ARmurugadoss: ‘ தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு’ கேப்டனை கவிழ்த்த முருகதாஸ் மூளை! - ரமணா உருவான கதை!
ஆனால் ரமணா கதையை நான் சொல்லும் முன்னர், கதையை பற்றி எதுவும் வாய்திறக்கவில்லை. நான் கதையை அவரிடம் விவரித்துக் கொண்டு இருந்தேன்.
கடந்த 2002ம் ஆண்டு விஜய்காந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ரமணா. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில், பிஹைண்ட் வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த பேட்டியில் பேசி இருக்கிறார்
விஜய்காந்த் சாரை பொறுத்தவரை அவர் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க வெண்டும் என்றால், அவர் ஏற்றும் நடிக்கும் கதாபாத்திரம், குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்க கூடாது, சிகரெட் பிடிக்க கூடாது, மது அருந்த கூடாது, கிளைமாக்ஸ் -ல் அந்த கதாபாத்திரம் சாகக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் உண்டு; ஆனால், ரமணா கதையில் எல்லாமே தலைகீழாக இருந்தது.
ஆனால் ரமணா கதையை நான் சொல்லும் முன்னர், அவரிடம் இது குறித்து நான் வாய் திறக்கவே இல்லை. அவரை சென்று சந்தித்து, கதையை விவரித்தேன். கதையை சொல்லிக்கொண்டே இருந்தேன் என்ன குழந்தைகளுக்கு அப்பாவா? என்றார், ஃப்ளாஷ்பேக்கையும் சொன்னேன் அதிலும் குழந்தைகள் இடம் பெற்றதை தொடர்ந்து இதிலுமா? என்று சொன்னார்.
படத்தில், அந்த கிளைமாக்ஸ் -ல் அவர் இறப்பது போன்ற காட்சி இருக்கும். அதை மட்டும் மாற்ற முடியுமா என்று விஜயகாந்தின் மனைவியான பிரேமலதா கேட்டார். ஆனால் விஜயகாந்த் இந்த கதைக்கு இதுதான் சரியான கிளைமாக்ஸ் என்று சொல்லிவிட்டார்” என்று பேசினார்
டாபிக்ஸ்