Anirudh: "எப்பவுமே தலைவன் தான்.. நான் அவரு தொண்டன் தான்" விரைவில் ரசிகர்களுக்கு ட்ரீட் - அனிருத் பேச்சு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Anirudh: "எப்பவுமே தலைவன் தான்.. நான் அவரு தொண்டன் தான்" விரைவில் ரசிகர்களுக்கு ட்ரீட் - அனிருத் பேச்சு

Anirudh: "எப்பவுமே தலைவன் தான்.. நான் அவரு தொண்டன் தான்" விரைவில் ரசிகர்களுக்கு ட்ரீட் - அனிருத் பேச்சு

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 09, 2025 05:59 PM IST

Anirudh on AR Rahman: தளபதி விஜய்யின் லியோ ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் விரைவில் வெளிவரும் என ரசிகர்களுக்கு ட்ரீட் தரும் தகவலை அனிருத் பகிர்ந்துள்ளார். அத்துடன் ஏ.ஆர்.ரஹ்மான் தான் எப்போதும் தனது தலைவன் என்றும் கூறியுள்ளார்.

"எப்பவுமே தலைவன் தான்.. நான் அவரு தொண்டன் தான்" விரைவில் ரசிகர்களுக்கு ட்ரீட் - அனிருத் பேச்சு
"எப்பவுமே தலைவன் தான்.. நான் அவரு தொண்டன் தான்" விரைவில் ரசிகர்களுக்கு ட்ரீட் - அனிருத் பேச்சு

தலைவன் தலைவன் தான், தொண்டன் தொண்டன் தான்

நிகழ்ச்சியில் அனிருத் பேசும்போது, “சோஷியல் மீடியாக்களில், ஆன்லைனில் எல்லோரும் சொல்வார்கள் அடுத்து இவர்தான் என்பார்கள். ஆனால் நான் முன்னாடியே சொன்னது தான். தலைவன் தலைவன் தான், தொண்டன் தொண்டன் தான், லவ் யூ சார்” என ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்தி பேசியுள்ளார். அனிருத் பேசிய விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தனி மனது வேண்டும்

இதற்கு பதில் அளித்து பேசிய ஏ.ஆர். ரஹ்மான், "அப்போது மொத்தம் 10 இசையமைப்பாளர்கள் இருப்பார்கள், தற்போது 10 ஆயிரம் இசையமைப்பாளர்கள் உள்ளனர். அதற்கு இடையில் நிலைத்து நிற்கிறார். 

திறமை இல்லாமல் அது முடியாது. அதையெல்லாம் செய்துவிட்டு இங்கே வந்து மிக பணிவாக தலைவன் தலைவன் தான், தொண்டன் தொண்டன் தான் என்று கூறுகிறார். அதற்கு தனி மனது வேண்டும்" என்றார்.

ரசிகர்களுக்கு ட்ரீட் 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அனிருத், "நான் இசையமைப்பாளராகவோ, விருந்தினராகவோ இங்கு வரவில்லை. அனைவரையும் உற்சாகப்படுத்த வந்திருக்கிறேன். விடாமுயற்சி, தளபதி 69 படங்கள் குறித்து அப்டேட்களை அந்தந்த படங்களின் தயாரிப்பாளர்கள் கொடுப்பார்கள்.

லியோ படத்தின் ஒரிஜினல் பின்னணி இசை (OST) குறித்த அப்டேட் விரைவில் வரும்" என்றார். ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்பாக இருந்த லியோ ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் குறித்த அவரது அறிவிப்பு சிறந்த ட்ரீட்டாக அமைந்துள்ளது. 

அனிருத்துக்கு கோரிக்கை 

முன்னதாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பேசும்போது இசையமைப்பாளர் அனிருத்துக்கு கோரிக்கை ஒன்றை வைத்தார். அதில், "அனிருத் தற்போது நன்றாக இசையமைக்கிறார். பல ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார். உங்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் க்ளாசிகல் இசையை படித்துவிட்டு, அதில் நிறைய பாடல்கள் அமைக்க வேண்டும். அதன் மூலம் நிறைய இளம் தலைமுறையினருக்கு அந்த இசை சென்று போய் சேரும்" என்றார்.

காதலிக்க நேரமில்லை படம்

கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் காதலிக்க நேரமில்லை படத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன், யோகி பாபு, வினய் ராய், ஜான் கொக்கேன், லால் உள்பட பலரும் நடித்துள்ளார்கள். 

"இது ரொமான்ஸ் கதைதான். இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படம் இது. காதலில் இருக்கும் எமோஷன், புரிந்து கொள்ளாத தன்மை, சண்டை, பிரேக் அப் எல்லாமே இருக்கும். 

முன்பு, காதலித்தால் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் திருமணம் செய்துகொண்டு வாழ்வார்கள். இன்று அப்படியில்லை. எளிதாக பிரிகிறார்கள். இதுபோன்ற விஷயங்களை இந்தப் படம் பேசும்" என்று படத்தின் இயக்குநர் கிருத்திக உதயநிதி படம் குறித்து கூறியுள்ளார். 

சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்றிருக்கும் காதலிக்க நேரமில்லை திரைப்படம் 2 மணி நேரம் 22 நிமிடங்கள் ஓடக்கூடியதாக உள்ளது.  

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.