என்ற தகவல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
காட்டமாக பேசிய மகள்
இதைக் கண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா மிகவும் கோபமடைந்து, இதுபோன்ற போலியான தகவல்களைப் பரப்பிய அமுதபாரதி என்ற நபரை டேக் செய்து உலாவரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதையடுத்து அந்த நபர் அவரது பதிவை டெலிட் செய்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் இதுகுறித்த கஜிதாவின் பதிவில், யாருக்கும் பயனற்ற இதுபோன்ற வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் என கோவமாக கூறியுள்ளார்.
மக்கள் விரும்பும் கலைஞன்
இதுபோன்ற வதந்திகள் உலாவரும் இந்த சமயத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கைவசம் 10க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளது. அதுமட்டுமின்றி, இவரது இசையை 184 நாடுகளில் இருந்து ஸ்பாட்டிஃபை தளத்தில் மில்லியன் கணக்காணோர் கேட்டு ரசித்து வருவதாகவும், இந்திய அளவில் மக்களால் அதிகம் விரும்பப்பட்ட இசையமைப்பாளர்களில் 2024ம் வருடம் ஏ.ஆர்.ரஹ்மான் 3ம் இடத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
